Wal Kitaabil Mubeen
தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
Innaa ja'alnaahu Quraanan 'Arabiyyal la'allakum ta'qiloon
(மக்காவாசிகளே!) நீங்கள் (எளிதில்) அறிந்துகொள்ளும் பொருட்டே இவ்வேதத்தை (நீங்கள் பேசும் உங்களுடைய) அரபி மொழியில் அமைத்தோம்.
Wa innahoo feee Ummil Kitaabi Ladainaa la'aliyyun hakeem
நிச்சயமாக இது நம்மிடத்திலுள்ள "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" பதிவு செய்யப்பட்டுள்ளது. இது (வேதங்களில்) மிக மேலானதும் ஞானம் நிறைந்ததுமாகும்.
Afanadribu 'ankumuz Zikra safhan an kuntum qawmam musrifeen
நீங்கள் வரம்பு மீறிய மக்களாகிவிட்டீர்கள் என்பதற்காக, உங்களுக்கு நல்லுபதேசம் செய்வதையும் விட்டு முற்றிலும் நாம் உங்களைப் புறக்கணித்து விடுவோமா?
Wa kam arsalnaa min Nabiyyin fil awwaleen
(உங்களைப் போன்று வரம்பு மீறிச்) சென்றுபோன உங்கள் முன்னோர்களுக்கும் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பி யிருக்கின்றோம்.
Wa maa yaateehim min Nabiyyin illaa kaanoo bihee yasahzi'oon
(எனினும்) அவர்களிடம் எந்த நபி வந்தபோதிலும், அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
Fa ahlaknaaa ashadda minhum batshanw wa madaa masalul lawwaleen
இவர்களை விட மிக பலசாலிகளான அவர்களையெல்லாம் (அவர்களின் பாவத்தின் காரணமாக) நாம் அழித்துவிட்டோம். இதற்கு முன் சென்றவர்களின் (இத்தகைய) உதாரணம் (இதில் பல இடங்களில் கூறப்பட்டு முன்னர்) சென்றுவிட்டது.
Wa la'in sa altahum man khalaqas samaawaati wal arda la yaqoolunna khalaqa hunnal 'Azeezul 'Aleem
வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார் என்று நீங்கள் அவர்களிடம் கேட்கும் பட்சத்தில், (அனைத்தையும்) மிகைத்தவனும், மிக்க ஞானமுடையவன்தான் அவைகளை படைத்தான் என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள். (இதனை அறிந்திருந்தும் அவனுக்கு மாறு செய்கின்றனர்.)
Allazee ja'ala lakumul arda mahdanw wa ja'ala lakum feehaa subulal la'allakum tahtadoon
அவன்தான் பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லும் பொருட்டு வழிகளையும் அமைத்தான்.
القرآن الكريم: | الزخرف |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Az-Zukhruf |
ஸூரா: | 43 |
வசனம்: | 89 |
Total Words: | - |
Total Characters: | 3400 |
Number of Rukūʿs: | 7 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 63 |
Starting from verse: | 4325 |