Fa asaabahum saiyi aatu maa kasaboo; wallazeena zalamoo min haaa'ulaaa'i sa yuzeebuhum saiyi aatu maa kasaboo wa maa hum bimu'jizeen (az-Zumar 39:51)
Abdul Hameed Baqavi:
அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீய பலன்கள்தாம் அவர்களை வந்தடைந்தன. அன்றி, (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கின்றார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீய பலன் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது.
English Sahih:
And the evil consequences of what they earned struck them. And those who have wronged of these [people] will be struck [i.e., afflicted] by the evil consequences of what they earned; and they will not cause failure. ([39] Az-Zumar : 51)
1 Jan Trust Foundation
ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது; இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் அநியாயம் செய்தவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்.