Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௩௮

وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ اللّٰهُ ۗ قُلْ اَفَرَءَيْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اِنْ اَرَادَنِيَ اللّٰهُ بِضُرٍّ هَلْ هُنَّ كٰشِفٰتُ ضُرِّهٖٓ اَوْ اَرَادَنِيْ بِرَحْمَةٍ هَلْ هُنَّ مُمْسِكٰتُ رَحْمَتِهٖۗ قُلْ حَسْبِيَ اللّٰهُ ۗعَلَيْهِ يَتَوَكَّلُ الْمُتَوَكِّلُوْنَ   ( الزمر: ٣٨ )

And if you ask them
وَلَئِن سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
who
مَّنْ
யார்
created
خَلَقَ
படைத்தான்
the heavens
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
and the earth?
وَٱلْأَرْضَ
பூமியையும்
Surely, they will say
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
"Allah"
ٱللَّهُۚ
அல்லாஹ்
Say
قُلْ
கூறுவீராக!
"Then do you see
أَفَرَءَيْتُم
நீங்கள் அறிவியுங்கள்!
what you invoke
مَّا تَدْعُونَ
நீங்கள் அழைப்பவைப் பற்றி
besides besides Allah?
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
if Allah intended for me
إِنْ أَرَادَنِىَ
எனக்கு நாடினால்
Allah intended for me
ٱللَّهُ
அல்லாஹ்
harm
بِضُرٍّ
ஒரு தீங்கை
are they removers
هَلْ هُنَّ كَٰشِفَٰتُ
அவை நீக்கக்கூடியவையா?
(of) harm (from) Him
ضُرِّهِۦٓ
அவனது தீங்கை
or
أَوْ
அல்லது
if He intended for me
أَرَادَنِى
அவன் எனக்கு நாடினால்
mercy
بِرَحْمَةٍ
ஓர் அருளை
are they withholders
هَلْ هُنَّ مُمْسِكَٰتُ
அவை தடுத்துவிடக் கூடியவையா?
(of) His mercy?"
رَحْمَتِهِۦۚ
அவனது அருளை
Say
قُلْ
கூறுவீராக!
"Sufficient (is) Allah for me "Sufficient (is) Allah for me
حَسْبِىَ ٱللَّهُۖ
அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
upon Him
عَلَيْهِ
அவன் மீதே
put trust
يَتَوَكَّلُ
நம்பிக்கை வைக்கட்டும்
those who trust"
ٱلْمُتَوَكِّلُونَ
நம்பிக்கை வைப்பவர்கள்

Wa la'in sa altahum man khalaqas samaawaati wal arda la yaqoolunal laah; qul afara'aitum maa tad'oona min doonil laahi in araadaniyal laahu bidurrin hal hunna kaashi faatu durriheee aw araadanee birahmatin hal hunna mumsikaatu rahmatih; qul hasbiyal laahu 'alaihi tatawakkalul mutawakkiloon (az-Zumar 39:38)

Abdul Hameed Baqavi:

(நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். பின்னும், (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் எனக்கு யாதொரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக் கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்."

English Sahih:

And if you asked them, "Who created the heavens and the earth?" they would surely say, "Allah." Say, "Then have you considered what you invoke besides Allah? If Allah intended me harm, are they removers of His harm; or if He intended me mercy, are they withholders of His mercy?" Say, "Sufficient for me is Allah; upon Him [alone] rely the [wise] reliers." ([39] Az-Zumar : 38)

1 Jan Trust Foundation

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று நீர் அவர்களைக் கேட்பீர்களாயின்| “அல்லாஹ் தான்!” என்று அவர்கள் நிச்சயமாகக் கூறுவார்கள்; (நபியே!) நீர் சொல்வீராக| “அல்லாஹ் எனக்கு ஏதேனும் ஒரு கெடுதி செய்ய நாடினால் நீங்கள் (பிரார்த்தித்து) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவை அக்கெடுதியை நீக்கிவிட முடியுமா? அல்லது அவன் எனக்கு ரஹ்மத் செய்ய நாடினால்| அவனுடைய (அந்த) ரஹ்மத்தை அவை தடுத்துவிட முடியுமா? என்பதை நீங்கள் கவனித்தீர்களா?” (நபியே!) மேலும் நீர் கூறுவீராக| “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; உறுதியாக நம்பிக்கை வைப்போரெல்லாம், அவன் மீதே உறுதியாக நம்பிக்கை கொள்ளல் வேண்டும்.”