Skip to main content

فَٱسْتَفْتِهِمْ
அவர்களிடம் விளக்கம் கேட்பீராக!
أَهُمْ
?/அவர்கள்
أَشَدُّ
பலமிக்கவர்கள்
خَلْقًا
படைப்பால்
أَم
அல்லது
مَّنْ خَلَقْنَآۚ
எவர்கள்/படைத்தோம்
إِنَّا
நிச்சயமாக நாம்
خَلَقْنَٰهُم
அவர்களை படைத்தோம்
مِّن طِينٍ
மண்ணிலிருந்து
لَّازِبٍۭ
பிசுபிசுப்பான

Fastaftihim ahum ashaddu khalqan am man khalaqnaa; innaa khalaqnaahum min teenil laazib

(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீங்கள் கேளுங்கள்: (இறந்த பின்) உங்களைப் படைப்பது கஷ்டமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவைகளைப் படைப்பது கஷ்டமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசு பிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.

Tafseer

بَلْ
மாறாக
عَجِبْتَ
நீர் ஆச்சரியப்பட்டீர்
وَيَسْخَرُونَ
அவர்கள் பரிகாசிக்கின்றனர்

Bal'ajibta wa yaskharoon

(நபியே!) நீங்கள் (அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) ஆச்சரியப்படுகின்றீர்கள்; அவர்களோ (அதனைப்) பரிகசிக் கின்றனர்.

Tafseer

وَإِذَا ذُكِّرُوا۟
அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால்
لَا يَذْكُرُونَ
அறிவுரை பெறமாட்டார்கள்

Wa izaa zukkiroo laa yazkuroon

அன்றி, அவர்களுக்கு நல்லுபதேசம் கூறியபோதிலும் அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதேயில்லை.

Tafseer

وَإِذَا رَأَوْا۟
அவர்கள் பார்த்தால்
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
يَسْتَسْخِرُونَ
பரிகாசம் செய்கிறார்கள்

Wa izaa ra aw Aayatinw yastaskhiroon

எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.

Tafseer

وَقَالُوٓا۟
கூறுகின்றனர்
إِنْ هَٰذَآ
இது இல்லை
إِلَّا سِحْرٌ
சூனியமே தவிர
مُّبِينٌ
தெளிவான

Wa qaalooo in haazaa illaa sihrum mubeen

அன்றி "இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர்.

Tafseer

أَءِذَا مِتْنَا
?/நாங்கள் இறந்து விட்டால்
وَكُنَّا تُرَابًا
மண்ணாக(வும்) மாறிவிட்டால்
وَعِظَٰمًا
எலும்புகளாகவும்
أَءِنَّا
?/நிச்சயமாக நாங்கள்
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோம்

'A-izaa mitnaa wa kunnaa turaabanw wa 'izaaman 'ainnaa lamab'oosoon

"நாம் இறந்து (உக்கி) எலும்பாகவும் மண்ணாகவும், போன பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா? (என்றும்)

Tafseer

أَوَءَابَآؤُنَا
இன்னும் எங்கள் முன்னோர்களுமா?
ٱلْأَوَّلُونَ
முந்திய

Awa aabaa'unal awwaloon

(அவ்வாறே) நம்முடைய மூதாதைகளுமா? (எழுப்பப் படுவார்கள்" என்றும் பரிகாசமாகக் கூறுகின்றனர்.)

Tafseer

قُلْ
கூறுவீராக!
نَعَمْ
ஆம்
وَأَنتُمْ
நீங்கள்
دَٰخِرُونَ
மிகவும் சிறுமைப்பட்டவர்களாக

Qul na'am wa antum daakhiroon

அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மெய்தான். (எழுப்பப்படுவீர்கள்.) அச்சமயம் நீங்கள் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்.

Tafseer

فَإِنَّمَا هِىَ
அதுவெல்லாம்
زَجْرَةٌ
பலமான சப்தம்தான்
وَٰحِدَةٌ
ஒரே ஒரு
فَإِذَا هُمْ
அப்போது அவர்கள் பார்ப்பார்கள்

Fa innamaa hiya zajra tunw waahidatun fa izaa hum yanzuroon

அது ஒரே ஒரு சப்தம்தான்; உடனே அவர்கள் (எழுந்து நின்று திருதிருவென்று) விழிப்பார்கள்.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
يَٰوَيْلَنَا
எங்கள் நாசமே!
هَٰذَا يَوْمُ
இதுதான்/நாள்
ٱلدِّينِ
கூலி கொடுக்கப்படும்

Qa qaaloo yaa wailanaa haazaa Yawmud-Deen

நாங்கள் கெட்டோம்! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே" என்றும் அவர்கள் கூறுவார்கள்.

Tafseer