وَمَا اخْتَلَفْتُمْ فِيْهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهٗٓ اِلَى اللّٰهِ ۗذٰلِكُمُ اللّٰهُ رَبِّيْ عَلَيْهِ تَوَكَّلْتُۖ وَاِلَيْهِ اُنِيْبُ ( الشورى: ١٠ )
Wa makh-talaftum feehi min shai'in fahukmuhooo ilallaah; zaalikumul laahu Rabbee 'alaihi tawakkaltu wa ilaihi uneeb (aš-Šūrā 42:10)
Abdul Hameed Baqavi:
(நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "இதில் நீங்கள் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கின்றீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கின்றது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பியும் அவனையே நான் நோக்கியும் நிற்கின்றேன்."
English Sahih:
And in anything over which you disagree – its ruling is [to be referred] to Allah. [Say], "That is Allah, my Lord; upon Him I have relied, and to Him I turn back." ([42] Ash-Shuraa : 10)
1 Jan Trust Foundation
நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது - அ(த்தகைய தீர்ப்பு வழங்குப)வன் தான் அல்லாஹ் - என்னுடைய இறைவன்; அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன்; அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன்.