Saaad; wal-Qur-aani ziz zikr
ஸாத்; நல்லுபதேசங்கள் நிறைந்த இந்தக் குர்ஆனின் மீது சத்தியமாக!
Balil lazeena kafaroo fee 'izzatilnw wa shiqaaq
(இது நம்மால்தான் அருளப்பட்டது. இதனை) நிராகரிப் பவர்கள் பெரும் குரோதத்திலும் விரோதத்திலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
Kam ahlaknaa min qablihim min qarnin fanaadaw wa laata heena manaas
இவர்களுக்கு முன்னர், (இவ்வாறு இருந்த) எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்திருக்கின்றோம். (வேதனை வந்த சமயத்தில்) அவர்கள் எல்லோரும் உதவி தேடிக் கூச்சலிட்டார்கள். அது (வேதனையிலிருந்து) தப்பித்துக் கொள்ளக்கூடிய நேரமாய் இருக்கவில்லை.
Wa 'ajibooo an jaaa'a hum munzirum minhum wa qaalal kaafiroona haazaa saahirun kazzaab
(அவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், (ஆகிய நீங்கள்) அவர்களி(ன் இனத்தி)லிருந்தே அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்டு, "இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்" என்று (உங்களைப் பற்றி) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
Aja'alal aalihata Ilaahanw Waahidan inna haazaa lashai'un 'ujaab
"என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" (என்று கூறி,)
Wantalaqal mala-u minhum anim shoo wasbiroo 'alaaa aalihatikum innna haazaa lashai 'uny yuraad
அவர்களிலுள்ள தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி, "இவரைவிட்டு) நீங்கள் சென்றுவிடுங்கள். உங்கள் தெய்வங்களை ஆராதனை செய்வதில் நீங்கள் உறுதியாயிருங்கள். (உங்கள் தெய்வங்களைக் கைவிடும்படி கூறும்) இவ்விஷயத்தில் ஏதோ (சுயநலந்தான்) கருதப்படுகின்றது" என்று கூறிக்கொண்டே சென்று விட்டனர்.
Maa sami'naa bihaazaa fil millatil aakhirati in haazaaa illakh tilaaq
"முன்னுள்ள வகுப்பார்களிலும், இதனை நாம் கேள்விப்பட்டதில்லை. இது (இவரால்) புனையப்பட்டதே அன்றி வேறில்லை" என்றும்,
'A-unzila 'alaihiz zikru mim baininaa; bal hum fee shakkim min Zikree bal lammaa yazooqoo 'azaab
"நம்மைவிட்டு இவர் பேரில் மட்டும்தானா (வேத) உபதேசம் இறக்கப்பட்டுவிட்டது" என்றும் (கூறினார்கள்). அவ்வாறன்று. உண்மையில் இவர்கள் நம்முடைய எச்சரிக்கையைப் பற்றியே பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். அன்றி, இதுவரையில் அவர்கள் நம்முடைய வேதனையைச் சுவைத்துப் பார்க்கவே இல்லை.
Am'indahum khazaaa 'inu rahmati Rabbikal 'Azeezil Wahhab
(வேத உபதேசம் தங்கள் மீது இறங்க வேண்டுமென்று இவர்கள் கூறுவதற்கு) அனைவரையும் மிகைத்த பெரும் கொடையாளியாகிய, உங்களது இறைவனின் அருள் பொக்கிஷம் அவர்களிடம்தான் இருக்கின்றதா?
Am lahum mulkus samaawaati wal ardi wa maa bainahumaa falyartaqoo fil asbaab
அல்லது வானங்கள், பூமி, இன்னும் இவற்றின் மத்தியில் உள்ளவைகளின் ஆட்சி அவர்களுக்கு உரியதுதானா? அவ்வாறாயின், (இறைவனுடன் போர் புரிவதற்காக) ஏணி வைத்து மேலேறவும்.
القرآن الكريم: | ص |
---|---|
ஸஜ்தா (سجدة): | 24 |
ஸூரா (latin): | Sad |
ஸூரா: | 38 |
வசனம்: | 88 |
Total Words: | 732 |
Total Characters: | 3760 |
Number of Rukūʿs: | 5 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 38 |
Starting from verse: | 3970 |