Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௭

اَلَّذِيْنَ يَحْمِلُوْنَ الْعَرْشَ وَمَنْ حَوْلَهٗ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيُؤْمِنُوْنَ بِهٖ وَيَسْتَغْفِرُوْنَ لِلَّذِيْنَ اٰمَنُوْاۚ رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَّحْمَةً وَّعِلْمًا فَاغْفِرْ لِلَّذِيْنَ تَابُوْا وَاتَّبَعُوْا سَبِيْلَكَ وَقِهِمْ عَذَابَ الْجَحِيْمِ   ( غافر: ٧ )

Those who bear
ٱلَّذِينَ يَحْمِلُونَ
சுமப்பவர்களும்
the Throne
ٱلْعَرْشَ
அர்ஷை
and those around it
وَمَنْ حَوْلَهُۥ
அதைச் சுற்றி இருப்பவர்களும்
glorify
يُسَبِّحُونَ
துதிக்கின்றனர்
(the) praises
بِحَمْدِ
புகழை
(of) their Lord
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
and believe in Him
وَيُؤْمِنُونَ بِهِۦ
இன்னும் அவனை நம்பிக்கை கொள்கின்றனர்
and ask forgiveness
وَيَسْتَغْفِرُونَ
இன்னும் பாவமன்னிப்புக் கோருகின்றனர்
for those who believe
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்காக
"Our Lord!
رَبَّنَا
எங்கள் இறைவா
You encompass
وَسِعْتَ
நீ விசாலமடைந்து இருக்கின்றாய்
all things
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
(by Your) Mercy
رَّحْمَةً
கருணையாலும்
and knowledge
وَعِلْمًا
இன்னும் கல்வியாலும்
so forgive
فَٱغْفِرْ
ஆகவே மன்னிப்பாயாக!
those who repent
لِلَّذِينَ تَابُوا۟
திருந்தி மன்னிப்புக் கோரியவர்களை
and follow
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
Your Way
سَبِيلَكَ
உனது பாதையை
and save them (from)
وَقِهِمْ
இன்னும் அவர்களை பாதுகாப்பாயாக!
(the) punishment
عَذَابَ
வேதனையை விட்டு
(of) the Hellfire
ٱلْجَحِيمِ
நரகத்தின்

Allazeena yahmiloonal 'Arsha wa man hawlahoo yusabbihoona bihamdi Rabbihim wa yu'minoona bihee wa yastaghfiroona lillazeena aamanoo Rabbanaa wasi'ta kulla shai'ir rahmantanw wa 'ilman faghfir lillazeena taaboo wattaba'oo sabeelaka wa qihim 'azaabal Jaheem (Ghāfir 40:7)

Abdul Hameed Baqavi:

எவர்கள், "அர்ஷை" சுமந்து கொண்டும், அதனைச் சூழவும் இருக்கின்றார்களோ அவர்கள், தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் துதி செய்தும், அவனை நம்பிக்கை கொண்டும், நம்பிக்கை கொண்டவர்களின் குற்றங்களை மன்னிக்கும்படி கோரியும் "எங்கள் இறைவனே! நீ ஞானத்தாலும் கருணையாலும் அனைவரையும்விட மிக்க விசாலமானவன். ஆகவே, (பாவங்களை விட்டு) விலகி உன்னுடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பளித்து, அவர்களை நரக வேதனையில் இருந்து நீ பாதுகாத்துக் கொள்வாயாக!" என்று பிரார்த்தித்துக் கொண்டும்,

English Sahih:

Those [angels] who carry the Throne and those around it exalt [Allah] with praise of their Lord and believe in Him and ask forgiveness for those who have believed, [saying], "Our Lord, You have encompassed all things in mercy and knowledge, so forgive those who have repented and followed Your way and protect them from the punishment of Hellfire. ([40] Ghafir : 7)

1 Jan Trust Foundation

அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனைத் தஸ்பீஹு செய்து கொண்டும் இருக்கிறார்கள்; அவன் மேல் ஈமான் கொண்டவர்களாக மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக மன்னிப்புக் கோருகின்றனர்| “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!