Skip to main content

فَسَاهَمَ
குலுக்கிப் போட்டார்
فَكَانَ
ஆகிவிட்டார்
مِنَ ٱلْمُدْحَضِينَ
குலுக்கலில் பெயர்வந்தவர்களில்

Fasaahama fakaana minal mudhadeen

அ(க் கப்பலிலுள்ள)வர்கள் (திருவுளச்) சீட்டுப் போட்டதில் இவர் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்.

Tafseer

فَٱلْتَقَمَهُ
அவரை விழுங்கியது
ٱلْحُوتُ
திமிங்கிலம்
وَهُوَ
அவர்
مُلِيمٌ
பழிப்புக்குரியவர்

Faltaqamahul hootu wa huwa muleem

(அவ்வாறு அவர்கள் இவரை எறியவே) மீன் அவரை விழுங்கிவிட்டது. அச்சமயம், அவர் தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டிருந்தார்.

Tafseer

فَلَوْلَآ أَنَّهُۥ
நிச்சயமாக அவர் இருந்திருக்கவில்லை என்றால்
مِنَ ٱلْمُسَبِّحِينَ
துதிப்பவர்களில்

Falaw laaa annahoo kaana minal musabbiheen

நிச்சயமாக அவர் நம்மைத் துதி செய்பவர்களில் ஒருவராக இல்லாதிருந்தால்,

Tafseer

لَلَبِثَ
தங்கி இருந்திருப்பார்
فِى بَطْنِهِۦٓ
அதனுடைய வயிற்றில்
إِلَىٰ يَوْمِ
நாள் வரை
يُبْعَثُونَ
எழுப்பப்படுகின்ற

Lalabisa fee batniheee ilaa Yawmi yub'asoon

(மறுமையில்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரையில் அவர் அதன் வயிற்றில் தங்கியிருந்திருப்பார்.

Tafseer

فَنَبَذْنَٰهُ
அவரை எறிந்தோம்
بِٱلْعَرَآءِ
பெருவெளியில்
وَهُوَ سَقِيمٌ
அவர்/நோயுற்றவராக இருந்தார்

Fanabaznaahu bil'araaa'i wa huwa saqeem

(அவர் துதி செய்திருப்பதன் காரணமாக) வெட்ட வெளியான பூமியில் (மீன் வயிற்றிலிருந்து) அவரை நாம் எறியச் செய்தோம். அச்சமயம் அவரோ மிக களைப்புடனும் சோர்வுடனும் இருந்தார்.

Tafseer

وَأَنۢبَتْنَا
முளைக்க வைத்தோம்
عَلَيْهِ
அவருக்கு அருகில்
شَجَرَةً
ஒரு செடியை
مِّن يَقْطِينٍ
சுரைக்காய்

Wa ambatnaa 'alaihi shajaratam mai yaqteen

ஆகவே, அவருக்கு (நிழலிடுவதற்காக) ஒரு சுரைச் செடியை முளைப்பித்தோம்.

Tafseer

وَأَرْسَلْنَٰهُ
அவரைஅனுப்பினோம்
إِلَىٰ مِا۟ئَةِ
ஒரு இலட்சம்
أَوْ
அல்லது
يَزِيدُونَ
அதிகமானவர்களுக்கு

Wa arsalnaahu ilaa mi'ati alfin aw yazeedoon

பின்னர், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கு அதிகமான மக்களிடம் நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.

Tafseer

فَـَٔامَنُوا۟
நம்பிக்கைகொண்டனர்
فَمَتَّعْنَٰهُمْ
ஆகவே, நாம் அவர்களுக்கு சுகமளித்தோம்
إِلَىٰ حِينٍ
ஒரு காலம் வரை

Fa aamanoo famatta' naahum ilaa heen

அவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டார்கள். ஆதலால், நாமும் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரையில் சுகமாக வாழவைத்தோம்.

Tafseer

فَٱسْتَفْتِهِمْ
ஆகவே, அவர்களிடம் கேட்பீராக!
أَلِرَبِّكَ
உமது இறைவனுக்கு
ٱلْبَنَاتُ
பெண் பிள்ளைகளும்
وَلَهُمُ
அவர்களுக்கு
ٱلْبَنُونَ
ஆண் பிள்ளைகளுமா

Fastaftihim ali Rabbikal banaatu wa lahumul banoon

(நபியே!) அவர்களை நீங்கள் கேளுங்கள்: "(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகின்றீர்கள்.)

Tafseer

أَمْ
?
خَلَقْنَا
நாம் படைத்தோம்
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களை
إِنَٰثًا
பெண்களாகவா
وَهُمْ
அவர்கள்
شَٰهِدُونَ
பார்த்துக்கொண்டு இருந்தார்களா?

Am khalaqnal malaaa'i kata inaasanw wa hm shaahidoon

அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாக படைத்த(தாகக் கூறுகின்றனரே அ)தை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?

Tafseer