Skip to main content

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
أَنزَلَ
இறக்கினான்
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
مَآءً
மழையை
فَسَلَكَهُۥ
அதை ஓடவைத்தான்
يَنَٰبِيعَ
பல ஊற்றுகளாக
فِى ٱلْأَرْضِ
பூமியில்
ثُمَّ
பிறகு
يُخْرِجُ
அவன் உற்பத்தி செய்கின்றான்
بِهِۦ
அதன் மூலம்
زَرْعًا
விளைச்சல்களை
مُّخْتَلِفًا
மாறுபட்ட(து)
أَلْوَٰنُهُۥ
அதன் நிறங்கள்
ثُمَّ
பிறகு
يَهِيجُ
அது காய்ந்து விடுகிறது
فَتَرَىٰهُ
அதை நீர் பார்க்கிறீர்
مُصْفَرًّا
மஞ்சளாக
ثُمَّ
பிறகு
يَجْعَلُهُۥ
அதை அவன் ஆக்கிவிடுகிறான்
حُطَٰمًاۚ
காய்ந்த சருகுகளாக
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَذِكْرَىٰ
ஓர் உபதேசம்
لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுள்ளவர்களுக்கு

Alam tara annal laaha anzala minas samaaa'i maaa'an fasalakahoo yanaabee'a fil ardi summa yukhriju bihee zar'am mukhtalifan alwaanuhoo summa yaheeju fatarahu musfarran summa yaj'aluhoo hutaamaa; inna fee zaalika lazikraa li ulil albaab

(நபியே!) "நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான், மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து, அதனைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கின்றான். பின்னர், அதனைக் கொண்டு பல நிறங்களையுடைய (பலவகைப்) பயிர்களை வெளிப்படுத்துகின்றான். பின்னர், அவை (கருக்கொண்டு) மஞ்சள் நிறமாக இருக்கக் காண்கின்றீர்கள். பின்னர், அதனைக் காய்ந்த சருகுகளாக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடைய வர்களுக்கு நல்ல படிப்பினை இருக்கின்றது."

Tafseer

أَفَمَن
எவர்?
شَرَحَ
விரிவாக்கினான்
ٱللَّهُ
அல்லாஹ்
صَدْرَهُۥ
அவருடைய நெஞ்சை
لِلْإِسْلَٰمِ
இஸ்லாமிற்கு
فَهُوَ عَلَىٰ
அவர்/வெளிச்சத்தில்
مِّن رَّبِّهِۦۚ
தன் இறைவனின்
فَوَيْلٌ
நாசம் உண்டாகட்டும்
لِّلْقَٰسِيَةِ
இருகியவர்களுக்கு
قُلُوبُهُم
அவர்களுடைய உள்ளங்கள்
مِّن ذِكْرِ
நினைவை விட்டு
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
فِى ضَلَٰلٍ
வழிகேட்டில்
مُّبِينٍ
தெளிவான

Afaman sharahal laahu sadrahoo lil Islaami fahuwa 'alaa noorim mir Rabbih; fa wailul lilqaasiyati quloobuhum min zikril laah; ulaaa'ika fee dalaalim mubeen

எவருடைய உள்ளத்தை, இஸ்லாமை அடைய அல்லாஹ் விசாலப்படுத்தினானோ அவர், தன் இறைவனின் பிரகாசத்தில் இருக்கின்றார். அல்லாஹ்வை ஞாபகம் செய்வதிலிருந்து விலகி, எவர்களுடைய உள்ளங்கள் கடினமாகி விட்டனவோ அவர்களுக்குக் கேடுதான். இத்தகையவர்கள், பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.

Tafseer

ٱللَّهُ
அல்லாஹ்
نَزَّلَ
இறக்கினான்
أَحْسَنَ
மிக அழகிய
ٱلْحَدِيثِ
பேச்சை
كِتَٰبًا
ஒரு வேதமாக
مُّتَشَٰبِهًا
ஒன்றுக்கொன்று ஒப்பான
مَّثَانِىَ
பலமுறை ஓதப்படுகின்ற
تَقْشَعِرُّ
சிலிர்க்கின்றன
مِنْهُ جُلُودُ
அதனால்/தோல்கள்
ٱلَّذِينَ
எவர்கள்
يَخْشَوْنَ
பயப்படுவார்கள்
رَبَّهُمْ
தங்கள் இறைவனை
ثُمَّ
பிறகு
تَلِينُ
மென்மையாகின்றன
جُلُودُهُمْ
அவர்களின் தோல்கள்
وَقُلُوبُهُمْ
இன்னும் அவர்களின் உள்ளங்களும்
إِلَىٰ ذِكْرِ
நினைவின் பக்கம்
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
ذَٰلِكَ
இதுதான்
هُدَى
நேர்வழியாகும்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
يَهْدِى
நேர்வழி செலுத்துகின்றான்
بِهِۦ
இதன்மூலம்
مَن يَشَآءُۚ
தான் நாடியவர்களை
وَمَن
எவரை
يُضْلِلِ
வழிகெடுக்கின்றானோ
ٱللَّهُ
அல்லாஹ்
فَمَا لَهُۥ
அவருக்கு இல்லை
مِنْ هَادٍ
நேர்வழி காட்டுபவர் யாரும்

Allahu nazzala ahsanal hadeesi Kitaabam mutashaa biham masaaniy taqsha'irru minhu juloodul lazeena yakhshawna Rabbahum summa taleenu julooduhum wa quloo buhum ilaa zikril laah; zaalika hudal laahi yahdee bihee mai yashaaa'; wa mai yudlilil laahu famaa lahoo min haad

அல்லாஹ் அழகான விஷயங்களையே (இந்த) வேதத்தில் இறக்கி இருக்கின்றான். (இதிலுள்ள வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல்) ஒன்றை மற்றொன்று ஒத்ததாக (இருப்பதுடன், மனதில் பதிவதற்காக ஒரே விஷயத்தை) மென்மேலும் (பல வகையில்) கூறப்பட்டுள்ளது. எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்படுகிறார்களோ, (அவர்கள் அதனைக் கேட்ட மாத்திரத்தில்) அவர்களுடைய உரோமம் சிலிர்த்து விடுகிறது. பின்னர், அவர்களுடைய தேகங்களும், உள்ளங்களும் இளகி அல்லாஹ்வைத் தியானம் செய்ய ஆரம்பிக்கின்றன. இதுவே அல்லாஹ்வினுடைய நேரான வழியாகும். அல்லாஹ் விரும்பியவர்களை இதன் மூலம் நேரான வழியில் செலுத்துகிறான். எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவனை, நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.

Tafseer

أَفَمَن
?/எவர்
يَتَّقِى
தவிர்த்துக் கொள்கிறான்
بِوَجْهِهِۦ
தனது முகத்தால்
سُوٓءَ
கெட்ட
ٱلْعَذَابِ
வேதனையை
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
وَقِيلَ
கூறப்படும்
لِلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
ذُوقُوا۟
சுவையுங்கள்!
مَا كُنتُمْ
நீங்கள் செய்து வந்ததை

Afamai yattaqee biwaj hihee sooo'al 'azaabi Yawmal Qiyaamah; wa qeela lizzaali meena zooqoo maa kuntum taksiboon

எவன், மறுமையின் கொடிய வேதனையைத் தன் முகத்தைக் கொண்டேனும் தடுத்துக்கொள்ளப் பிரயாசைப்படுவானோ, அவன் (சுவனவாசிக்கு சமமாவானா?) அநியாயக்காரர்களை நோக்கி நீங்கள் தேடிக் கொண்ட (தீய) செயலைச் சுவைத்துப் பாருங்கள் என்றுதான் கூறப்படும்.

Tafseer

كَذَّبَ
பொய்ப்பித்தனர்
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும்
فَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ
ஆகவே, அவர்களுக்கு வந்தது/வேதனை
مِنْ حَيْثُ
அவர்கள் உணராத விதத்தில்

Kazzabal lazeena min qablihim fa ataahumul 'azaabu min haisu laa yash'uroon

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம்முடைய வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில், வேதனை அவர்களை வந்தடைந்தது.

Tafseer

فَأَذَاقَهُمُ
அவர்களுக்கு சுவைக்க வைப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْخِزْىَ
கேவலத்தை
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்விலும்
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
وَلَعَذَابُ
வேதனை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
أَكْبَرُۚ
மிகப் பெரியது
لَوْ كَانُوا۟
அவர்கள் அறிய வேண்டுமே!

Fa azaaqahumul laahul khizya fil hayaatid dunyaa wa la'azaabul Aakirati akbar; law kaanoo ya'lamoon

இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவையே அவர்கள் சுவைக்கும்படி அல்லாஹ் செய்தான். மறுமையிலுள்ள வேதனையோ மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமே!

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ضَرَبْنَا
நாம் விவரித்தோம்
لِلنَّاسِ
மக்களுக்கு
فِى هَٰذَا
இந்த குர்ஆனில்
مِن كُلِّ
எல்லா
مَثَلٍ
உதாரணங்களையும்
لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக

Wa laqad darabnaa linnaasi fee haazal Qur-aani min kulli masalil la'allahum yatazakkaroon

மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக, இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் கூறியிருக்கிறோம்.

Tafseer

قُرْءَانًا
குர்ஆனாக
عَرَبِيًّا
அரபி மொழி
غَيْرَ
இல்லாத
ذِى عِوَجٍ
குழப்பம், கோணல்
لَّعَلَّهُمْ يَتَّقُونَ
அவர்கள் அஞ்சுவதற்காக

Qur-aanan 'Arabiyyan ghaira zee 'iwajil la'allahum yattaqoon

அன்றி, (அல்லாஹ்வுக்கு) அவர்கள் பயந்து கொள்வதற்காக கோணலற்ற இக்குர்ஆனை(த் தெளிவான) அரபி மொழியில் இறக்கி வைத்தோம்.

Tafseer

ضَرَبَ
விவரிக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
مَثَلًا
ஓர் உதாரணத்தை
رَّجُلًا
ஒரு மனிதன்
فِيهِ
அவன் விஷயத்தில்
شُرَكَآءُ
பங்குதாரர்கள்
مُتَشَٰكِسُونَ
பிணங்கிக் கொள்கின்றவர்கள்
وَرَجُلًا
இன்னும் ஒரு மனிதர்
سَلَمًا
சரியான(வர்)
لِّرَجُلٍ
ஒரு மனிதருக்கு
هَلْ يَسْتَوِيَانِ
இந்த இரண்டு நபர்களும் சமமாவார்களா?
مَثَلًاۚ
தன்மையால்
ٱلْحَمْدُ
எல்லாப் புகழும்
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
بَلْ
மாறாக
أَكْثَرُهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்

Darabal laahu masalar rajulan feehi shurakaaa'u mutashaakisoona wa rajulan salamal lirajulin hal tastawi yaani masalaa; alhamdu lillaah; bal aksaruhum laa ya'lamoon

அல்லாஹ் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான்: ஒரு மனிதன் பல எஜமான்களுக்கு (அடிமையாக) இருந்து (அவர்கள் ஒவ்வொருவரும், தனக்கே அவன் வேலை செய்யவேண்டுமென்று) இழுபறி செய்துகொள்கின்றனர். மற்றொரு மனிதன் (அடிமைதான்; ஆனால், அவன்) ஒருவனுக்கு மட்டும் சொந்தமானவன். இவ்விருவரும் சமமாவார்களா? (ஆகமாட்டார் என்பதை அறிந்து கொள்வீர்கள். இதற்காக) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே (என்று துதி செய்வோமாக! இவ்வாறே பல தெய்வங்களை வணங்கும் ஒருவன், ஒரே அல்லாஹ்வை வணங்குபவனுக்கு சமமாக மாட்டான். எனினும்,) அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை கூட) அறிந்து கொள்ளவில்லை.

Tafseer

إِنَّكَ
நிச்சயமாக நீரும்
مَيِّتٌ
மரணிப்பவரே!
وَإِنَّهُم
இன்னும் நிச்சயமாக அவர்களும்
مَّيِّتُونَ
மரணிப்பவர்கள்தான்

Innaka maiyitunw wa inna hum maiyitunw wa inna hum maiyitoon

(நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தாம்.

Tafseer