Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௧௨

فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ فِيْ يَوْمَيْنِ وَاَوْحٰى فِيْ كُلِّ سَمَاۤءٍ اَمْرَهَا ۗوَزَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِمَصَابِيْحَۖ وَحِفْظًا ۗذٰلِكَ تَقْدِيْرُ الْعَزِيْزِ الْعَلِيْمِ  ( فصلت: ١٢ )

Then He completed them
فَقَضَىٰهُنَّ
ஆக, முடித்தான்/அவற்றை
(as) seven heavens
سَبْعَ سَمَٰوَاتٍ
ஏழு/வானங்களாக
in two periods
فِى يَوْمَيْنِ
இரண்டு நாள்களில்
and He revealed
وَأَوْحَىٰ
இன்னும் அறிவித்தான்
in each
فِى كُلِّ
ஒவ்வொரு
heaven
سَمَآءٍ
வானத்திலும்
its affair
أَمْرَهَاۚ
அதன் காரியத்தை
And We adorned
وَزَيَّنَّا
இன்னும் அலங்கரித்தோம்
the heaven
ٱلسَّمَآءَ
வானத்தை
the nearest
ٱلدُّنْيَا
சமீபமான(து)
with lamps
بِمَصَٰبِيحَ
நட்சத்திரங்களால்
and (to) guard
وَحِفْظًاۚ
இன்னும் பாதுகாப்பதற்காக
That (is the) Decree
ذَٰلِكَ تَقْدِيرُ
இது/ஏற்பாடாகும்
(of) the All-Mighty
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
the All-Knower
ٱلْعَلِيمِ
நன்கறிந்தவன்

Faqadaahunna sab'a samaawaatin fee yawmaini wa awhaa fee kulli samaaa'in amarahaa; wa zaiyannassa maaa'ad dunyaa bimasaabeeha wa hifzaa; zaalika taqdeerul 'Azeezil 'Aleem (Fuṣṣilat 41:12)

Abdul Hameed Baqavi:

பின்னர் (அந்த புகையை) இரண்டு நாள்களில் ஏழு வானங்களாக முடிவு செய்து திட்டமிட்டு, ஒவ்வொரு வானத்திலும் நடைபெற வேண்டிய விஷயங்களை (அவைகளுக்கு) அறிவித்தான். பின்னர், (இவ்வளவும் செய்த) நாமே (பூமிக்குச்) சமீபமான வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்து, (அதனை அவைகளுக்குப்) பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இவையெல்லாம், (அனைவரையும்) மிகைத்தவனும் (அனைத் தையும்) அறிந்தவனுடைய ஏற்பாடுதான்.

English Sahih:

And He completed them as seven heavens within two days and inspired [i.e., made known] in each heaven its command. And We adorned the nearest heaven with lamps [i.e., stars, for beauty] and as protection. That is the determination of the Exalted in Might, the Knowing. ([41] Fussilat : 12)

1 Jan Trust Foundation

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.