Skip to main content

وَلِلَّهِ
அல்லாஹ் விற்குரியனவே
مَا فِى
எவை/வானங்களில்
وَمَا
இன்னும் எவை
فِى ٱلْأَرْضِۗ
பூமியில்
وَلَقَدْ
திட்டவட்டமாக
وَصَّيْنَا
உபதேசித்தோம்
ٱلَّذِينَ
எவர்களுக்கு
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
مِن قَبْلِكُمْ
உங்களுக்கு முன்னர்
وَإِيَّاكُمْ
இன்னும் உங்களுக்கு
أَنِ ٱتَّقُوا۟
அஞ்சுங்கள்
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
وَإِن تَكْفُرُوا۟
நீங்கள் நிராகரித்தால்
فَإِنَّ لِلَّهِ
நிச்சயமாக அல்லாஹ்விற்கு
مَا فِى
எவை/வானங்களில்
وَمَا
இன்னும் எவை
فِى ٱلْأَرْضِۚ
பூமியில்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
غَنِيًّا
நிறைவானவனாக, மகா செல்வனாக
حَمِيدًا
புகழுக்குரியவனாக

Wa lillaahi maafis samaawaati wa maa fil ard; wa laqad wassainal lazeena ootul Kitaaba min qablikum wa iyyaakum anit taqul laah; wa intakfuroo fa inna lillaahi maa fis samaawaati wa maa fil ard; wa kaanal laahu Ghaniyyan hameedaa

(ஏனென்றால்) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்குரியனவே! (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் "அல்லாஹ் ஒருவனுக்கே பயப்படுங்கள்" என்றே நல்லுபதேசம் செய்திருக்கின்றோம். ஆகவே (அவனுக்கு) நீங்கள் மாறுசெய்தால் (அதனால் அவனுக்கொன்றும் நஷ்டமில்லை.) நிச்சயமாக வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்குரியனவாகவே இருக்கின்றன. அல்லாஹ் தேவையற்ற வனாகவும், (அனைவராலும்) புகழப்பட்டவனுமாக இருக்கின்றான்.

Tafseer

وَلِلَّهِ مَا
அல்லாஹ்விற்கே உரியன/எவை
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَمَا فِى
இன்னும் எவை
ٱلْأَرْضِۚ
பூமியில்
وَكَفَىٰ
போதுமானவன்
بِٱللَّهِ
அல்லாஹ்வே
وَكِيلًا
பொறுப்பாளனாக

Wa lillaahi maa fis samaawaati wa maa fil ard; wa kafaa billaahi Wakeelaa

வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (இவற்றிலுள்ள எதனைக் கொண்டும் உங்களுக்கு உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமான பொறுப்பாளியாக இருக்கின்றான்.

Tafseer

إِن يَشَأْ
அவன் நாடினால்
يُذْهِبْكُمْ
போக்கி விடுவான்/உங்களை
أَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
وَيَأْتِ
இன்னும் வருவான்
بِـَٔاخَرِينَۚ
மற்றவர்களைக் கொண்டு
وَكَانَ
இன்னும் இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ
மீது
ذَٰلِكَ
அது
قَدِيرًا
பேராற்றலுடையவனாக

Iny-yashaa yuzhibkum aiyuhan naasu wa yaati bi aakhareen; wa kaanal laahu 'alaa zaalika Qadeeraa

மனிதர்களே! அவன் விரும்பினால் உங்களை அழித்து (உங்களுக்குப் பதிலாக) வேறு மனிதர்களைக் கொண்டு வந்து விடுவான். அல்லாஹ் இவ்வாறு செய்ய ஆற்றலுடையவனாகவே இருக்கின்றான்.

Tafseer

مَّن كَانَ
எவர்/இருந்தார்
يُرِيدُ
நாடுகிறார்
ثَوَابَ
பலனை
ٱلدُّنْيَا
இவ்வுலகத்தின்
فَعِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ثَوَابُ
பலன்
ٱلدُّنْيَا
இவ்வுலகத்தின்
وَٱلْءَاخِرَةِۚ
இன்னும் மறுமையின்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعًۢا
நன்கு செவியுறுபவனாக
بَصِيرًا
உற்று நோக்குபவனாக

man kaana yureedu sawaabad dunyaa fa'indallaahi sawaabud dunyaa wal Aakhirah; wa kaanal laahu Samee'am Baseeraa

(நம்பிக்கையாளர்களே!) இம்மையின் பலனை மட்டும் எவன் விரும்புவான்? அல்லாஹ்விடத்திலோ இம்மை மற்றும் மறுமையின் பலன் இருக்கின்றது. அல்லாஹ் (ஒவ்வொருவரின் பிரார்த்தனை யையும்) செவியுறுபவனாகவும், (ஒவ்வொருவரின் உள்ளத்தையும்) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
قَوَّٰمِينَ
நிலைநிறுத்துபவர்களாக
بِٱلْقِسْطِ
நீதத்தை
شُهَدَآءَ
சாட்சி கூறுபவர்களாக
لِلَّهِ
அல்லாஹ்விற்காக
وَلَوْ
இருப்பினும்
عَلَىٰٓ
எதிராக
أَنفُسِكُمْ
உங்களுக்கு
أَوِ
அல்லது
ٱلْوَٰلِدَيْنِ
பெற்றோருக்கு
وَٱلْأَقْرَبِينَۚ
இன்னும் உறவினர்களுக்கு
إِن يَكُنْ
அவர் இருந்தால்
غَنِيًّا
ஒரு செல்வந்தனாக
أَوْ
அல்லது
فَقِيرًا
ஓர் ஏழையாக
فَٱللَّهُ
அல்லாஹ்
أَوْلَىٰ
மிக ஏற்றமானவன்
بِهِمَاۖ
அவ்விருவருக்கும்
فَلَا تَتَّبِعُوا۟
பின்பற்றாதீர்கள்
ٱلْهَوَىٰٓ
ஆசைகளை
أَن تَعْدِلُوا۟ۚ
நீங்கள் நீதி செலுத்துவதில்
وَإِن تَلْوُۥٓا۟
நீங்கள் மாற்றினால்
أَوْ
அல்லது
تُعْرِضُوا۟
புறக்கணித்தால்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
بِمَا
எதை
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
خَبِيرًا
ஆழ்ந்தறிந்தவனாக

Yaa aiyuhal lazeena aamanoo koonoo qawwa ameena bilqisti shuhadaaa'a lillaahi wa law 'alaa anfusikum awil waalidaini wal aqrabeen iny yakun ghaniyyan aw faqeeran fallaahu awlaa bihimaa falaaa tattabi'ul hawaaa an ta'diloo; wa in talwooo aw tu'ridoo fa innal laaha kaana bimaa ta'maloona Khabeera

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சி கூறினால் அது) உங்களுக்கோ, உங்கள் தாய், தந்தைக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தபோதிலும் அல்லாஹ்வுக்காக (உண்மையையே) சாட்சி கூறுபவர்களாக இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகிறீர்களோ) அவர் பணக்காரராயினும் ஏழையாயினும் (உண்மையையே கூறுங்கள். ஏனென்றால்) அல்லாஹ் அவ்விருவருக்குமே (உதவி செய்ய) மிகத் தகுதியானவன். ஆகவே, நீங்கள் (உங்கள்) ஆசை (அபிலாஷை)களைப் பின்பற்றி வரம்பு மீறாதீர்கள்! (பரிவு அல்லது குரோதத்தை முன்னிட்டு) நீங்கள் தவறாக (சாட்சி) கூறினாலும் அல்லது (சாட்சி) கூற மறுத்தாலும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய (இத்தவறான) செயலை நன்கறிந்து கொள்வான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே!
ءَامِنُوا۟
நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرَسُولِهِۦ
இன்னும் அவனின் தூதரை
وَٱلْكِتَٰبِ ٱلَّذِى
இன்னும் வேதத்தை/எது
نَزَّلَ
இறக்கினான்
عَلَىٰ
மீது
رَسُولِهِۦ
தன் தூதர்
وَٱلْكِتَٰبِ
இன்னும் வேதத்தை
ٱلَّذِىٓ
எது
أَنزَلَ
இறக்கினான்
مِن قَبْلُۚ
முன்னர்
وَمَن
எவர்
يَكْفُرْ
நிராகரிப்பார்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَمَلَٰٓئِكَتِهِۦ
இன்னும் அவனின் வானவர்களை
وَكُتُبِهِۦ
இன்னும் அவனின் வேதங்களை
وَرُسُلِهِۦ
இன்னும் அவனின் தூதர்களை
وَٱلْيَوْمِ
இன்னும் நாளை
ٱلْءَاخِرِ
மறுமை
فَقَدْ
திட்டமாக
ضَلَّ
வழிகெட்டார்
ضَلَٰلًۢا
வழிகேடாக
بَعِيدًا
தூரமானது

Yaaa aiyuhal lazeena aamanooo aaminoo billaahi wa Rasoolihee wal Kitaabil lazee nazzala 'alaa Rasoolihee wal Kitaabil lazeee anzala min qabl; wa mai yakfur billaahi wa Malaaa'ikatihee wa Kutubihee wa Rusulihee wal Yawmil Aakhiri faqad dalla dalaalam ba'eedaa

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது அருளிய இவ்வேதத்தையும், இதற்கு முன்னர் அவன் அருளிய வேதங்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவன் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும், இறுதி நாளையும் நிராகரிக்கின்றானோ அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில்தான் செல்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
ثُمَّ
பிறகு
كَفَرُوا۟
நிராகரித்தனர்
ثُمَّ
பிறகு
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
ثُمَّ
பிறகு
كَفَرُوا۟
நிராகரித்தனர்
ثُمَّ
பிறகு
ٱزْدَادُوا۟
அதிகப்படுத்தினார்கள்
كُفْرًا
நிராகரிப்பை
لَّمْ يَكُنِ
இருக்கவில்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيَغْفِرَ
அவன் மன்னிப்பதற்கு
لَهُمْ
அவர்களை
وَلَا
இன்னும் இல்லை
لِيَهْدِيَهُمْ
நேர்வழிகாட்டுவதற்கு/அவர்களை
سَبِيلًۢا
ஒரு வழியை

Innal lazeena aamanoo summa kafaroo summa aamanoo summa kafaroo summaz daado kufral lam yakunil laahu liyaghfira lahum wa laa liyahdiyahum sabeelaa

எவர்கள், நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து, பின்னர் நம்பிக்கை கொண்டு (அதன்) பின்னரும் நிராகரித்து (அந்த) நிராகரிப்பையே மென்மேலும் அதிகரிக்கின்றார்களோ அவர்(களின் குற்றங்)களை நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பதில்லை. அன்றி, (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) அவர்களை நேரான பாதையில் செலுத்தவுமாட்டான்.

Tafseer

بَشِّرِ
நற்செய்தி கூறுவீராக
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களுக்கு
بِأَنَّ
நிச்சயமாக/என்று
لَهُمْ
அவர்களுக்கு
عَذَابًا
வேதனை
أَلِيمًا
துன்புறுத்துகின்ற

Bashshiril munaafiqeena bi anna lahum 'azaaban aleemaa

(நபியே!) "இத்தகைய நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக உண்டு" என்று நீங்கள் அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள்.

Tafseer

ٱلَّذِينَ يَتَّخِذُونَ
எவர்கள்/எடுத்துக் கொள்கிறார்கள்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களாக
مِن دُونِ
அன்றி
ٱلْمُؤْمِنِينَۚ
நம்பிக்கையாளர்களை
أَيَبْتَغُونَ
தேடுகின்றார்களா?
عِندَهُمُ
அவர்களிடம்
ٱلْعِزَّةَ
கண்ணியத்தை
فَإِنَّ ٱلْعِزَّةَ
நிச்சயமாக கண்ணியம்
لِلَّهِ
அல்லாஹ்வுக்குரியதே
جَمِيعًا
அனைத்தும்

Allazeena yattakhizoo nal kaafireena awliyaaa'a min doonil mu'mineen; a-yabta ghoona 'indahumul 'izzata fainnnal 'izzata lillaahi jamee'aa

இவர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களையே (தங்கள்) நண்பர்களாகவும் எடுத்துக் கொண்டார்கள். இவர்கள் அவர்களிடத்தில் கண்ணியத்தை(யடைய) விரும்புகின்றார்களா? நிச்சயமாக கண்ணியங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவர்களுக்குரியனவல்ல.)

Tafseer

وَقَدْ نَزَّلَ
இறக்கி விட்டான்
عَلَيْكُمْ
உங்கள் மீது
فِى ٱلْكِتَٰبِ
வேதத்தில்
أَنْ
என்று
إِذَا سَمِعْتُمْ
நீங்கள் செவியுற்றால்
ءَايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يُكْفَرُ
நிராகரிக்கப்படுகிறது
بِهَا
அவற்றை
وَيُسْتَهْزَأُ
இன்னும் பரிகசிக்கப்படுகிறது
بِهَا
அவற்றை
فَلَا تَقْعُدُوا۟
உட்காராதீர்கள்
مَعَهُمْ
அவர்களுடன்
حَتَّىٰ
வரை
يَخُوضُوا۟
ஈடுபடுவார்கள்
فِى حَدِيثٍ
பேச்சில்
غَيْرِهِۦٓۚ
அது அல்லாத வேறு
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
إِذًا
அப்போது
مِّثْلُهُمْۗ
அவர்களைப் போன்று
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
جَامِعُ
ஒன்று சேர்ப்பான்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
وَٱلْكَٰفِرِينَ
இன்னும் நிராகரிப்பவர்களை
فِى جَهَنَّمَ
நரகத்தில்
جَمِيعًا
அனைவரையும்

Wa qad nazzala 'alaikum fil Kitaabi an izaa sami'tum Aayaatil laahi yukfaru bihaa wa yustahza u bihaa falaa taq'udoo ma'ahum hattaa yakhoodoo fee hadeesin ghairih; innakum izam misluhum; innal laaha jaami'ul munaafiqeena wal kaafireena fee jahannama jamee'aa

நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.

Tafseer