Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧

يُوْصِيْكُمُ اللّٰهُ فِيْٓ اَوْلَادِكُمْ لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَيَيْنِ ۚ فَاِنْ كُنَّ نِسَاۤءً فَوْقَ اثْنَتَيْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ۗ وَلِاَبَوَيْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنْ لَّمْ يَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗٓ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنْ كَانَ لَهٗٓ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْۢ بَعْدِ وَصِيَّةٍ يُّوْصِيْ بِهَآ اَوْ دَيْنٍ ۗ اٰبَاۤؤُكُمْ وَاَبْنَاۤؤُكُمْۚ لَا تَدْرُوْنَ اَيُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ۗ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ ۗ اِنَّ اللّٰهَ كَانَ عَلِيْمًا حَكِيْمًا  ( النساء: ١١ )

Instructs you
يُوصِيكُمُ
உங்களுக்கு உபதேசிக்கிறான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
concerning your children
فِىٓ أَوْلَٰدِكُمْۖ
பிள்ளைகளில் /உங்கள்
for the male
لِلذَّكَرِ
ஆணுக்கு
like
مِثْلُ
போன்று
(the) portion (of) two females
حَظِّ ٱلْأُنثَيَيْنِۚ
பங்கு/இருபெண்கள்
But if there are
فَإِن كُنَّ
அவர்கள் இருந்தால்
(only) women
نِسَآءً
பெண்களாக
more (than)
فَوْقَ
மேல்
two
ٱثْنَتَيْنِ
இரு பெண்கள்
then for them
فَلَهُنَّ
அவர்களுக்கு உண்டு
two thirds
ثُلُثَا
மூன்றில் இரண்டு
(of) what he left
مَا تَرَكَۖ
எது/விட்டுச் சென்றார்
And if (there) is
وَإِن كَانَتْ
இருந்தால்
(only) one
وَٰحِدَةً
ஒருத்தியாக
then for her
فَلَهَا
அவளுக்கு
(is) half
ٱلنِّصْفُۚ
பாதி
And for his parents
وَلِأَبَوَيْهِ
இன்னும் அவருடைய தாய் தந்தைக்கு
for each one
لِكُلِّ وَٰحِدٍ
ஒவ்வொருவருக்கும்
of them
مِّنْهُمَا
அவ்விருவரிலிருந்து
a sixth
ٱلسُّدُسُ
ஆறில் ஒன்று
of what
مِمَّا
எதிலிருந்து
(is) left
تَرَكَ
விட்டுச் சென்றார்
if is
إِن كَانَ
இருந்தால்
for him
لَهُۥ
அவருக்கு
a child
وَلَدٌۚ
பிள்ளை
But if not is
فَإِن لَّمْ يَكُن
இல்லையெனில்
for him
لَّهُۥ
அவருக்கு
any child
وَلَدٌ
பிள்ளை
and inherit[ed] him
وَوَرِثَهُۥٓ
இன்னும் அவருக்கு வாரிசானார்
his parents
أَبَوَاهُ
அவருடைய தாய் தந்தை
then for his mother
فَلِأُمِّهِ
அவருடைய தாய்க்கு
(is) one third
ٱلثُّلُثُۚ
மூன்றில் ஒன்று
And if are
فَإِن كَانَ
இருந்தால்
for him
لَهُۥٓ
அவருக்கு
brothers and sisters
إِخْوَةٌ
சகோதரர்கள்
then for his mother
فَلِأُمِّهِ
அவருடைய தாய்க்கு
(is) the sixth
ٱلسُّدُسُۚ
ஆறில் ஒன்று
from after
مِنۢ بَعْدِ
பின்னர்
any will
وَصِيَّةٍ
மரண சாசனம்
he has made
يُوصِى
மரண சாசனம் கூறுகிறார்
[of which]
بِهَآ
அதை
or any debt
أَوْ دَيْنٍۗ
அல்லது கடன்
Your parents
ءَابَآؤُكُمْ
உங்கள் தந்தைகள்
and your children
وَأَبْنَآؤُكُمْ
பிள்ளைகள்/உங்கள்
not you know
لَا تَدْرُونَ
அறியமாட்டீர்கள்
which of them
أَيُّهُمْ
அவர்களில் யார்
(is) nearer
أَقْرَبُ
நெருங்கியவர்
to you
لَكُمْ
உங்களுக்கு
(in) benefit
نَفْعًاۚ
பலனளிப்பதில்
An obligation
فَرِيضَةً
சட்டமாகும்
from
مِّنَ
இருந்து
Allah
ٱللَّهِۗ
அல்லாஹ்
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
is
كَانَ
இருக்கிறான்
All-Knowing
عَلِيمًا
நன்கறிந்தவனாக
All-Wise
حَكِيمًا
மகா ஞானவானாக

Yooseekumul laahu feee awlaadikum liz zakari mislu hazzil unsayayn; fa in kunna nisaaa'an fawqas nataini falahunna suhusaa maa taraka wa in kaanat waahidatan falahan nisf; wa li abawaihi likulli waahidim minhumas sudusu mimmma taraka in kaana lahoo walad; fa il lam yakul lahowaladunw wa warisahooo abawaahu fali ummihis sulus; fa in kaana lahoo ikhwatun fali ummihis sudus; mim ba'di wasiyyatiny yoosee bihaaa aw dayn; aabaaa'ukum wa abnaaa'ukum laa tadroona aiyuhum aqrabu lakum naf'aa; fareedatam minallaah; innal laaha kaana 'Aleeman Hakeemaa (an-Nisāʾ 4:11)

Abdul Hameed Baqavi:

உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணன்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்.) உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆகவே இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.)

English Sahih:

Allah instructs you concerning your children [i.e., their portions of inheritance]: for the male, what is equal to the share of two females. But if there are [only] daughters, two or more, for them is two thirds of one's estate. And if there is only one, for her is half. And for one's parents, to each one of them is a sixth of his estate if he left children. But if he had no children and the parents [alone] inherit from him, then for his mother is one third. And if he had brothers [and/or sisters], for his mother is a sixth, after any bequest he [may have] made or debt. Your parents or your children – you know not which of them are nearest to you in benefit. [These shares are] an obligation [imposed] by Allah. Indeed, Allah is ever Knowing and Wise. ([4] An-Nisa : 11)

1 Jan Trust Foundation

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் - இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.