Wa yureekum Aayaatihee fa ayya Aayaatil laahi tunkiroon
இன்னும், அவன் உங்களுக்குத் தன்னுடைய (கணக்கற்ற) அத்தாட்சிகளைக் காண்பிப்பான். அல்லாஹ்வுடைய அந்த அத்தாட்சிகளில் எதைத்தான் நீங்கள் நிராகரிப்பீர்கள்?
Afalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qablihim; kaanoo aksara minhum wa ashadda quwwatanw wa aasaaran fil ardi famaaa aghnaa 'anhum maa kaanoo yaksiboon
(நிராகரிக்கும்) இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்க்க வில்லையா? அவ்வாறாயின், அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். அவர்களோ, இவர்களைவிட மக்கள் தொகையில் அதிகமானவர் களாகவும் பலத்தாலும், பூமியில் விட்டுச் சென்ற (பூர்வ) சின்னங்களாலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள். எனினும், அவர்கள் தேடி சேகரித்து வைத்திருந்தவைகளில் ஒன்றுமே அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
Falammaa jaaa'at hum Rusuluhum bilbaiyinaati farihoo bimaa 'indahum minal 'ilmi wa haaqa bihim maa kaanoo bihee yastahzi'oon
அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்த சமயத்தில் (அதனை அவர்கள் பரிகாசம் பண்ணி நிராகரித்துவிட்டு, இவ்வுலக வாழ்க்கைச் சம்பந்தமாகத்) தங்களிடமுள்ள கல்வி (தொழில்) திறமைகளைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள். எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.
Falammaa ra aw baasanaa qaalooo aamannaa billaahi wahdahoo wa kafarnaa bimaa kunnaa bihee mushrikeen
நம்முடைய வேதனையை அவர்கள் கண்ணால் கண்ட சமயத்தில் அவர்கள், "அல்லாஹ் ஒருவனையே நம்பிக்கை கொண்டு தாங்கள் இணை வைத்து வணங்கிய தெய்வங்களை நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.
Falam yaku tanfa 'uhum eemaanuhum lammaa ra-aw baasana sunnatal laahil latee qad khalat fee 'ibaadihee wa khasira hunaalikal kaafiroon
ஆயினும், நம்முடைய வேதனையைக் கண்ணால் கண்ட பின்னர், அவர்கள் கொண்ட நம்பிக்கை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. இதுவே, அல்லாஹ்வினுடைய வழி. (இதற்கு முன்னரும்) அவனுடைய அடியார்களில் (இவ்வாறே) நிகழ்ந்திருக்கின்றது. ஆதலால், (வேதனை இறங்கிய) அந்த நேரத்தில் நிராகரிப்பவர்கள் நஷ்டத்தையே அடைந்தார்கள்.