Yaghshan naasa haazaa 'azaabun aleem
மனிதர்கள் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அது துன்புறுத்தும் வேதனையாகும்.
Rabbanak shif 'annal 'azaaba innaa mu'minoon
(அந்நாளில் மனிதர்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்களை விட்டும் இவ்வேதனையை நீக்கிவிடு. நிச்சயமாக நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கின்றோம்" (என்று கூறுவார்கள்).
Annaa lahumuz zikraa wa qad jaaa'ahum Rasoolum mubeen
(அந்நேரத்தில் அவர்களின்) நல்லுணர்ச்சி எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்? நிச்சயமாக (நம்முடைய) தெளிவான தூதர் (இதற்கு முன்னர்) அவர்களிடம் வந்தே இருக்கின்றார்.
Summaa tawallaw 'anhu wa qaaloo mu'allamum majnoon
எனினும், அவர்கள் அவரை புறக்கணித்து, (அவரைப்பற்றி "இவர்) எவராலோ கற்பிக்கப்பட்ட ஒரு பைத்தியக்காரன்தான்" என்று கூறினர்.
Innaa kaashiful 'azaabi qaleelaa; innakum 'aaa'indoon
(மெய்யாகவே நீங்கள் உணர்ச்சி பெறக்கூடுமென்று) அவ்வேதனையைப் பின்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். (எனினும்) நிச்சயமாக (நீங்கள் பாவம்) செய்யவே மீளுகின்றீர்கள்.
Yawma nabtishul batsha tal kubraa innaa muntaqimoon
மிக்க பலமாக அவர்களை நாம் பிடிக்கும் அந்நாளில் நிச்சயமாக (அவர்களிடம்) பழிவாங்கியே தீருவோம்.
Wa laqad fatannaa qablahum qawma Fir'awna wa jaaa'ahum Rasoolun kareem
இவர்களுக்கு முன்னரும், ஃபிர்அவ்னுடைய மக்களை நிச்சயமாக நாம் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியமான (நம்முடைய) ஒரு தூதர் வந்தார்.
An addooo ilaiya 'ibaadal laahi innee lakum Rasoolun ameen
(வந்த அவர்) "அல்லாஹ்வின் அடியார்(களாகிய இஸ்ராயீலின் சந்ததி)களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். நிச்சயமாக நான் (இறைவனிடமிருந்து) உங்களிடம் வந்துள்ள நம்பிக்கையான ஒரு தூதர்.
Wa al laa ta'loo 'alal laahi innee aateekum bisultaanim mubeen
அல்லாஹ்வுக்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள். நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன்" என்று கூறினார். (அதற்கவர்கள் "நாங்கள் உங்களை கல்லெறிந்து கொன்று விடுவோம்" என்று கூறினார்கள். அதற்கு மூஸா)
Wa innee 'uztu bi Rabbee wa rabbikum an tarjumoon
"என்னை நீங்கள் கல்லெறிந்து கொல்லாதிருக்கும்படி எனது இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்பைத் தேடுகிறேன்" என்றார்.