Skip to main content

ثُمَّ
பிறகு
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
عِندَ رَبِّكُمْ
உங்கள் இறைவனிடம்
تَخْتَصِمُونَ
தர்க்கித்துக் கொள்வீர்கள்

Summa innakum Yawmal Qiyaamati 'inda Rabbikum takhtasimoon

பின்னர், மறுமையில் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக (கொண்டுவரப்பட்டு) நீங்கள் (நீதத்தைக் கோரி உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்.

Tafseer

فَمَنْ
யார்?
أَظْلَمُ
மகா அநியாயக்காரன்
مِمَّن كَذَبَ
பொய் சொல்பவனை விட
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
وَكَذَّبَ
இன்னும் பொய்ப்பித்தான்
بِٱلصِّدْقِ
உண்மையை
إِذْ جَآءَهُۥٓۚ
அது தன்னிடம் வந்தபோது
أَلَيْسَ
இல்லையா?
فِى جَهَنَّمَ
நரகத்தில்
مَثْوًى
தங்குமிடம்
لِّلْكَٰفِرِينَ
நிராகரிப்பவர்களுக்கு

Faman azlamu mimman kazaba 'alal laahi wa kazzaba bissidqi iz jaaa'ah; alaisa fee Jahannama maswal lilkaafir

அல்லாஹ்வின் மீது பொய் சொல்லி தன்னிடம் வந்த (வேதமாகிய) உண்மையைப் பொய்யாக்குபவனை விட அநியாயக்காரன் யார்? அத்தகைய நிராகரிப்பவர்கள் தங்குமிடம் நரகத்தில் அல்லவா (இருக்கின்றது)?

Tafseer

وَٱلَّذِى جَآءَ
வந்தவரும்
بِٱلصِّدْقِ
உண்மையைக் கொண்டு
وَصَدَّقَ
இன்னும் உண்மை என்று ஏற்றார்
بِهِۦٓۙ
அதை
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
ٱلْمُتَّقُونَ
இறையச்சம் உள்ளவர்கள்

Wallazee jaaa'a bissidqi wa saddaqa biheee ulaaa'ika humul muttaqoon

உண்மையைக் கொண்டு வந்தவ(ராகிய நமது தூத)ரும், அதனை உண்மையென்றே நம்பியவரும் ஆகிய இத்தகையவர்கள் தாம் இறை அச்சமுடையவர்கள்.

Tafseer

لَهُم
அவர்களுக்கு
مَّا يَشَآءُونَ
அவர்கள் நாடுகின்றதெல்லாம்
عِندَ رَبِّهِمْۚ
அவர்களின் இறைவனிடம்
ذَٰلِكَ
இதுதான்
جَزَآءُ
கூலியாகும்
ٱلْمُحْسِنِينَ
நல்லவர்களின்

Lahum maa yashaaa'oona 'inda Rabbihim; zaalika jazaaa'ul muhsineen

அவர்கள் விரும்பியதெல்லாம் அவர்களின் இறைவ னிடத்தில் அவர்களுக்குக் கிடைக்கும். ஏனென்றால், (இத்தகைய) நன்மை செய்தவர்களுக்கு இதுவே (தகுதியான) கூலியாகும்.

Tafseer

لِيُكَفِّرَ
அகற்றி விடுவதற்காக
ٱللَّهُ
அல்லாஹ்
عَنْهُمْ
அவர்களை விட்டும்
أَسْوَأَ
கெட்டசெயல்களை
ٱلَّذِى عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றில்
وَيَجْزِيَهُمْ
இன்னும் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காக
أَجْرَهُم
அவர்களின் கூலியை
بِأَحْسَنِ
மிக அழகிய முறையில்
ٱلَّذِى كَانُوا۟
அவர்கள் செய்து வந்ததை விட

Liyukaffiral laahu 'anhum aswa allazee 'amiloo wa yajziyahum ajrahum bi ahsanil lazee kaano ya'maloon

அவர்கள் செய்த குற்றங்களையும் அல்லாஹ் மன்னித்து, அவர்களுடைய கூலியை அவர்கள் செய்ததைவிட மிக அழகான விதத்தில் கொடுப்பான்.

Tafseer

أَلَيْسَ
இல்லையா?
ٱللَّهُ
அல்லாஹ்
بِكَافٍ
போதுமானவனாக
عَبْدَهُۥۖ
தனது அடியானுக்கு
وَيُخَوِّفُونَكَ
இன்னும் அவர்கள் உம்மை பயமுறுத்துகின்றனர்
بِٱلَّذِينَ مِن
அவன் அல்லாதவர்களைக் கொண்டு
وَمَن يُضْلِلِ
அல்லாஹ் யாரை வழிகெடுத்து விடுகின்றானோ
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
مِنْ هَادٍ
நேர்வழி காட்டுபவர் யாரும்

Alaisal laahu bikaafin 'abdahoo wa yukhawwi foonaka billazeena min doonih; wa mai yudlilil laahu famaa lahoo min haad

தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவைகளைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.

Tafseer

وَمَن
யாரை
يَهْدِ
நேர்வழி செலுத்தினானோ
ٱللَّهُ
அல்லாஹ்
فَمَا لَهُۥ
இல்லை/அவரை
مِن مُّضِلٍّۗ
வழிகெடுப்பவர் யாரும்
أَلَيْسَ
இல்லையா?
ٱللَّهُ
அல்லாஹ்
بِعَزِيزٍ
மிகைத்தவனாக
ذِى ٱنتِقَامٍ
பழி தீர்ப்பவனாக

Wa mai yahdil laahu famalahoo mim mudlil; alai sal laahu bi'azeezin zin tiqaam

எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுத்துவிடக் கூடியவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் பழிவாங்க ஆற்றல் உடையவனுமல்லவா?

Tafseer

وَلَئِن
سَأَلْتَهُم
நீர் அவர்களிடம் கேட்டால்
مَّنْ
யார்
خَلَقَ
படைத்தான்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
وَٱلْأَرْضَ
பூமியையும்
لَيَقُولُنَّ
நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்
ٱللَّهُۚ
அல்லாஹ்
قُلْ
கூறுவீராக!
أَفَرَءَيْتُم
நீங்கள் அறிவியுங்கள்!
مَّا تَدْعُونَ
நீங்கள் அழைப்பவைப் பற்றி
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
إِنْ أَرَادَنِىَ
எனக்கு நாடினால்
ٱللَّهُ
அல்லாஹ்
بِضُرٍّ
ஒரு தீங்கை
هَلْ هُنَّ
அவை நீக்கக்கூடியவையா?
ضُرِّهِۦٓ
அவனது தீங்கை
أَوْ
அல்லது
أَرَادَنِى
அவன் எனக்கு நாடினால்
بِرَحْمَةٍ
ஓர் அருளை
هَلْ هُنَّ
அவை தடுத்துவிடக் கூடியவையா?
رَحْمَتِهِۦۚ
அவனது அருளை
قُلْ
கூறுவீராக!
حَسْبِىَ ٱللَّهُۖ
அல்லாஹ் எனக்குப் போதுமானவன்
عَلَيْهِ
அவன் மீதே
يَتَوَكَّلُ
நம்பிக்கை வைக்கட்டும்
ٱلْمُتَوَكِّلُونَ
நம்பிக்கை வைப்பவர்கள்

Wa la'in sa altahum man khalaqas samaawaati wal arda la yaqoolunal laah; qul afara'aitum maa tad'oona min doonil laahi in araadaniyal laahu bidurrin hal hunna kaashi faatu durriheee aw araadanee birahmatin hal hunna mumsikaatu rahmatih; qul hasbiyal laahu 'alaihi tatawakkalul mutawakkiloon

(நபியே!) வானங்களையும் பூமியையும், படைத்தவன் யார்? என்று நீங்கள் அவர்களைக் கேட்பீராயின், "அல்லாஹ்தான்" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். பின்னும், (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் எனக்கு யாதொரு தீங்கிழைக்க நாடினால், (நீங்கள் தெய்வங்களென அழைக்கும் அல்லாஹ் அல்லாத) அவை அத்தீங்கை நீக்கிவிட முடியுமா என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அல்லது அவன் எனக்கு ஏதும் அருள்புரிய நாடினால், அவனுடைய அருளை இவை தடுத்துவிடுமா (என்பதையும் நீங்கள் கவனித்தீர்களா? நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் (ஒருவனே) எனக்குப் போதுமானவன். நம்பக் கூடியவர்கள் அனைவரும் அவனையே நம்பவும்."

Tafseer

قُلْ
கூறுவீராக!
يَٰقَوْمِ
என் மக்களே!
ٱعْمَلُوا۟
அமல் செய்யுங்கள்!
عَلَىٰ مَكَانَتِكُمْ
நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு
إِنِّى
நிச்சயமாக நானும்
عَٰمِلٌۖ
அமல் செய்கிறேன்
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் விரைவில் அறிவீர்கள்

Qul yaa qawmi'maloo 'alaa makaanatikum innee 'aamilun fasawfa ta'lamoon

(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய மக்களே! நீங்கள் உங்களுடைய நிலைமையில் இருந்துகொண்டு நீங்கள் (செய்யக் கூடியதைச்) செய்து கொண்டிருங்கள். நானும், (என்னுடைய நிலையிலிருந்து கொண்டு, நான் செய்யக்கூடியதை) செய்து வருவேன். (எவருடைய செயல் குற்றம் என்பதைப்) பின்னர், நீங்கள் நிச்சயமாக அறிந்துகொள்வீர்கள்."

Tafseer

مَن
யார் ஒருவர்
يَأْتِيهِ
அவருக்கு வரும்
عَذَابٌ
வேதனை
يُخْزِيهِ
அவரை இழிவுபடுத்துகின்ற
وَيَحِلُّ
இன்னும் இறங்கும்
عَلَيْهِ
அவர் மீது
عَذَابٌ
வேதனை
مُّقِيمٌ
நிரந்தரமான

Mai yaateehi 'azaabuny yukhzeehi wa yahillu 'alaihi 'azaabum muqeem

இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகின்றது? நிலையான வேதனை எவர் மீது இறங்குகின்றது? (என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.)

Tafseer