Fa immaa nazhabanna bika fa innaa minhum muntaqimoon
(நபியே! அவர்கள் மத்தியிலிருந்து) உங்களை நாம் எடுத்துக் கொண்டபோதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி வாங்கியே தீருவோம்.
Aw nuriyannakal lazee wa'adnaahum fa innaa 'alaihim muqtadiroon
அல்லது நாம் அவர்களுக்கு வாக்களித்த தண்டனையை நீங்கள் (உயிருடனிருந்து) உங்களது கண்ணால் காணும்படி செய்வோம். நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றல் உடைய வனாகவே இருக்கின்றோம்.
Fastamsik billazeee oohi ya ilaika innaka 'alaa Siraatim Mustaqeem
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் நேரான பாதையில்தான் இருக்கின்றீர்கள்.
Wa innahoo lazikrul laka wa liqawmika wa sawfa tus'aloon
நிச்சயமாக இது உங்களுக்கும், உங்களுடைய மக்களுக்கும் ஒரு நல்லுபதேசமாகும். (அதிலுள்ளபடி நடந்து கொண்டீர்களா என்பதைப் பற்றி) பின்னர் நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
Was'al man arsalnaa min qablika mir Rusulinaaa aja'alnaa min doonir Rahmaani aalihatany yu badoon
(நபியே!) உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிவைத்த நம்முடைய தூதர்களைப் பற்றி நீங்கள் கேளுங்கள். வணங்குவதற்கு ரஹ்மானையன்றி வேறு கடவுள்களை நாம் ஆக்கினோமா?
Wa laqad arsalnaa Moosaa bi aayaatinaaa ilaa Fir'awna wa mala'ihee faqaala innee Rasoolu Rabbil 'aalameen
நிச்சயமாக மூஸாவை, நாம் நம்முடைய (பல) அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரின் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதர்" என்று கூறினார்.
Falammma jaaa'ahum bi aayaatinaaa izaa hum minhaa yadhakoon
அவர், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் அவைகளை (ஏளனம் செய்து) நகைக்க ஆரம்பித்தார்கள்.
Wa maa nureehim min aayatin illaa hiya akbaru min ukhtihaa wa akhaznaahum bil'azaabi la'allahum yarji'oon
நாம் அவர்களுக்குக் காண்பித்த ஒவ்வொரு அத்தாட்சியும், மற்றொன்றை விடப் பெரிதாகவே இருந்தது. பின்னும், அவர்கள் (பாவத்திலிருந்து) திரும்பி விடுவதற்காக (ஆரம்பத்தில் அழித்து விடாமல் இலேசான) வேதனையைக் கொண்டு (மட்டும்) அவர்களைப் பிடித்தோம்.
Wa qaaloo yaaa ayyuhas saahirud'u lanaa Rabbaka bimaa 'ahida 'indaka innanaa lamuhtadoon
அச்சமயம் அவர்கள் (மூஸாவை நோக்கி) "சூனியக்காரரே! (உங்களது இறைவன் உங்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வதாக) உங்களுக்களித்த வாக்குறுதியைக் கொண்டு (இவ் வேதனையை நீக்கி) எங்களுக்கு அருள் புரிய உங்களது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! (அவ்வாறு நீக்கிவிட்டால்) நிச்சயமாக நாங்கள் (உங்களுடைய) நேரான வழிக்கு வந்து விடுவோம்" என்று கூறினார்கள்.
Falammaa kashafnaa 'anhumul 'azaaba izaa hum yankusoon
(அவ்வாறு மூஸாவும் பிரார்த்தனை செய்து) நாம் அவர்களுடைய வேதனையை நீக்கிய சமயத்தில், பின்னும் அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விட்டார்கள்.