Skip to main content

ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௧

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَيْرًا مَّا سَبَقُوْنَآ اِلَيْهِۗ وَاِذْ لَمْ يَهْتَدُوْا بِهٖ فَسَيَقُوْلُوْنَ هٰذَآ اِفْكٌ قَدِيْمٌ   ( الأحقاف: ١١ )

And say
وَقَالَ
கூறினார்கள்
those who disbelieve
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
of those who believe
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி
"If it had been good
لَوْ كَانَ خَيْرًا
இது சிறந்ததாக இருந்தால்
not they (would) have preceded us
مَّا سَبَقُونَآ
இவர்கள் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள்
to it"
إِلَيْهِۚ
இதனளவில்
And when not they (are) guided
وَإِذْ لَمْ يَهْتَدُوا۟
அவர்கள் நேர்வழி பெறாமல் போனபோது
by it
بِهِۦ
இதன் மூலம்
they say
فَسَيَقُولُونَ
கூறுகின்றனர்
"This
هَٰذَآ
இது
(is) a lie
إِفْكٌ
பொய்யாகும்
ancient"
قَدِيمٌ
பழைய(து)

Wa qaalal lazeena kafaroo lillazeena aamanoo law kaana khairam maa sabaqoonaaa ilyh; wa iz lam yahtadoo bihee fasa yaqooloona haazaaa ifkun qadeem (al-ʾAḥq̈āf 46:11)

Abdul Hameed Baqavi:

நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "இவ்வேதம் நன்மையானதாக இருந்தால் (அதனை நம்பிக்கை கொள்ள இப்பாமர மக்கள்) எங்களைவிட முந்திக்கொள்ள மாட்டார்கள். (இதில் யாதொரு நன்மையுமே இல்லை. ஆதலால்தான், அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம்)" என்றும் கூறுகின்றனர். அவர்கள் இ(வ்வுண்மையான வேதத்)தைப் பின்பற்றாத நிலைமையில், இது பழங்காலத்துப் பொய்யான கட்டுக்கதைகள்தாம் என்றும் அவர்கள் கூறுவார்கள்.

English Sahih:

And those who disbelieve say of those who believe, "If it had [truly] been good, they would not have preceded us to it." And when they are not guided by it, they will say, "This is an ancient falsehood." ([46] Al-Ahqaf : 11)

1 Jan Trust Foundation

நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி| “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள்.