Skip to main content

وَسِيقَ
ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள்
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
إِلَىٰ جَهَنَّمَ
நரகத்தின் பக்கம்
زُمَرًاۖ
கூட்டம் கூட்டமாக
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَآءُوهَا
அதற்கு அவர்கள் வந்தவுடன்
فُتِحَتْ
திறக்கப்படும்
أَبْوَٰبُهَا
அதன் வாசல்கள்
وَقَالَ
இன்னும் கூறுவார்கள்
لَهُمْ
அவர்களுக்கு
خَزَنَتُهَآ
அதன் காவலாளிகள்
أَلَمْ يَأْتِكُمْ
உங்களுக்கு வரவில்லையா?
رُسُلٌ
தூதர்கள்
مِّنكُمْ
உங்களில் இருந்தே
يَتْلُونَ
ஓதிக் காட்டினார்களே
عَلَيْكُمْ
உங்களுக்கு
ءَايَٰتِ
வசனங்களை
رَبِّكُمْ
உங்கள் இறைவனின்
وَيُنذِرُونَكُمْ
இன்னும் உங்களை எச்சரித்தார்களே
لِقَآءَ يَوْمِكُمْ
நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
بَلَىٰ
ஏன் வரவில்லை
وَلَٰكِنْ
எனினும்
حَقَّتْ
உறுதியாகி விட்டது
كَلِمَةُ
வாக்கு
ٱلْعَذَابِ
வேதனையின்
عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்கள் மீது

Wa seeqal lazeena kafaroon ilaa jahannama zumaran battaaa izaa jaaa'oohaa futihat abwaabuhaa wa qaala lahum khazanatuhaaa alam yaatikum Rusulum minkum yatloona 'alaikum Aayaati Rabbikum wa yunziroonakum liqaaa'a Yawmikum haazaa; qaaloo balaa wa laakin haqqat kalimatul 'azaabi 'alal kaafireen

(அந்நாளில்) நிராகரித்தவர்கள் அனைவரும், கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டி வரப்படுவார்கள். (அதன் சமீபமாக) அவர்கள் வந்தவுடன், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு விடும். அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களில் இருந்து அல்லாஹ்வுடைய தூதர் உங்களிடம் வரவில்லையா? உங்கள் இறைவனுடைய வசனங்களை அவர் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கவில்லையா? இந்நாளை நீங்கள் சந்திக்க வேண்டியதைப் பற்றி, அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! (வந்தார்கள்)" என்றே சொல்வார்கள். (ஆயினும், அது பயன் அளிக்காது. ஏனென்றால்,) நிராகரிப்பவர்களுக்கு வேதனையைப் பற்றிய தீர்ப்பு உறுதியாகி விட்டது.

Tafseer

قِيلَ
கூறப்படும்
ٱدْخُلُوٓا۟
நீங்கள் நுழையுங்கள்!
أَبْوَٰبَ
வாசல்களில்
جَهَنَّمَ
நரகத்தின்
خَٰلِدِينَ
நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள்
فِيهَاۖ
அதில்
فَبِئْسَ
மிகக் கெட்டது
مَثْوَى
தங்குமிடம்
ٱلْمُتَكَبِّرِينَ
பெருமையடிப்பவர்களின்

Qeelad khuloo abwaaba jahannama khaalideena feeha fabi'sa maswal mutakabbireen

ஆகவே, "நரகத்தின் வாயில்களில் நீங்கள் நுழைந்து விடுங்கள். என்றென்றுமே நீங்கள் அதில் தங்கிவிடுங்கள்" என்று கூறப்படும். ஆகவே, கர்வம்கொண்ட இவர்கள் தங்குமிடம் மகா கெட்டது.

Tafseer

وَسِيقَ
கொண்டு வரப்படுவார்(கள்)
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
அஞ்சியவர்களை
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
إِلَى ٱلْجَنَّةِ
சொர்க்கத்திற்கு
زُمَرًاۖ
கூட்டம் கூட்டமாக
حَتَّىٰٓ
இறுதியாக
إِذَا جَآءُوهَا
அதற்கருகில் அவர்கள் வரும்போது
وَفُتِحَتْ
இன்னும் திறக்கப்படும்
أَبْوَٰبُهَا
அதன் வாசல்கள்
وَقَالَ
கூறுவார்கள்
لَهُمْ
அவர்களுக்கு
خَزَنَتُهَا
அதன் காவலாளிகள்
سَلَٰمٌ
ஈடேற்றம் உண்டாகட்டும்
عَلَيْكُمْ
உங்களுக்கு
طِبْتُمْ
நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள்
فَٱدْخُلُوهَا
ஆகவே, இதில் நுழைந்து விடுங்கள்!
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்களாக

Wa seeqal lazeenat taqaw Rabbahum ilal Jannati zumaran hattaaa izaa jaaa'oohaa wa futihat abwaabuhaa wa qaala lahum khazanatuhaa salaamun 'alaikum tibtum fadkhuloohaa khaalideen

எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள், (அந்நாளில் கூட்டம் கூட்டமாகச் சுவர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, "உங்களுக்கு சாந்தியும் சமாதானமும், உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கி விடுங்கள்" என்று கூறுவார்கள்.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்விற்கே!
ٱلَّذِى صَدَقَنَا
எவன்/எங்களுக்கு உண்மையாக்கினான்
وَعْدَهُۥ
தனது வாக்கை
وَأَوْرَثَنَا
இன்னும் எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான்
ٱلْأَرْضَ
இந்த பூமியை
نَتَبَوَّأُ
நாங்கள் தங்குவோம்
مِنَ ٱلْجَنَّةِ
இந்த சொர்க்கத்தில்
حَيْثُ نَشَآءُۖ
நாங்கள் நாடிய இடத்தில்
فَنِعْمَ
மிகச் சிறந்ததாகும்
أَجْرُ
கூலி
ٱلْعَٰمِلِينَ
நல்லமல் செய்வோரின்

Wa waalull hamdulillaahil lazee sadaqanaa wa'dahoo wa awrasanal arda natabaw wa-u minal jannati haisu nashaaa'u fani'ma ajrul 'aamileen

அதற்கவர்கள், "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! அவன் தன்னுடைய வாக்குறுதியை எங்களுக்கு உண்மையாக்கி வைத்தான். சுவனபதியில் நாங்கள் விரும்பிய இடமெல்லாம் சென்றிருக்க அதன் பூமியை எங்களுக்குச் சொந்தமாக்கி வைத்தான்" என்று கூறுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலி இவ்வாறு நன்மையாகவே முடியும்.

Tafseer

وَتَرَى
பார்ப்பீர்கள்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
حَآفِّينَ
சூழ்ந்தவர்களாக
مِنْ حَوْلِ
சுற்றி
ٱلْعَرْشِ
அர்ஷை
يُسَبِّحُونَ
அவர்கள் துதிப்பார்கள்
بِحَمْدِ
புகழை
رَبِّهِمْۖ
தங்கள் இறைவனின்
وَقُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
بِٱلْحَقِّ
சத்தியமான முறையில்
وَقِيلَ
கூறப்படும்
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِ
அல்லாஹ்வுக்கே
رَبِّ
இறைவனாகிய
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Wa taral malaaa'ikata haaaffeena min hawlil 'Arshi yusabbihoona bihamdi Rabbihim wa qudiya bainahum bilhaqqi wa qeelal hamdu lillaahi Rabbil 'aalameen

(நபியே! அந்நாளில்) மலக்குகள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து, துதி செய்தவண்ணம் "அர்ஷை" சூழ்ந்து நிற்பதை நீங்கள் காண்பீர்கள். அச்சமயம் அவர்களுக்கிடையில் நியாயமாகவே தீர்ப்பளிக்கப்பட்டு, "அகிலத்தார் அனைவரின் இறைவனான அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் சொந்தமானது" என்று (அனைவராலும் துதி செய்து) புகழ்ந்து கூறப்படும்.

Tafseer