Qul in kaana lir Rahmaani walad; fa-ana awwalul 'aabideen
"ரஹ்மானுக்கு சந்ததி இருக்கும்பட்சத்தில் (அதனை) வணங்குபவர்களில் நானே முதன்மையானவனாக இருப்பேன்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
Subhaana Rabbis samaawaati wal ardi Rabbil Arshi 'ammaa yasifoon
அர்ஷுடைய இறைவனாகிய அவனே வானங்கள் பூமியின் சொந்தக்காரன். அவன் (இவர்கள் கூறும் பொய்யான) இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் மிக்க பரிசுத்தமானவன்.
Fazarhum yakhoodoo wa yal'aboo hattaa yulaaqoo Yawmahumul lazee yoo'adoon
ஆகவே, (நபியே!) இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேதனையின்) நாள் இவர்களைச் சந்திக்கும் வரையில், வீண் தர்க்கத்தில் மூழ்கி விளையாடிக் கொண்டிருக்கும்படி இவர்களை விட்டுவிடுங்கள்.
Wa Huwal lazee fissamaaa'i Ilaahunw wa fil ardi Ilaah; wa Huwal Hakeemul'Aleem
வானத்திலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன்; பூமியிலும் அவன்தான் வணக்கத்திற்குரிய இறைவன். (ஈஸா அல்ல.) அவன்தான் மிக்க ஞானமுடையவனும் (அனைத்தையும்) நன்கறிந்த வனுமாக இருக்கின்றான்.
Wa tabaarakal lazee lahoo mulkus samaawaati wal ardi wa maa bainahumaa wa 'indahoo 'ilmus Saa'ati wa ilaihi turja'oon
வானங்கள், பூமி இவைகளுக்கு மத்தியிலுள்ளவைகள் ஆகியவற்றின் ஆட்சி (ரஹ்மானாகிய) அவனுக்குரியதே. அவன் பெரும் பாக்கியம் உடையவன். அவனிடத்தில்தான் மறுமையின் ஞானம் இருக்கின்றது. அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு போகப்படுவீர்கள்.
Wa laa yamlikul lazeena yad'oona min doonihish shafaa'ata illaa man shahida bilhaqqi wa hum ya'lamoon
அல்லாஹ்வையன்றி எவைகளை இவர்கள் (இறைவனென) அழைக்கின்றார்களோ அவைகள் (இவர்களுக்காக அவனிடத்தில்) பரிந்து பேசவும் சக்தி பெறாது. ஆயினும், எவர்கள் உண்மையை அறிந்து அதனைப் பகிரங்கமாகவும் கூறுகிறார்களோ அவர்களைத் தவிர (அவனுடைய அனுமதி கிடைத்தால் அவனிடம் பரிந்து பேசுவார்கள்.)
Wa la'in sa altahum man khalaqahum la yaqoolun nallaahu fa annaa yu'fakoon
(நபியே!) அவர்களை படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்பீராயின் (ஈஸா அல்ல;) அல்லாஹ்தான் என்று நிச்சயமாகக் கூறுவார்கள். அவ்வாறாயின், (அவனைவிட்டு) இவர்கள் எங்கு வெருண்டோடுகின்றனர்?
Wa qeelihee yaa Rabbi inna haa'ulaaa'i qawmul laa yu'minoon
"என் இறைவனே! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள்" என்று (நபியே! நீங்கள்) கூறுவதும் நமக்குத் தெரியும்.
Fasfah 'anhum wa qul salaam; fasawfa ya'lamoon
ஆகவே, நீங்கள் அவர்களைப் புறக்கணித்துவிட்டு "ஸலாமுன்" (சாந்தி, சமாதானம்) என்று கூறி வாருங்கள். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.