Skip to main content

وَيُنَجِّى
இன்னும் பாதுகாப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ ٱتَّقَوْا۟
அல்லாஹ்வை அஞ்சியவர்களை
بِمَفَازَتِهِمْ
அவர்களின் நல்லமல்களினால்
لَا يَمَسُّهُمُ
அவர்களுக்கு ஏற்படாது
ٱلسُّوٓءُ
எந்தத் தீங்கும்
وَلَا هُمْ
இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்

Wa yunajjil laahul lazee nat taqaw bimafaazatihim laa yamassuhumus sooo'u wa laa hum uahzanoon

எவர்கள் (பாவங்களிலிருந்து) முற்றிலும் (முழுமையாக) விலகிக்கொண்டார்களோ அவர்களை யாதொரு தீங்கும் அணுகாது அல்லாஹ் பாதுகாத்துக் கொள்வான்; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்தான்
خَٰلِقُ
படைத்தவன்
كُلِّ شَىْءٍۖ
எல்லாவற்றையும்
وَهُوَ
அவன்தான்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றையும்
وَكِيلٌ
பாதுகாப்பவன்

Allaahu khaaliqu kulli shai'inw wa Huwa 'alaa kulli shai'inw Wakeel

அல்லாஹ்வே எல்லா பொருள்களையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறுப்பாளன்.

Tafseer

لَّهُۥ
அவனுக்கே உரியன
مَقَالِيدُ
பொக்கிஷங்களின் சாவிகள்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி(யிலுள்ள)
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
بِـَٔايَٰتِ
அத்தாட்சிகளை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْخَٰسِرُونَ
(உண்மையான) நஷ்டவாளிகள்

Lahoo maqaaleedus sa maawaati wal ard; wallazeena kafaroo bi ayaatil laahi ulaaa'ika humul khaasiroon

வானங்கள் பூமியிலுள்ள (பொக்கிஷம் முதலிய)வைகளின் சாவி அவனிடமே இருக்கின்றது. ஆகவே, அல்லாஹ்வின் வசனங்களை எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே!

Tafseer

قُلْ
கூறுவீராக!
أَفَغَيْرَ
அல்லாதவர்களையா?
ٱللَّهِ
அல்லாஹ்
تَأْمُرُوٓنِّىٓ
என்னை ஏவுகிறீர்கள்
أَعْبُدُ
நான் வணங்க வேண்டும் என்று
أَيُّهَا ٱلْجَٰهِلُونَ
முட்டாள்களே!

Qul afaghairal laahi taamurooonneee a'budu ayyuhal jaahiloon

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மூடர்களே! அல்லாஹ் அல்லாதவைகளையா வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகின்றீர்கள்?"

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
أُوحِىَ
வஹீ அறிவிக்கப்பட்டது
إِلَيْكَ
உமக்கு(ம்)
وَإِلَى ٱلَّذِينَ
உமக்கு முன்னுள்ளவர்களுக்கும்
لَئِنْ أَشْرَكْتَ
நீர் இணைவைத்தால்
لَيَحْبَطَنَّ
நாசமாகிவிடும்
عَمَلُكَ
உமது அமல்கள்
وَلَتَكُونَنَّ
இன்னும் நீர் ஆகிவிடுவீர்
مِنَ ٱلْخَٰسِرِينَ
நஷ்டவாளிகளில்

Wa laqad oohiya ilaika wa ilal lazeena min qablika la in ashrakta la yahbatanna 'amalu ka wa latakoonanna minal khaasireen

(நபியே!) உங்களுக்கும், உங்களுக்கு முன்னிருந்த ஒவ்வொரு (தூது)வருக்கும் மெய்யாகவே வஹீ மூலம் அறிவிக்கப் பட்டது. (என்னவென்றால், இறைவனுக்கு) நீங்கள் இணைவைத்தால், உங்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்து, நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிடுவீர்கள் (என்பதாகும்).

Tafseer

بَلِ ٱللَّهَ
மாறாக/அல்லாஹ்வை
فَٱعْبُدْ
நீர் வணங்குவீராக!
وَكُن
இன்னும் நீர்ஆகிவிடுவீராக!
مِّنَ ٱلشَّٰكِرِينَ
நன்றிசெலுத்துவோரில்

Balil laahha fa'bud wa kum minash shaakireen

ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துபவராகவும் இருந்து வாருங்கள்.

Tafseer

وَمَا قَدَرُوا۟
அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை
ٱللَّهَ
அல்லாஹ்வை
حَقَّ
முறையில்
قَدْرِهِۦ
அவனை கண்ணியப்படுத்தவேண்டிய
وَٱلْأَرْضُ
பூமி
جَمِيعًا
அனைத்தும்
قَبْضَتُهُۥ
அவனது கைப்பிடியில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
وَٱلسَّمَٰوَٰتُ
இன்னும் வானங்கள்
مَطْوِيَّٰتٌۢ
சுருட்டப்பட்டதாக இருக்கும்
بِيَمِينِهِۦۚ
அவனதுவலக்கையில்
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
وَتَعَٰلَىٰ
இன்னும் அவன் மிக உயர்ந்தவன்
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டு

Wa maa qadarul laaha haqqa qadrihee wal ardu jamee 'an qabdatuhoo Yawmal Qiyaamit wassamaawaatu matwiyyaatum biyameenih; Subhaanahoo wa Ta'aalaa 'amma yushrikoon

(நபியே!) அல்லாஹ்வின் (மேலான) தகுதிக்குத் தக்கவாறு அவனை அவர்கள் கண்ணியப்படுத்துவதில்லை. பூமி (இவ்வளவு பெரிதாக இருந்தபோதிலும் அது) முழுவதும் மறுமையில் அவனுடைய ஒரு கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அனைத்தும் சுருட்டப்பட்டு அவனுடைய வலது கையில் இருக்கும். இவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக மேலானவன்; அவன் மிக பரிசுத்தமானவன்.

Tafseer

وَنُفِخَ
ஊதப்படும்
فِى ٱلصُّورِ
சூரில்
فَصَعِقَ
இறந்து விடுவார்(கள்)
مَن فِى
வானங்களில் உள்ளவர்களும்
وَمَن فِى
இன்னும் பூமியில் உள்ளவர்களும்
إِلَّا مَن
நாடியவர்களைத்தவிர
ٱللَّهُۖ
அல்லாஹ்
ثُمَّ نُفِخَ
பிறகு ஊதப்படும்
فِيهِ
அதில்
أُخْرَىٰ
மற்றொரு முறை
فَإِذَا هُمْ
அப்போது அவர்கள்
قِيَامٌ
எழுந்து நின்று
يَنظُرُونَ
பார்ப்பார்கள்

Wa nufikha fis Soori fas'iqa man fis samaawaati wa man fil ardi illaa man shaa'al lahu summa nufikha feehi ukhraa fa izaa hum qiyaamuny yanzuroon

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர் களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து) விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (இறைவனை) எதிர் நோக்கி நிற்பார்கள்.

Tafseer

وَأَشْرَقَتِ
பிரகாசிக்கும்
ٱلْأَرْضُ
பூமி
بِنُورِ
ஒளியால்
رَبِّهَا
தனது இறைவனின்
وَوُضِعَ
வைக்கப்படும்
ٱلْكِتَٰبُ
புத்தகம்
وَجِا۟ىٓءَ
கொண்டு வரப்படுவார்(கள்)
بِٱلنَّبِيِّۦنَ
நபிமார்கள்
وَٱلشُّهَدَآءِ
இன்னும் ஷஹீதுகள்
وَقُضِىَ
தீர்ப்பளிக்கப்படும்
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
بِٱلْحَقِّ
நீதமாக
وَهُمْ
அவர்கள்
لَا يُظْلَمُونَ
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Wa ashraqatil ardu binoori Rabbihaa wa wudi'al Kitaabu wa jeee'a bin nabiyyeena wash shuhadaaa'i wa qudiya bainahum bilhaqqi wa hum laa yuzlamoon

இறைவனின் ஒளியைக் கொண்டு பூமி பிரகாசிக்கும். (அவரவர்களின்) தினசரிக் குறிப்பு (அவரவர்கள் முன்) வைக்கப் பட்டுவிடும். நபிமார்களையும், இவர்களுடைய (மற்ற) சாட்சியங் களையும் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கிடையில் நீதமாகத் தீர்ப்பளிக்கப்படும். (அவர்களுடைய நன்மையில் ஒரு அணுவளவேனும் குறைத்தோ, பாவத்தில் ஒரு அணுவளவேனும் அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

وَوُفِّيَتْ
முழுமையாக கூலி வழங்கப்படும்
كُلُّ
ஒவ்வோர்
نَفْسٍ
ஆன்மாவும்
مَّا عَمِلَتْ
தாம் செய்தவற்றுக்கு
وَهُوَ أَعْلَمُ
அவன்/மிகஅறிந்தவன்
بِمَا يَفْعَلُونَ
அவர்கள் செய்கின்ற அனைத்தையும்

Wa wuffiyat kullu nafsim maa 'amilat wa Huwa a'lamubimaa yaf'aloon

ஒவ்வொரு மனிதனும், அவன் செய்ததற்குரிய கூலியை முழுமையாகவே அடைவான். அல்லாஹ்வோ, அவர்கள் செய்தவை அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

Tafseer