Allazeena kafaroo wa saddoo'an sabeelil laahi adalla a'maalahum
எவர்கள், (இவ்வேதத்தை) நிராகரித்து விட்டதுடன், அல்லாஹ்வின் பாதையில் (மனிதர்கள்) செல்வதையும் தடுத்துக் கொண்டிருந்தார்களோ, அவர்களின் செயல்களை அவன் பயனற்றதாக்கி விட்டான்.
Wallazeena aamanoo wa 'amilus saalihaati wa aamanoo bimaa nuzzila 'alaa Muhammadinw-wa huwal haqqu mir Rabbihim kaffara 'anhum saiyiaatihim wa aslaha baalahum
எவர்கள், (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து, முஹம்மது (நபி (ஸல்)) பேரில் இறைவனால் இறக்கப்பட்ட உண்மையான இவ்வேதத்தையும் நம்பிக்கை கொண்டிருந்தார்களோ, அவர்கள் (தவறாகச் செய்த) பாவத்திற்கு இதனைப் பரிகாரமாக்கி, அவர்களுடைய காரியங் களையும் அவன் சீர்படுத்தி விட்டான்.
Zaalika bi annal lazeena kafarut taba'ul baatila wa annal lazeena aamanut taba'ul haqqa mir Rabbihim; kazaalika yadribul laahu linnaasi amsaalahum
ஏனென்றால், நிச்சயமாக நிராகரிப்பவர்கள் பொய்யையே பின்பற்றி இருந்தார்கள். நம்பிக்கை கொண்டவர்களோ, நிச்சயமாகத் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையையே பின்பற்றி இருந்தார்கள். இவ்வாறே (மற்ற) மனிதர்களுக்கு அல்லாஹ் அவர்களின் நிலைமையை உதாரணமா(கக் கூறித் தெளிவா)க்கு கின்றான்.
Fa-izaa laqeetumul lazeena kafaroo fadarbar riqaab, hattaaa izaa askhan tumoohum fashuddul wasaaq, fa immaa mannnam ba'du wa immaa fidaaa'an hattaa tada'al harbu awzaarahaa; zaalika wa law yashaaa'ul laahu lantasara minhum wa laakil laiyabluwa ba'dakum biba'd; wallazeena qutiloo fee sabeelil laahi falany yudilla a'maalahum
(நம்பிக்கையாளர்களே! உங்களை எதிர்த்து போர் புரியும்) நிராகரிப்பவர்களை நீங்கள் சந்திப்பீர்களாயின், (தயக்கமின்றி) அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள். அவர்களை முறியடித்து விட்டால், (மிஞ்சியவர்களைச் சிறை) பிடித்துக் கட்டுங்கள். அதன் பின்னர், அவர்களுக்குப் பதிலாக யாதொரு ஈடு பெற்றேனும் அல்லது (ஈடின்றி அவர்கள் மீது) கருணையாக வேனும் விட்டு விடுங்கள். இவ்வாறு, (எதிரிகள்) தம் ஆயுதத்தைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்.) இது அல்லாஹ்(வின் கட்டளை. அவன்) நாடியிருந்தால், (அவர்கள் உங்களுடன் போர் புரிய வருவதற்கு முன்னதாகவே) அவர்களை பழிவாங்கியிருப்பான். ஆயினும், (போரின் மூலம்) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான். ஆகவே, அல்லாஹ்வுடைய பாதையில் எவர்கள் வெட்டப்பட்டு (இறந்து) விடுகின்றார்களோ, அவர்களுடைய நன்மைகளை அவன் வீணாக்கிவிட மாட்டான். (தக்க கூலியையே கொடுப்பான்.)
Sa-yahdeehim wa yusihu baalahum
அவர்களை நேரான பாதையில் செலுத்தி அவர்களுடைய நிலைமையையும் சீர்படுத்திவிடுவான்.
Wa yudkhiluhumul jannata 'arrafahaa lahum
அன்றி, அவன் அவர்களுக்கு அறிவித்திருந்த சுவனபதியிலும் அவர்களைப் புகுத்துவான்.
Yaaa ayyuhal lazeena aamanooo in tansurul laaha yansurkum wa yusabbit aqdaamakum
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிந்தால், அவனும் உங்களுக்கு உதவி புரிந்து உங்களுடைய பாதங்களை உறுதியாக்கி விடுவான்.
Wallazeena kafaroo fata's al lahum wa adalla a'maalahum
எவர்கள் (இவ்வேதத்தை) நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான். (அவர்களுடைய கால்களைப் பெயர்த்து) அவர்களுடைய செயல்களையெல்லாம் பயனற்றதாக்கி விடுவான்.
Zaalika bi annahum karihoo maaa anzalal laahu faahbata a'maalahum
காரணமாவது: அல்லாஹ் இறக்கி வைத்ததை மெய்யாகவே அவர்கள் வெறுத்து (நிராகரித்து) விட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயல்களை எல்லாம் (அல்லாஹ்) அழித்து விட்டான்.
Afalam yaseeroo fil ardi fayanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qablihim; dammaral laahu 'alaihim wa lilkaafireena amsaaluhaa
அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? அவ்வாறாயின் இவர்களுக்கு முன்னர் (விஷமம் செய்துகொண்டு) இருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னர் விஷமம் செய்திருந்த) அவர்களை அடியோடு அழித்துவிட்டான். நிராகரிக்கும் இவர்களுக்கும் இது போன்றதே நிகழும்.
القرآن الكريم: | محمد |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Muhammad |
ஸூரா: | 47 |
வசனம்: | 38 |
Total Words: | 558 |
Total Characters: | 2475 |
Number of Rukūʿs: | 4 |
Classification (Revelation Location): | மதனீ |
Revelation Order: | 95 |
Starting from verse: | 4545 |