Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௫

وَاِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوْا حَكَمًا مِّنْ اَهْلِهٖ وَحَكَمًا مِّنْ اَهْلِهَا ۚ اِنْ يُّرِيْدَآ اِصْلَاحًا يُّوَفِّقِ اللّٰهُ بَيْنَهُمَا ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا خَبِيْرًا   ( النساء: ٣٥ )

And if you fear
وَإِنْ خِفْتُمْ
நீங்கள் பயந்தால்
a dissension
شِقَاقَ
பிளவை
between (the) two of them
بَيْنِهِمَا
அந்த இருவருக்குள்
then send
فَٱبْعَثُوا۟
ஏற்படுத்துங்கள்
an arbitrator
حَكَمًا
ஒரு தீர்ப்பாளரை
from
مِّنْ
இருந்து
his family
أَهْلِهِۦ
அவனின் உறவினர்
and an arbitrator
وَحَكَمًا
இன்னும் ஒரு தீர்ப்பாளரை
from
مِّنْ
இருந்து
her family
أَهْلِهَآ
அவளின் உறவினர்
If they both wish
إِن يُرِيدَآ
இருவரும் நாடினால்
reconciliation
إِصْلَٰحًا
சீர்திருத்தத்தை
will cause reconciliation
يُوَفِّقِ
ஒற்றுமை ஏற்படுத்துவான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
between both of them
بَيْنَهُمَآۗ
அந்த இருவருக்கிடையில்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
is
كَانَ
இருக்கிறான்
All-Knower
عَلِيمًا
நன்கறிந்தவனாக
All-Aware
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக

Wa in khiftum shiqaaqa baini himaa fab'asoo haka mam min ahlihee wa hakamam min ahlihaa; iny-yureedaaa islaah ai-yuwaffiqil laahu bainahumaa; innal laaha kaana 'Aleeman Khabeeraa (an-Nisāʾ 4:35)

Abdul Hameed Baqavi:

(கணவன் மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு ஏற்பட்டு) பிரிவினை ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சினால் அவன் உறவினர்களில் ஒருவரையும், அவள் உறவினர்களில் ஒருவரையும் நடுவர்களாக நீங்கள் ஏற்படுத்துங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் சமாதானம் ஏற்படுத்த விரும்பினால் கணவன் மனைவி இவ்விருவரையும் அல்லாஹ் ஒற்றுமையாக்கி விடுவான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) நன்கறிந்தவனும், கவனிப்பவனுமாக இருக்கின்றான்.

English Sahih:

And if you fear dissension between the two, send an arbitrator from his people and an arbitrator from her people. If they both desire reconciliation, Allah will cause it between them. Indeed, Allah is ever Knowing and Aware. ([4] An-Nisa : 35)

1 Jan Trust Foundation

(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் - நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.