Skip to main content

وَمَآ أَنتُم
நீங்கள் தப்பித்துவிட முடியாது
فِى ٱلْأَرْضِۖ
இந்த பூமியில்
وَمَا لَكُم
இன்னும் உங்களுக்குஇல்லை
مِّن دُونِ
அல்லாஹ்வையன்றி
مِن وَلِىٍّ
எந்த பாதுகாவலரும்
وَلَا نَصِيرٍ
எந்த உதவியாளரும் இல்லை

Wa maaa antum bimu'jizeena fil ardi wa maa lakum min doonil laahi minw wa liyyinw wa laa naseer

நீங்கள் பூமியில் (ஓடி ஒளிந்து) அவனை தோற்கடித்துவிட முடியாது. தவிர, அல்லாஹ்வையன்றி உங்களை காப்பாற்றுபவனும் இல்லை; உங்களுக்கு உதவி செய்பவனும் இல்லை.

Tafseer

وَمِنْ ءَايَٰتِهِ
அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்
ٱلْجَوَارِ
மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள்
فِى ٱلْبَحْرِ
கடலில்
كَٱلْأَعْلَٰمِ
மலைகளைப் போன்று

Wa min Aayaatihil ja waarifil bahri kal a'lam

கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

Tafseer

إِن يَشَأْ
அவன் நாடினால்
يُسْكِنِ
அமைதியாக்கி விடுவான்
ٱلرِّيحَ
காற்றுகளை
فَيَظْلَلْنَ
ஆகிவிடும்
رَوَاكِدَ
அசையாமல் நிற்கக்கூடியதாக
عَلَىٰ ظَهْرِهِۦٓۚ
அதன் மீதே
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّكُلِّ
எல்லோருக்கும்
صَبَّارٍ
பெரும் பொறுமையாளர்கள்
شَكُورٍ
நன்றி உள்ளவர்கள்

Iny yashaaa yuskinir reeha fa yazlalna rawaakida 'alaa zahirh; inna fee zaalika la Aayaatil likulli sabbaarin shakoor

அவன் விரும்பினால், காற்றை நிறுத்திவிடுவான். கப்பல்கள் கடலில் இருந்தவாறே அசையாது நின்றுவிடும். (அத்தகைய கஷ்டங்களை அனுபவித்துச்) சகிப்பவர்களும் (கரை சேர்ந்தபின், மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துபவர்களும் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகளிருக்கின்றன.

Tafseer

أَوْ
அல்லது
يُوبِقْهُنَّ
அவற்றை அவன் அழித்து விடுவான்
بِمَا كَسَبُوا۟
அவர்கள் செய்தவற்றின் காரணமாக
وَيَعْفُ
இன்னும் மன்னித்து விடுகிறான்
عَن كَثِيرٍ
அதிகமான தவறுகளை

Aw yoobiqhunna bimaa kasaboo wa ya'fu 'an kaseer

அவர்களின் (தீய) செயலின் காரணமாக, அவைகளை (கடலில்) அழித்திருப்பான். ஆயினும், அவர்(களின் அனேகக் குற்றங்)களை மன்னித்து விடுகின்றான்.

Tafseer

وَيَعْلَمَ
அவன் நன்கறிவான்
ٱلَّذِينَ يُجَٰدِلُونَ
தர்க்கிப்பவர்களை
فِىٓ ءَايَٰتِنَا
நமது வசனங்களில்
مَا لَهُم
அவர்களுக்கு இல்லை
مِّن مَّحِيصٍ
தப்பிக்கும் இடம் ஏதும்

Wa ya'lamal lazeena yujaadiloona feee Aayaatinaa maa lahum mim mahees

அவனுடைய வசனங்களில் (வீணாகத்) தர்க்கிப்பவர் களையும் அவன் நன்கறிவான்; (அவனுடைய வேதனையிலிருந்து) அவர்கள் தப்ப வழி இல்லை.

Tafseer

فَمَآ أُوتِيتُم
நீங்கள் கொடுக்கப்பட்டுள்ள எல்லாம்
مِّن شَىْءٍ
பொருள்கள்
فَمَتَٰعُ
இன்பமாகும்
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
وَمَا
எது உள்ளதோ
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
خَيْرٌ
மிகச் சிறந்தது(ம்)
وَأَبْقَىٰ
மிக நிரந்தரமானது(ம்)
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
وَعَلَىٰ رَبِّهِمْ
இன்னும் தங்கள் இறைவனையே
يَتَوَكَّلُونَ
சார்ந்திருப்பார்கள்

Famaa ooteetum min shai'in famataa'ul hayaatid dunyaa wa maa 'indal laahi khairunw wa abqaa lillazeena aamanoo wa 'alaa Rabbihim yatawakkaloon

(இங்கு) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம் (நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்ப இன்பங்களே! நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவனையே நம்பியிருப்பவர் களுக்கு அல்லாஹ்விடத்தில் உள்ளவைகளோ மிக்க மேலான வைகளும் நிலையானவைகளுமாகும்.

Tafseer

وَٱلَّذِينَ يَجْتَنِبُونَ
இன்னும் /எவர்கள்/விலகிவிடுவார்கள்
كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ
பெரும் பாவங்களை விட்டும்
وَٱلْفَوَٰحِشَ
மானக்கேடான விஷயங்களை விட்டும்
وَإِذَا مَا
அவர்கள் கோபப்படும்போது
يَغْفِرُونَ
மன்னித்து விடுவார்கள்

Wallazeena yajtaniboona kabaaa'iral ismi wal fawaa hisha wa izaa maa ghadiboo hum yaghfiroon

(அல்லாஹ்வை நம்பிய) அவர்கள் பெரும்பாவமான காரியங்களையும், மானக்கேடான விஷயங்களையும் விட்டு விலகி (இருப்பதுடன், பிறரின் தகாத செயல்களால்) கோபமடையும் சமயத்திலும் (கோபமூட்டியவரை) மன்னித்து விடுவார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
ٱسْتَجَابُوا۟
பதில் அளிப்பார்கள்
لِرَبِّهِمْ
தங்கள் இறைவனுக்கு
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்துவார்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَأَمْرُهُمْ
இன்னும் அவர்களது காரியம்
شُورَىٰ
ஆலோசிக்கப்படும்
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
وَمِمَّا رَزَقْنَٰهُمْ
இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து
يُنفِقُونَ
தர்மம் கொடுப்பார்கள்

Wallazeenas tajaaboo li Rabbhim wa aqaamus Salaata wa amruhum shooraa bainahum wa mimmaa razaqnaahum yunfiqoon

தவிர, அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளைகளை அங்கீகரித்துத் தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள். அவர் களுடைய ஒவ்வொரு காரியத்தையும் தங்களுக்குள் ஆலோச னைக்குக் கொண்டு வருவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவை களிலிருந்து தானமும் செய்வார்கள்.

Tafseer

وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
إِذَآ أَصَابَهُمُ
அவர்களுக்கு நிகழ்ந்தால்
ٱلْبَغْىُ
அநியாயம்
هُمْ يَنتَصِرُونَ
அவர்கள் பழிவாங்குவார்கள்

Wallazeena izaa asaabahumul baghyu hum yantasiroon

அவர்களில் எவரையும் (எவரும்) அநியாயம் செய்தால், அதற்கு அவர்கள் (சரியான) பழிவாங்கியும் விடுவார்கள்.

Tafseer

وَجَزَٰٓؤُا۟
தண்டனை
سَيِّئَةٍ
தீமையின்
سَيِّئَةٌ
தீமைதான்
مِّثْلُهَاۖ
அது போன்ற
فَمَنْ عَفَا
யார்/மன்னிப்பாரோ
وَأَصْلَحَ
இன்னும் சமாதானம் செய்வாரோ
فَأَجْرُهُۥ
அவரது கூலி
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ்வின் மீது
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَا يُحِبُّ
நேசிக்க மாட்டான்
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை

Wa jazaaa'u saiyi'atin saiyi'tum misluha faman 'afaa wa aslaha fa ajruhoo 'alal laah; innahoo laa yuhibbuz zaalimeen

தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் சமாதானம் செய்து கொண்டால், அவருடைய கூலி அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

Tafseer