Skip to main content

إِذِ ٱلْأَغْلَٰلُ
அப்போது சங்கிலிகளும்
فِىٓ أَعْنَٰقِهِمْ
அவர்களின் கழுத்துகளில்
وَٱلسَّلَٰسِلُ
இன்னும் விலங்குகளும்
يُسْحَبُونَ
அவர்கள் இழுக்கப்படுவார்கள்

Izil aghlaalu feee a'naaqi-him wassalaasilu yashaboon

அவர்களுடைய கழுத்துக்களில் விலங்கிட்டு, சங்கிலிகளால் கட்டப்பட்டு (வேதனை செய்ய) இழுத்துக்கொண்டு போகப் படுவார்கள்.

Tafseer

فِى ٱلْحَمِيمِ
கொதிக்கின்ற நீரில்
ثُمَّ
பிறகு
فِى ٱلنَّارِ
நரக நெருப்பில்
يُسْجَرُونَ
அவர்கள் எரிக்கப்படுவார்கள்

Fil hameemi summa fin Naari Yasjaroon

(அவர்கள்) முதலில் கொதிக்கும் நீரின் பக்கமும், பின்னர் நரகத்திற்கும் (கொண்டு போகப்பட்டு, அதில்) எரிக்கப்படுவார்கள்.

Tafseer

ثُمَّ
பிறகு
قِيلَ
கூறப்படும்
لَهُمْ
அவர்களிடம்
أَيْنَ
எங்கே?
مَا كُنتُمْ
நீங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவை

Summaa qeela lahum ayna maa kuntum tushrikoon

பின்னர் அவர்களை நோக்கி "(அல்லாஹ்வுக்கு) இணையென்று நீங்கள் கூறிக்கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவை எங்கே?" என்று கேட்கப்படும்.

Tafseer

مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
ضَلُّوا۟
அவை தவறிவிட்டன
عَنَّا
எங்களை விட்டும்
بَل لَّمْ
மாறாக/நாங்கள் இருக்கவில்லையே!”
نَّدْعُوا۟
நாங்கள் வணங்குகின்றவர்களாக
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
شَيْـًٔاۚ
எதையும்
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
يُضِلُّ
வழிகெடுக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை

Min doonil laahi qaaloo dalloo 'annaa bal lam nakun nad'oo min qablu shai'aa; kazaalika yudillul laahul kaafireen

அதற்கவர்கள், "அவைகளெல்லாம் எங்களை விட்டும் மறைந்துவிட்டன. இதற்கு முன்னர் நாம் (அல்லாஹ் அல்லாத) யாதொன்றையுமே அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!" என்று (பொய்) கூறுவார்கள். இவ்வாறு நிராகரிப்பவர்களுக்கு(ப் புத்தி) தடுமாறும்படி அல்லாஹ் செய்துவிடுவான்.

Tafseer

ذَٰلِكُم بِمَا
இது/நீங்கள் இருந்த காரணத்தாலும்
تَفْرَحُونَ
மகிழ்ச்சி அடைபவர்களாக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
بِغَيْرِ ٱلْحَقِّ
அநியாயத்தைக் கொண்டு
وَبِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தாலும்
تَمْرَحُونَ
மமதை கொள்பவர்களாக

Zaalikum bimaa kuntum tafrahoona fil ardi bighairil haqqi wa bimaa kuntum tamrahoon

(பின்னர் அவர்களை நோக்கி) "பூமியில் நீங்கள் செய்த உண்மையற்றதைக் கொண்டு அளவுகடந்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருந்ததாலும், இறுமாப்போடு இருந்ததாலும் இதுவே உங்களுக்கு (தகுமான கூலியாகும்)" என்றும்,

Tafseer

ٱدْخُلُوٓا۟
நீங்கள் நுழையுங்கள்!
أَبْوَٰبَ
வாசல்களில்
جَهَنَّمَ
நரகத்தின்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக
فِيهَاۖ
அதில்
فَبِئْسَ
மிகக் கெட்டது
مَثْوَى
தங்குமிடம்
ٱلْمُتَكَبِّرِينَ
பெருமையடிப்பவர்களின்

Udkhulooo abwaaba Jahannama khaalideena feehaa fabi'sa maswal mutakabbireen

"நீங்கள் நரகத்தின் வாயில்களில் நுழையுங்கள். அதில் என்றென்றும் தங்கி விடுங்கள்" (என்றும் கூறப்படும்). கர்வம் கொண்ட இவர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது.

Tafseer

فَٱصْبِرْ
ஆகவே, பொறுமையாக இருப்பீராக!
إِنَّ وَعْدَ
நிச்சயமாக வாக்கு
ٱللَّهِ
அல்லாஹ்வின்
حَقٌّۚ
உண்மையானதே!
فَإِمَّا نُرِيَنَّكَ
ஒன்று/நாம் உங்களுக்கு காண்பிப்போம்
بَعْضَ
சிலதை
ٱلَّذِى نَعِدُهُمْ
அவர்களை நாம் எச்சரித்தவற்றில்
أَوْ نَتَوَفَّيَنَّكَ
அல்லது/ உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம்
فَإِلَيْنَا
நம் பக்கம்தான்
يُرْجَعُونَ
அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்

Fasbir inna wa'dal laahi haqq; fa immaa nuriyannak ba'dal lazee na'i duhum aw natawaffayannaka fa ilainaa yurja'oon

(நபியே!) நீங்கள் பொறுமையுடன் உறுதியாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது. அவர்களுக்கு பயமுறுத்தப்பட்ட வேதனைகளில் சிலவற்றை (உங்களது வாழ்நாளில்) நாம் உங்களுக்குக் காண்பித்தாலும் சரி அல்லது (அவை வருவதற்கு முன்னதாகவே) நாம் உங்களைக் கைப்பற்றி (நீங்கள் இறந்து) விட்டாலும் சரி (எவ்விதத்திலும்,) நிச்சயமாக அவர்கள் நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
رُسُلًا
பல தூதர்களை
مِّن قَبْلِكَ
உமக்கு முன்னர்
مِنْهُم
அவர்களில்
مَّن
எவரை (சிலரை)
قَصَصْنَا
நாம் விவரித்தோம்
عَلَيْكَ
உமக்கு
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّن
எவரை (சிலரை)
لَّمْ نَقْصُصْ
நாம்விவரிக்கவில்லை
عَلَيْكَۗ
உமக்கு
وَمَا كَانَ
முடியாது
لِرَسُولٍ
எந்த ஒரு தூதருக்கும்
أَن يَأْتِىَ
அவர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவதற்கு
إِلَّا
தவிர
بِإِذْنِ
அனுமதி கொண்டே
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
فَإِذَا جَآءَ
வந்துவிட்டால்
أَمْرُ
கட்டளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
قُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
بِٱلْحَقِّ
நீதமாக
وَخَسِرَ
நஷ்டமடைவார்(கள்)
هُنَالِكَ
அப்போது
ٱلْمُبْطِلُونَ
பொய்யர்கள்

Wa laqad arsalnaa Rusulam min qablika minhum man qasasnaa 'alaika wa minhum mal lam naqsus 'alaik; wa maa kaana li Rasoolin any yaatiya bi Aayatin illaa bi iznil laah; fa izaa jaaa'a amrul laahi qudiya bilhaqqi wa khasira hunaalikal mubtiloon

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு முன்னர் தூதர்கள் பலரை அனுப்பியிருக்கின்றோம். அவர்களில் சிலருடைய சரித்திரத்தையே நாம் உங்களுக்குக் கூறியிருக்கின்றோம். அவர்களில் பலருடைய சரித்திரத்தை நாம் உங்களுக்குக் கூறவில்லை. (இவ்விரு வகுப்பாரில்) எந்தத் தூதராயினும் சரி, அல்லாஹ்வினுடைய அனுமதியின்றி யாதொரு அத்தாட்சியைக் கொண்டு வருவது அவருக்குச் சாத்தியமானதல்ல. அல்லாஹ் வுடைய கட்டளை வரும் சமயத்தில் (அவர்களுக்கு) நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும். அதனைப் பொய்யாக்கியவர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்கு உள்ளாவார்கள்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِى
எப்படிப்பட்டவன்
جَعَلَ لَكُمُ
உங்களுக்காக படைத்தான்
ٱلْأَنْعَٰمَ
கால்நடைகளை
لِتَرْكَبُوا۟
நீங்கள் வாகனிப்பதற்காக
مِنْهَا
அவற்றில்
وَمِنْهَا
அவற்றில் சிலவற்றை
تَأْكُلُونَ
நீங்கள் புசிக்கின்றீர்கள்

Allaahul lazee ja'ala lakumul an'aama litarkaboo minhaa wa minhaa taakuloon

அல்லாஹ்தான் உங்களுக்காக ஆடு, மாடு, ஒட்டகங்களைப் படைத்திருக்கின்றான். (அவைகளில்) சிலவற்றின் மீது நீங்கள் சவாரி செய்கிறீர்கள்; சிலவற்றை நீங்கள் புசிக்கின்றீர்கள்.

Tafseer

وَلَكُمْ
இன்னும் உங்களுக்கு
فِيهَا
அவற்றில் உள்ளன
مَنَٰفِعُ
பல பலன்கள்
وَلِتَبْلُغُوا۟
இன்னும் நீங்கள்அடைவதற்காக
عَلَيْهَا
அதன் மூலம்
حَاجَةً
ஓர் ஆசையை
فِى صُدُورِكُمْ
உங்கள் நெஞ்சங்களில் உள்ள
وَعَلَيْهَا
இன்னும் அவற்றின் மீது(ம்)
وَعَلَى ٱلْفُلْكِ
கப்பலின் மீதும்
تُحْمَلُونَ
நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்

Wa lakum feehaa manaafi'u wa litablughoo 'alaihaa haajatan fee sudoorikum wa 'alaihaa wa 'alal fulki tuhmaloon

அவற்றில் உங்களுக்கு வேறு பல பயன்களும் இருக்கின்றன. உங்கள் மனதிலுள்ள கோரிக்கைகளை நீங்கள் அடைவதற்காக அதன் மீதும் கப்பலின் மீதும், (பல இடங்களுக்கும்) நீங்கள் சுமந்துகொண்டு செல்லப்படுகின்றீர்கள்.

Tafseer