Skip to main content

يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ
தூதரே
لَا يَحْزُنكَ
உமக்குக் கவலையூட்ட வேண்டாம்
ٱلَّذِينَ
எவர்கள்
يُسَٰرِعُونَ
தீவிரம்காட்டுகிறார்கள்
فِى ٱلْكُفْرِ
நிராகரிப்பில்
مِنَ
இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
قَالُوٓا۟
கூறினார்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
بِأَفْوَٰهِهِمْ
தங்கள் வாய்களால்
وَلَمْ تُؤْمِن
இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை
قُلُوبُهُمْۛ
அவர்களுடைய உள்ளங்கள்
وَمِنَ
இன்னும் இருந்து
ٱلَّذِينَ
எவர்கள்
هَادُوا۟ۛ
யூதராகி விட்டார்கள்
سَمَّٰعُونَ
அதிகம் செவிமடுக்கிறார்கள்
لِلْكَذِبِ
பொய்யை
سَمَّٰعُونَ
அதிகம் செவிமடுக்கிறார்கள்
لِقَوْمٍ
கூட்டத்திற்காக
ءَاخَرِينَ
மற்றெறாரு
لَمْ يَأْتُوكَۖ
அவர்கள் வரவில்லை /உம்மிடம்
يُحَرِّفُونَ
மாற்றுகின்றனர்
ٱلْكَلِمَ
வசனங்களை
مِنۢ بَعْدِ
இருந்து
مَوَاضِعِهِۦۖ
அவற்றின் இடங்கள்
يَقُولُونَ
கூறுகின்றனர்
إِنْ أُوتِيتُمْ
நீங்கள் கொடுக்கப்பட்டால்
هَٰذَا
இதை
فَخُذُوهُ
அதை எடுங்கள்
وَإِن لَّمْ
நீங்கள் கொடுக்கப்படவில்லையெனில்/அதை
فَٱحْذَرُوا۟ۚ
எச்சரிக்கையாக இருங்கள்
وَمَن
எவர்
يُرِدِ
நாடினான்
ٱللَّهُ
அல்லாஹ்
فِتْنَتَهُۥ
சோதிக்க/அவரை
فَلَن تَمْلِكَ
உரிமை பெறமாட்டீர்
لَهُۥ
அவருக்காக
مِنَ
விடம்
ٱللَّهِ
அல்லாஹ்
شَيْـًٔاۚ
எதையும்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
لَمْ يُرِدِ
நாடவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يُطَهِّرَ
அவன்பரிசுத்தமாக்க
قُلُوبَهُمْۚ
உள்ளங்களை/அவர்களுடைய
لَهُمْ
அவர்களுக்கு
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
خِزْىٌۖ
இழிவு
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
عَذَابٌ
வேதனை
عَظِيمٌ
பெரிய

Yaaa ayyuhar Rasoolu laa yahzukal lazeena yusaa ri'oona fil kufri minal lazeena qaaloo aamannaa bi afwaahihim wa lam tu'min quloobuhum; wa minal lazeena haadoo sammaa'oona lilkazibi sammaa'oona liqawmin aakhareena lam yaatooka yuharifoonal kalima mim ba'di mawaadi'ihee yaqooloona in ooteetum haazaa fakhuzoohu wa il lam tu'tawhu fahzaroo; wa many-yuridil laahu fitnatahoo falan tamlika lahoo minal laahi shai'aa; ulaaa 'ikal lazeena lam yuridil laahu any-yutahhira quloobahum; lahum fid dunyaa khizyunw wa lahum fil Aakhirati'azaabun 'azeem

(நம்முடைய) தூதரே! சிலர் நிராகரிப்பின் பக்கம் விரைந்தோடுவது உங்களுக்குக் கவலையைத் தரவேண்டாம். ஏனென்றால், அவர்கள் தங்கள் வாயினால் மட்டும் "நம்பிக்கை கொண்டோம்" என்று கூறினார்களே தவிர, அவர்களுடைய உள்ளங்கள் (அதனை) ஒப்புக் கொள்ளவில்லை. (அவ்வாறே) யூதர் (களிலும் சிலருண்டு. அவர்)கள் பொய்(யான விஷயங்)களையே (ஆவலோடு) அதிகமாகக் கேட்கின்றனர். அன்றி, (இதுவரையில்) உங்களிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்(கு இவைகளை அறிவிப்பதற்)காகவும், (விஷமத்தனமான வார்த்தைகளையே) அதிகமாகக் கேட்கின்றனர். அவர்கள் (வேத) வசனங்களை அவற்றின் (உண்மை) அர்த்தத்திலிருந்து புரட்டி (இவர்களை நோக்கி) "உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இன்ன கட்டளைக் கிடைத்தால் அதனை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்கா விட்டால் (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்" என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் எவரையும் கஷ்டத்திற்குள்ளாக்க விரும்பினால் அல்லாஹ்வைத் தடைசெய்ய உங்களால் ஒரு சிறிதும் முடியாது. இத்தகையவர்களின் உள்ளங்களைப் பரிசுத்தமாக்கி வைக்க அல்லாஹ் விரும்பவேயில்லை. இவர்களுக்கு, இம்மையில் இழிவும் மறுமையில் மகத்தான வேதனையும் உண்டு.

Tafseer

سَمَّٰعُونَ
அதிகம் செவிமடுக்கிறார்கள்
لِلْكَذِبِ
பொய்யை
أَكَّٰلُونَ
அதிகம் விழுங்குகிறார்கள்
لِلسُّحْتِۚ
ஆகாத செல்வத்தை
فَإِن جَآءُوكَ
இவர்கள் வந்தால்/உம்மிடம்
فَٱحْكُم
தீர்ப்பளிப்பீராக
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
أَوْ
அல்லது
أَعْرِضْ
புறக்கணிப்பீராக
عَنْهُمْۖ
அவர்களை
وَإِن تُعْرِضْ
நீர் புறக்கணித்தால்
عَنْهُمْ
அவர்களை
فَلَن يَضُرُّوكَ
அவர்கள் கெடுதி செய்யவே முடியாது/உமக்கு
شَيْـًٔاۖ
கொஞ்சமும்
وَإِنْ حَكَمْتَ
நீர் தீர்ப்பளித்தால்
فَٱحْكُم
தீர்ப்பளிப்பீராக
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
بِٱلْقِسْطِۚ
நீதமாக
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُحِبُّ
நேசிக்கிறான்
ٱلْمُقْسِطِينَ
நீதவான்களை

Sammaa'oona lilkazibi akkaaloona lissuht; fa in jaaa'ooka fahkum bainahum aw a'rid anhum wa in tu'rid 'anhum falany-yadurrooka shai'anw wa in hakamta fahkum bainahum bilqist; innal laaha yuhibbul muqsiteen

இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்கின்றனர் (பொய்யான விஷயங்களையே அதிகம் பின்பற்றுகின்றனர்). ஆகாத பொருள்களையே அதிகமாக விழுங்கிக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்கள் (யாதொரு நியாயத்திற்காக) உங்களிடம் வரும் சமயத்தில் அவர்களுக்கிடையில் நீங்கள் (நியாயப்படி) தீர்ப்பளியுங்கள் அல்லது (தீர்ப்பளிக்காது) அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விட்டாலும், அவர்கள் உங்களுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. அவர்களுக்கு இடையில் நீங்கள் தீர்ப்பளித்தால், நியாயமான தீர்ப்பே அளியுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் நீதவான்களை நேசிக்கின்றான்.

Tafseer

وَكَيْفَ
எவ்வாறு
يُحَكِّمُونَكَ
தீர்ப்பாளராக ஆக்குகிறார்கள்/உம்மை
وَعِندَهُمُ
இருக்க / இடம் அவர்கள்
ٱلتَّوْرَىٰةُ
தவ்றாத்
فِيهَا
அதில்
حُكْمُ
சட்டம்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ثُمَّ
பிறகு
يَتَوَلَّوْنَ
திரும்புகின்றனர்
مِنۢ بَعْدِ
பின்னர்
ذَٰلِكَۚ
அதற்கு
وَمَآ
இல்லை
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
بِٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Wa kaifa yuhakkimoonaka wa 'indahumut Tawraatu feehaa hukmul laahi summa yatawallawna mim ba'di zaalik; wa maaa ulaaa'ika bilmu'mineen

(எனினும் நபியே!) இவர்கள் உங்களை (தங்களுக்குத்) தீர்ப்பு கூறுபவராக எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள்? (ஏனென்றால்,) இவர்களிடத்திலோ தவ்றாத் என்னும் வேதம் இருக்கின்றது. அதில் அல்லாஹ்வுடைய கட்டளையும் இருக்கின்றது. அவ்வாறிருந்தும் அதனை இவர்கள் புறக்கணித்து விட்டனர். ஆகவே (அதனையும்) இவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَنزَلْنَا
இறக்கினோம்
ٱلتَّوْرَىٰةَ
தவ்றாத்தை
فِيهَا
அதிலே
هُدًى
நேர்வழி
وَنُورٌۚ
இன்னும் ஒளி
يَحْكُمُ
தீர்ப்பளிப்பார்(கள்)
بِهَا
அதைக் கொண்டே
ٱلنَّبِيُّونَ
நபிமார்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
أَسْلَمُوا۟
முற்றிலும் பணிந்தனர்
لِلَّذِينَ
எவர்களுக்கு
هَادُوا۟
யூதராகி விட்டனர்
وَٱلرَّبَّٰنِيُّونَ
இன்னும் குருமார்கள்
وَٱلْأَحْبَارُ
இன்னும் பண்டிதர்கள்
بِمَا
எதன் காரணமாக
ٱسْتُحْفِظُوا۟
காக்கும்படி கோரப்பட்டார்கள்
مِن كِتَٰبِ
வேதத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَكَانُوا۟
இன்னும் இருந்தார்கள்
عَلَيْهِ
அதன் மீது
شُهَدَآءَۚ
சாட்சியாளர்களாக
فَلَا تَخْشَوُا۟
ஆகவே அஞ்சாதீர்கள்
ٱلنَّاسَ
மக்களுக்கு
وَٱخْشَوْنِ
எனக்கு அஞ்சுங்கள்
وَلَا تَشْتَرُوا۟
வாங்காதீர்கள்
بِـَٔايَٰتِى
என் வசனங்களுக்குப் பகரமாக
ثَمَنًا
கிரயத்தை
قَلِيلًاۚ
சொற்பமானது
وَمَن
எவர்
لَّمْ يَحْكُم
தீர்ப்பளிக்கவில்லை
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக்கொண்டு
ٱللَّهُ
அல்லாஹ்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்

Innaaa anzalnat Tawraata feehaa hudanw wa noor; yahkumu bihan Nabiyyoonal lazeena aslamoo lillazeena haadoo war rabbaaniyyoona wal ahbaaru bimas tuhfizoo min Kitaabil laahi wa kaanoo 'alaihi shuhadaaa'; falaa takhshawun naasa wakhshawni wa laa tashtaroo bi aayaatee samanan qaleelaa; wa mal lam yahkum bimaaa anzalal laahu fa ulaaa'ika humul kaafiroon

"தவ்றாத்" (என்னும் வேதத்)தையும் நிச்சயமாக நாம்தான் இறக்கி வைத்தோம்.) அதில் நேர்வழியும் இருக்கின்றது; ஒளியும் இருக்கின்றது. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடந்த நபிமார்கள் அதனைக் கொண்டே யூதர்களுக்கு (மார்க்க)க் கட்டளையிட்டு வந்தார்கள். அவர்களுடைய (பண்டிதர்களாகிய) ரிப்பிய்யூன்களும், (குருமார்களாகிய) அஹ்பார்களும், அல்லாஹ் வுடைய வேதத்தைக் காப்பவர்கள் என்ற முறையில் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். அன்றி இவர்கள்) அதற்கு சாட்சிகளாகவும் இருந்தார்கள். (அவ்விதமிருந்தும் யூதர்கள் புறக்கணித்து விட்டனர். நம்பிக்கையாளர்களே!) நீங்கள் மனிதர் களுக்கு அஞ்ச வேண்டாம்; எனக்கே அஞ்சிக் கொள்ளுங்கள். என் வசனங்களை ஒரு சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!

Tafseer

وَكَتَبْنَا
இன்னும் விதித்தோம்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
فِيهَآ
அதில்
أَنَّ
நிச்சயமாக
ٱلنَّفْسَ
உயிர்
بِٱلنَّفْسِ
உயிருக்குப் பதிலாக
وَٱلْعَيْنَ
இன்னும் கண்
بِٱلْعَيْنِ
கண்ணுக்குப் பதிலாக
وَٱلْأَنفَ
இன்னும் மூக்கு
بِٱلْأَنفِ
மூக்குக்குப் பதிலாக
وَٱلْأُذُنَ
இன்னும் காது
بِٱلْأُذُنِ
காதுக்குப் பதிலாக
وَٱلسِّنَّ
இன்னும் பல்
بِٱلسِّنِّ
பல்லுக்குப் பதிலாக
وَٱلْجُرُوحَ
இன்னும் காயங்கள்
قِصَاصٌۚ
பழிவாங்கப்படும்
فَمَن
எவர்
تَصَدَّقَ
மன்னிப்பார்
بِهِۦ
அதை
فَهُوَ
அது
كَفَّارَةٌ
பரிகாரமாகும்
لَّهُۥۚ
அவருக்கு
وَمَن
எவர்கள்
لَّمْ يَحْكُم
தீர்ப்பளிக்கவில்லை
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக்கொண்டு
ٱللَّهُ
அல்லாஹ்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்

Wa katabnaa 'alaihim feehaaa annan nafsa binnafsi wal'aina bil'aini wal anfa bilanfi wal uzuna bil uzuni wassinna bissinni waljurooha qisaas; faman tasaddaqa bihee fahuwa kaffaaratul lah; wa mal lam yahkum bimaaa anzalal laahu fa ulaaa'ika humuz zalimoon

அவர்களுக்காக அ(வர்களுடைய வேதமாகிய தவ்றாத்)தில் நாம் கட்டளையிட்டிருந்தோம்: "உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயத்திற்கும் (காயமாக) நிச்சயமாக பழிவாங்கப்படும்" என்பதாக. எனினும், எவரேனும் பழிவாங்குவதை (மன்னித்து) அறமாக விட்டுவிட்டால் அது அவரு(டைய தீய செயலு)க்குப் பரிகாரமாகிவிடும். எவர்கள், அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக்கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்கள்தான்!

Tafseer

وَقَفَّيْنَا
தொடரச்செய்தோம்
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களுடைய அடிச்சுவடுகளில்
بِعِيسَى
ஈஸாவை
ٱبْنِ
மகன்
مَرْيَمَ
மர்யமுடைய
مُصَدِّقًا
உண்மைப்படுத்துபவராக
لِّمَا
எதை
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்
مِنَ
இருந்து
ٱلتَّوْرَىٰةِۖ
தவ்றாத்
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
ٱلْإِنجِيلَ
இன்ஜீலை
فِيهِ هُدًى
அதில்/நேர்வழி
وَنُورٌ
இன்னும் ஒளி
وَمُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியது
لِّمَا بَيْنَ
எதை/தனக்கு முன்
مِنَ ٱلتَّوْرَىٰةِ
தவ்றாத்திலிருந்து
وَهُدًى
நேர்வழியாக
وَمَوْعِظَةً
இன்னும் ஓர் உபதேசமாக
لِّلْمُتَّقِينَ
அஞ்சுபவர்களுக்கு

Wa qaffainaa 'alaaa aasaaarihim bi 'Eesab ni Maryama musaddiqal limaa baina yadihi minat Tawraati wa aatainaahul Injeela feehi hudanw wa noorunw wa musaddiqal limaa baina yadaihi minat Tawraati wa hudanw wa maw'izatal lilmuttaqeen

(முன்னிருந்த நபிமார்களாகிய) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் அனுப்பி வைத்தோம். அவர் தன் முன்னிருந்த தவ்றாத்தை உண்மையாக்கி வைப்பவராக இருந்தார். அன்றி, அவருக்கு "இன்ஜீல்" என்னும் வேதத்தையும் நாம் அருளினோம். அதிலும் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. அது தன் முன்னுள்ள தவ்றாத்தை உண்மையாக்கி வைக்கின்றது. இறை அச்சமுடையவர்களுக்கு அது ஒரு நல்லுபதேசமாகவும், நேரான வழியாகவும் இருக்கின்றது.

Tafseer

وَلْيَحْكُمْ
தீர்ப்பளிக்கவும்
أَهْلُ ٱلْإِنجِيلِ
இன்ஜீலுடையவர்கள்
بِمَآ
இறக்கியதைக்கொண்டு
أَنزَلَ ٱللَّهُ
அல்லாஹ்
فِيهِۚ
அதில்
وَمَن
எவர்கள்
لَّمْ يَحْكُم
தீர்ப்பளிக்கவில்லை
بِمَآ
எதைக் கொண்டு
أَنزَلَ
இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَأُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்

Walyahkum Ahlul Injeeli bimaaa anzalal laahu feeh; wa mal lam yahkum bimaaa anzalal laahu fa ulaaa'ika humul faasiqoon

ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான்.

Tafseer

وَأَنزَلْنَآ
இன்னும் இறக்கினோம்
إِلَيْكَ
உமக்கு
ٱلْكِتَٰبَ
இவ்வேதத்தை
بِٱلْحَقِّ
உண்மையுடன் கூடிய
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
لِّمَا بَيْنَ
தனக்கு முன்னுள்ளதை
مِنَ
இருந்து
ٱلْكِتَٰبِ
வேதம்
وَمُهَيْمِنًا
இன்னும் பாதுகாக்கக் கூடியதாக
عَلَيْهِۖ
அதை
فَٱحْكُم
ஆகவே தீர்ப்பளிப்பீராக!
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக் கொண்டே
ٱللَّهُۖ
அல்லாஹ்
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதீர்
أَهْوَآءَهُمْ
விருப்பங்களை அவர்களுடைய
عَمَّا
எதைவிட்டு
جَآءَكَ
வந்தது/உமக்கு
مِنَ ٱلْحَقِّۚ
உண்மையிலிருந்து
لِكُلٍّ
ஒவ்வொருவருக்கும்
جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
مِنكُمْ
உங்களில்
شِرْعَةً
ஒரு மார்க்கத்தை
وَمِنْهَاجًاۚ
இன்னும் ஒரு வழியை
وَلَوْ شَآءَ
நாடி இருந்தால்
ٱللَّهُ
அல்லாஹ்
لَجَعَلَكُمْ
உங்களை ஆக்கியிருப்பான்
أُمَّةً
ஒரு சமுதாயமாக
وَٰحِدَةً وَلَٰكِن
ஒரே/எனினும்
لِّيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
فِى مَآ
உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில்
فَٱسْتَبِقُوا۟
ஆகவே முந்துங்கள்
ٱلْخَيْرَٰتِۚ
நன்மைகளில்
إِلَى
பக்கம்
ٱللَّهِ
அல்லாஹ்
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
جَمِيعًا
அனைவரும்
فَيُنَبِّئُكُم
அறிவிப்பான்/உங்களுக்கு
بِمَا
எதை
كُنتُمْ
இருந்தீர்கள்
فِيهِ
அதில்
تَخْتَلِفُونَ
முரண்படுகிறீர்கள்

Wa anzalnaa ilaikal Kitaaba bilhaqqi musaddiqallimaa baina yadaihi minal Kitaabi wa muhaiminan 'alaihi fahkum bainahum bimaa anzalal laahu wa laa tattabi ahwaaa'ahum 'ammaa jaaa'aka minal haqq; likullin ja'alnaa minkum shir'atanw wa minhaajaa; wa law shaaa'al laahu laja'alakum ummatanw waahidatanw wa laakil liyabluwakum fee maa aataakum fastabiqul khairaat; ilal laahi arji'ukum jamee'an fayunab bi'ukum bimaa kuntum feehi takhtalifoon

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாமே உங்கள்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி, அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. ஆகவே (நபியே!) நீங்கள் அல்லாஹ் (உங்களுக்கு) அருளிய இதனைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். உங்களுக்கு வந்த உண்மையைப் புறக்கணித்து விட்டு அவர்களுடைய விருப்பங்களை நீங்கள் பின்பற்றாதீர்கள். உங்களில் ஒவ்வொரு வ(குப்பா)ருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழியையும் நாமே ஏற்படுத்தினோம். அல்லாஹ் விரும்பினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றும்) வகுப்பாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவைகளில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்.) ஆகவே, (இவைகளில்) மேலான (இஸ்லாமிய) வழியின் பக்கம் விரைந்து செல்லுங்கள். அல்லாஹ்வின் பக்கம்தான் நீங்கள் அனைவரும் செல்ல வேண்டியதிருக்கின்றது. நீங்கள் எதில் (அபிப்பிராய பேதப்பட்டுத்) தர்க்கித்துக் கொண்டிருந் தீர்களோ அதனை அவன் உங்களுக்கு நன்கறிவித்து விடுவான்.

Tafseer

وَأَنِ ٱحْكُم
தீர்ப்பளிப்பீராக
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
بِمَآ أَنزَلَ
இறக்கியதைக்கொண்டு
ٱللَّهُ
அல்லாஹ்
وَلَا تَتَّبِعْ
பின்பற்றாதீர்
أَهْوَآءَهُمْ
அவர்களின் விருப்பங்களை
وَٱحْذَرْهُمْ
அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக
أَن يَفْتِنُوكَ
உம்மை அவர்கள் திருப்பிவிடுவது
عَنۢ بَعْضِ
சிலவற்றிலிருந்து
مَآ أَنزَلَ
எது/இறக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
إِلَيْكَۖ
உமக்கு
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
فَٱعْلَمْ
அறிந்து கொள்வீராக
أَنَّمَا
எல்லாம்
يُرِيدُ
நாடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَن يُصِيبَهُم
அவர்களை சோதிப்பதைத்தான்
بِبَعْضِ
சிலவற்றின்
ذُنُوبِهِمْۗ
அவர்களுடைய பாவங்கள்
وَإِنَّ كَثِيرًا
நிச்சயமாக அதிகமானோர்
مِّنَ ٱلنَّاسِ
மனிதர்களில்
لَفَٰسِقُونَ
பாவிகள்தான்

Wa anih kum bainahum bimaaa anzalal laahu wa laa tattabi' ahwaaa'ahum wahzarhum ai yaftinooka 'am ba'di maaa anzalal laahu ilaika fa in tawallaw fa'lam annamaa yureedul laahu ai yuseebahum biba'di zunoobihim; wa inna kaseeram minan naasi lafaasiqoon

(நபியே!) அல்லாஹ் இறக்கி வைத்தவைகளைக் கொண்டே நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்பளியுங்கள். நீங்கள் அவர்களுடைய விருப்பத்தைப் பின்பற்றாதீர்கள். அன்றி உங்களுக்கு அல்லாஹ் இறக்கி வைத்தவற்றில் எதிலிருந்தும் உங்களை அவர்கள் திருப்பி விடாதபடியும் நீங்கள் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். (உங்களுடைய தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அவர்களின் சில (கொடிய) பாவங்களின் காரணமாக அல்லாஹ் (அவர்களைத் தண்டிக்க) அவர்களுக்குக் கஷ்டத்தைத் தர விரும்புகின்றான். நிச்சயமாக, மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர்.

Tafseer

أَفَحُكْمَ
சட்டத்தையா?
ٱلْجَٰهِلِيَّةِ
அறியாமைக்காலத்தின்
يَبْغُونَۚ
தேடுகின்றனர்
وَمَنْ
யார்
أَحْسَنُ
மிக அழகானவன்
مِنَ
விட
ٱللَّهِ
அல்லாஹ்வை
حُكْمًا
சட்டத்தால்
لِّقَوْمٍ
சமுதாயத்திற்கு
يُوقِنُونَ
உறுதி கொள்கின்றனர்

Afahukmal jaahiliyyati yabghoon; wa man ahsanu minal laahi hukmal liqawminy yooqinoon

அறியாமைக் காலத்தின் சட்ட (திட்ட)ங்களையா இவர்கள் விரும்புகின்றனர்? மெய்யாகவே, உறுதிகொண்ட மக்களுக்கு அல்லாஹ்வைவிட அழகான தீர்ப்பளிப்பவர் யார்?

Tafseer