Innahoo min 'ibaadinal mu'mineen
நிச்சயமாக அவர் மிக்க நம்பிக்கையுள்ள நமது அடியாராகவே இருந்தார்.
Wa bashsharnaahu bi Ishaaqa Nabiyayam minas saaliheen
இதன் பின்னர், நல்லடியார்களிலுள்ள இஸ்ஹாக் நபியை அவருக்கு (மற்றுமொரு மகனாகத் தருவதாக) நற்செய்தி கூறினோம்.
Wa baaraknaa 'alaihi wa 'alaaa Ishaaq; wa min zurriyya tihimaa muhsinunw wa zaalimul linafshihee mubeen
அவர் மீதும், இஸ்ஹாக் மீதும் நாம் நமது பாக்கியங்களைச் சொரிந்தோம். அவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களும் இருக்கின்றனர்; பகிரங்கமாக தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்(ட கெட்)டவர்களும் இருக்கின்றனர்.
Wa laqad mananna alaa Moosaa wa Haaroon
நிச்சயமாக நாம் மூஸாவின் மீதும், ஹாரூனின் மீதும் அருள் புரிந்தோம்.
Wa najjainaahumaa wa qawmahumaa minal karbil 'azeem
அவ்விருவரையும், அவர்களுடைய மக்களையும் கடுமையானதொரு துன்பத்திலிருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
Wa nasarnaahum fakaanoo humul ghaalibeen
அவர்களுக்கு உதவிபுரிந்தோம். ஆகவே, அவர்கள் (தங்கள் எதிரிகளை) வெற்றி கொண்டார்கள்.
Wa aatainaahumal Kitaabal mustabeen
அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் நாம் கொடுத்தோம்.
Wa hadainaahumus Siraatal Mustaqeem
அவ்விருவரையும் நேரான வழியிலும் நாம் செலுத்தினோம்.
Wa taraknaa 'alaihimaa fil aakhireen
பிற்காலத்திலும் அவ்விருவரின் கீர்த்தியை நிலைக்கச் செய்தோம்.
Salaamun 'alaa Moosaa wa Haaroon
(ஆகவே, உலகத்திலுள்ளவர்கள்) மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் "ஸலாம்" ஈடேற்றம் உண்டாவதாக! (என்று கூறுகின்றனர்).