Qaala qaaa'ilum minhum innee kaana lee qareen
அவர்களில் ஒருவர் கூறுவார்: "(இம்மையில்) மெய்யாகவே எனக்கொரு நண்பன் இருந்தான்.
Yaqoolu a'innnaka laminal musaddiqeen
அவன் என்னை நோக்கி "நிச்சயமாக நீ இதனை நம்புகிறாயா?" என்று கேட்டான்.
'A-izaa mitnaa wa kunnaa turaabanw wa 'izaaman 'ainnaa lamadeenoon
என்ன! நாம் இறந்து உக்கி எலும்பாகவும், மண்ணாகவும் போனதன் பின்னர் (எழுப்பப்படுவோமா?) நிச்சயமாக (நம்முடைய செயல்களுக்குரிய) கூலிகள் கொடுக்கப்படுவோமா?" என்று (பரிகாசமாகக்) கூறிக்கொண்டிருந்தான்.
Qaala hal antum muttali'oon
"(ஆகவே, அவனை) நீங்கள் பார்க்க விரும்புகின்றீர்களா? என்று கூறி,
Fattala'a fara aahu fee sawaaa'il Jaheem
அவனை எட்டிப் பார்த்து, அவன் நரகத்தின் மத்தியில் இருப்பதைக் கண்டு,
Qaala tallaahi in kitta laturdeen
(அவனை நோக்கி) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிடவே கருதினாய்."
Wa law laa ni'matu Rabbee lakuntu minal muhdareen
"என் இறைவனுடைய அருள் எனக்குக் கிடைக்காதிருந்தால், நானும் (உன்னுடன் நரகத்தில்) சேர்க்கப்பட்டே இருப்பேன்.
Afamaa nahnu bimaiyiteen
(இதற்கு முன்னர்) நாம் இறந்துவிடவில்லையா?
Illa mawtatanal oola wa maa nahnu bimu'azzabeen
(பின்னர் உயிர் பெற்றிருக்கும் நமக்கு) முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை. (இனி நாம் இறக்கவே மாட்டோம். சுவனபதியில் இருக்கும்) நாம் வேதனைக்கு உள்ளாக்கப்படவும் மாட்டோம்" (என்றும் கூறுவார்).
Inna haazaa falya'ma lil'aamiloon
நிச்சயமாக இது மகத்தானதொரு பாக்கியமாகும்.