Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௬

اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا سَوْفَ نُصْلِيْهِمْ نَارًاۗ كُلَّمَا نَضِجَتْ جُلُوْدُهُمْ بَدَّلْنٰهُمْ جُلُوْدًا غَيْرَهَا لِيَذُوْقُوا الْعَذَابَۗ اِنَّ اللّٰهَ كَانَ عَزِيْزًا حَكِيْمًا   ( النساء: ٥٦ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
those who
ٱلَّذِينَ
எவர்கள்
disbelieved
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
in Our Signs
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
soon We will burn them
سَوْفَ نُصْلِيهِمْ
அவர்களை எரிப்போம்
(in) a Fire
نَارًا
நரக நெருப்பில்
Every time
كُلَّمَا
போதெல்லாம்
are roasted
نَضِجَتْ
கனிந்து விட்டது
their skins
جُلُودُهُم
அவர்களின் தோல்கள்
We will change their
بَدَّلْنَٰهُمْ
அவர்களுக்கு மாற்றுவோம்
skins
جُلُودًا
தோல்களை
for other (than) that
غَيْرَهَا
அவை அல்லாத
so that they may taste
لِيَذُوقُوا۟
அவர்கள் சுவைப்பதற்கு
the punishment
ٱلْعَذَابَۗ
வேதனையை
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
is
كَانَ
இருக்கிறான்
All-Mighty
عَزِيزًا
மிகைத்தவனாக
All-Wise
حَكِيمًا
ஞானவானாக

Innal lazeena kafaroo bi Aayaatinaa sawfa nusleehim Naaran kullamaa nadijat julooduhum baddalnaahum juloodan ghairahaa liyazooqul 'azaab; innallaaha kaana 'Azeezan Hakeemaa (an-Nisāʾ 4:56)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்முடைய (இவ்வேத) வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் (மறுமையில்) நரகத்தில் சேர்த்து விடுவோம். அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக அவர்களுடைய தோல்கருகி விடும் போதெல்லாம் மற்றொரு புதிய தோலை மாற்றிக்கொண்டே இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடைய வாகவும் இருக்கின்றான்.

English Sahih:

Indeed, those who disbelieve in Our verses – We will drive them into a fire. Every time their skins are roasted through, We will replace them with other skins so they may taste the punishment. Indeed, Allah is ever Exalted in Might and Wise. ([4] An-Nisa : 56)

1 Jan Trust Foundation

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.