Skip to main content

أَمْ ءَاتَيْنَٰهُمْ
?/நாம் அவர்களுக்குக் கொடுத்தோம்
كِتَٰبًا
ஒரு வேதத்தை
مِّن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
فَهُم
அவர்கள்
بِهِۦ
அதை
مُسْتَمْسِكُونَ
பற்றிப் பிடித்திருக்கின்றார்கள்

Am aatainaahum Kitaabam min qablihee fahum bihee mustamsikoon

அல்லது (அவர்கள் சொல்வது போன்று) யாதொரு வேதத்தை இதற்கு முன்னர் நாம் அவர்களுக்குக் கொடுத்திருந்து, அதனை அவர்கள் இதற்கு ஆதாரமாக வைத்துக் கொண்டிருக்கின்றனரா?

Tafseer

بَلْ
மாறாக
قَالُوٓا۟
அவர்கள் கூறுகின்றனர்
إِنَّا
நிச்சயமாக நாம்
وَجَدْنَآ
கண்டோம்
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
عَلَىٰٓ أُمَّةٍ
ஒரு கொள்கையில்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களின் அடிச்சுவடுகள் மீதே
مُّهْتَدُونَ
நேர்வழி நடப்போம்

Bal qaalooo innaa wajadnaaa aabaaa'anaa 'alaaa ummatinw wa innaa 'alaaa aasaarihim muhtadoon

அன்று! இவர்கள் (தங்களுக்கு ஆதாரமாகக்) கூறுவ தெல்லாம் நாங்கள் "எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம். அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றியே நாங்கள் நடக்கின்றோம்" என்பதுதான்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறு
مَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பியதில்லை
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
فِى قَرْيَةٍ
ஓர் ஊரில்
مِّن نَّذِيرٍ
எந்த ஓர் எச்சரிப்பாளரையும்
إِلَّا قَالَ
கூறியே தவிர
مُتْرَفُوهَآ
அதன் செல்வந்தர்கள்
إِنَّا وَجَدْنَآ
நிச்சயமாக நாம் கண்டோம்
ءَابَآءَنَا
எங்கள் மூதாதைகளை
عَلَىٰٓ أُمَّةٍ
ஒரு கொள்கையில்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
عَلَىٰٓ ءَاثَٰرِهِم
அவர்களின் அடிச்சுவடுகளை
مُّقْتَدُونَ
பின்பற்றி நடப்போம்

Wa kazaalika maaa arsalnaa min qablika fee qaryatim min nazeerin illaa qaala mutrafoohaaa innaa wajadnaaa aabaaa'anaa 'alaaa ummatinw wa innaa 'alaaa aasaarihim muqtadoon

இவ்வாறே உங்களுக்கு முன்னரும் நாம் நம்முடைய தூதரை எவ்வூராரிடம் அனுப்பி வைத்தோமோ, அங்குள்ள தலைவர்களும் "நாங்கள் எங்கள் மூதாதைகளை ஒரு வழியில் கண்டோம்; அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே செல்வோம்" என்று கூறாமல் இருக்கவில்லை.

Tafseer

قَٰلَ
கூறினார்
أَوَلَوْ جِئْتُكُم
நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா
بِأَهْدَىٰ
மிகச் சிறந்த நேர்வழியை
مِمَّا وَجَدتُّمْ
எதைவிட/ கண்டீர்களோ
عَلَيْهِ
அதன் மீது
ءَابَآءَكُمْۖ
உங்கள் மூதாதைகளை
قَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
بِمَآ أُرْسِلْتُم
நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ
بِهِۦ كَٰفِرُونَ
அதை/ நிராகரிப்பவர்கள்

Qaala awa law ji'tukum bi ahdaa mimmaa wajattum 'alaihi aabaaa'akum qaalooo innaa bimaaa ursiltum bihee kaafiroon

(அதற்கு, அத்தூதர்கள் அவர்களை நோக்கி) "உங்கள் மூதாதைகள் இருந்ததை விட நான் நேரான வழியைக் கொண்டு வந்திருந்த போதிலுமா? (உங்கள் மூதாதைகளை நீங்கள் பின்பற்றுவீர்கள்)" என்று கேட்டார்கள். அதற்கவர்கள் "(ஆம்! அவர்களையே நாங்கள் பின்பற்றுவதுடன்) நீங்கள் கொண்டு வந்ததையும் நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்றும் கூறினார்கள்.

Tafseer

فَٱنتَقَمْنَا
ஆகவே, நாம் பழிவாங்கினோம்
مِنْهُمْۖ
அவர்களிடம்
فَٱنظُرْ
ஆக, நீர் கவனிப்பீராக!
كَيْفَ
எப்படி
كَانَ
இருந்தது
عَٰقِبَةُ
முடிவு
ٱلْمُكَذِّبِينَ
பொய்ப்பித்தவர்களின்

Fantaqamnaa minhum fanzur kaifa kaana 'aaqibatul mukazzibeen

ஆதலால், நாம் அவர்களை பழி வாங்கினோம். (நபியே! நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்.

Tafseer

وَإِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
إِبْرَٰهِيمُ
இப்ராஹீம்
لِأَبِيهِ
தனது தந்தைக்கு(ம்)
وَقَوْمِهِۦٓ
தனது மக்களுக்கும்
إِنَّنِى بَرَآءٌ
நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்
مِّمَّا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும்

Wa iz qaala Ibraaheemu liabeehi wa qawmiheee innane baraaa'um mimmaa ta'budo

இப்ராஹீம் தன்னுடைய தந்தையையும், மக்களையும் நோக்கிக் கூறியதை நினைத்துப் பாருங்கள். "நிச்சயமாக நான் நீங்கள் வணங்கும் தெய்வங்களை விட்டும் விலகிக்கொண்டேன்.

Tafseer

إِلَّا ٱلَّذِى
என்னைப் படைத்தவனைத் தவிர
فَإِنَّهُۥ
நிச்சயமாக அவன்
سَيَهْدِينِ
எனக்கு நேர்வழி காட்டுவான்

Illal lazee fataranee innahoo sa yahdeen

எவன் என்னை படைத்தானோ (அவனையே நான் வணங்குவேன்.) நிச்சயமாக அவனே எனக்கு நேரான வழியை அறிவிப்பான்" (என்றும் கூறினார்).

Tafseer

وَجَعَلَهَا
இதை ஆக்கினார்
كَلِمَةًۢ
ஒரு வாக்கியமாக
بَاقِيَةً
நீடித்து இருக்கின்ற(து)
فِى عَقِبِهِۦ
தனது சந்ததிகளில்
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக

Wa ja'alahaa Kalimatam baaqiyatan fee 'aqibihee la'al lahum yarji'oon

ஆகவே, (அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளும் நம்மிடமே) வரும் பொருட்டு, அவர் தன்னுடைய சந்ததிகளில் இக் கொள்கையை நிலையான வாக்குறுதியாக அமைத்தார்.

Tafseer

بَلْ
மாறாக
مَتَّعْتُ
நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம்
هَٰٓؤُلَآءِ
இவர்களுக்கு(ம்)
وَءَابَآءَهُمْ
மூதாதைகளுக்கும் இவர்களின்
حَتَّىٰ
இறுதியாக
جَآءَهُمُ
வந்தது அவர்களிடம்
ٱلْحَقُّ
உண்மையான வேதம்
وَرَسُولٌ
தூதரும்
مُّبِينٌ
தெளிவான

Bal matta'tu haaa'ulaaa'i wa aabaaa'ahum hattaa jaaa'a humul haqqu wa Rasoolum mubeen

(ஆயினும், அவருடைய சந்ததிகளாகிய இந்த அரபிகளோ, தங்கள் பெற்றோற்களாகிய இப்ராஹீமின் நல்லுபதேசத்தை மறந்து, விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு விட்டனர். அவ்வாறிருந்தும்) இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் அவர்களிடம் மெய்யான (இந்த) வேதமும், தெளிவான (நம்முடைய இந்தத்) தூதரும் வரும் வரையில், அவர்களை(த் தண்டிக்காது இவ்வுலகில்) சுகமனுபவிக்கும்படியே நான் விட்டு வைத்தேன்.

Tafseer

وَلَمَّا
வந்த போது
جَآءَهُمُ
அவர்களிடம்
ٱلْحَقُّ
உண்மையான வேதம்
قَالُوا۟
கூறினார்கள்
هَٰذَا سِحْرٌ
இது சூனியம்
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
بِهِۦ
இதை
كَٰفِرُونَ
நிராகரிப்பவர்கள்

Wa lammaa jaaa'ahumul haqqu qaaloo haazaa sihrunw wa innaa bihee kaafiroon

அவர்களிடம் இந்தச் சத்திய வேதம் வரவே, அவர்கள் இதனை "(இது) சூனியம்தான். நிச்சயமாக நாங்கள் இதனை நிராகரிக்கின்றோம்" என்று கூறுகின்றனர்.

Tafseer