Haazaa Yawmul Faslil lazee kuntum bihee tukaziboon
(அதற்கவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த தீர்ப்பு நாள் இதுதான்" (என்றும் கூறப்படும்).
Uhshurul lazeena zalamoo wa azwaajahum wa maa kaanoo ya'budoon
அநியாயம் செய்தவர்களையும், அவர்களுடைய தோழர்களையும், அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்று சேர்த்து,
Min doonil laahi fahdoohum ilaa siraatil Jaheem
"அவர்களை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்" (என்றும்),
Wa qifoohum innahum mas'ooloon
"அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கின்றது" (என்றும் கூறப்படும்).
Maa lakum laa tanaasaroon
"உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை" (என்றும் கேட்கப்படும்).
Bal humul Yawma mustaslimoon
எனினும், அன்றைய தினம் அவர்கள் தலை குனிந்த வர்களாக இருப்பார்கள்.
Wa aqbala ba'duhum 'alaa ba'diny yatasaaa'aloon
அவர்களில் ஒருவர் மற்றொருவருடன் தர்க்கிக்க முற்பட்டு,
Qaalooo innakum kuntum taatoonanaa 'anil yameen
(சிலர் தங்கள் தலைவர்களை நோக்கி) "நிச்சயமாக நீங்கள் நம்மிடம் பலவந்தமாகவே வந்(து உங்களுக்கு வழிப்படும்படி எங்களை நிர்ப்பந்தித்)தீர்கள்" என்று கூறுவார்கள்.
Qaaloo bal lam takoonoo mu'mineen
அதற்கு அ(த்தலை)வர்கள் "அவ்வாறன்று. (நாங்கள் உங்களைத் தடை செய்யவில்லை.) நீங்கள்தாம் நம்பிக்கை கொள்ளவில்லை."
Wa maa kaana lanaa 'alaikum min sultaanim bal kuntum qawman taagheen
"எங்களுக்கு உங்கள் மீது யாதொரு அதிகாரமும் இருக்கவில்லை. நீங்கள்தாம் பொல்லாத மக்களாக இருந்தீர்கள்.