Skip to main content

فَرَاغَ
ஆக, அவர் விரைந்தார்
إِلَىٰٓ ءَالِهَتِهِمْ
அவர்களின் தெய்வங்கள் பக்கம்
فَقَالَ
கூறினார்
أَلَا تَأْكُلُونَ
நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?

Faraagha ilaaa aalihatihim faqaala alaa taakuloon

(பின்னர்) அவர், அவர்களுடைய கோயிலுக்குள் இரகசியமாகச் சென்றார். (விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பல வகை உணவுகள் இருக்கக் கண்டு, சிலைகளை நோக்கி) "நீங்கள் இவைகளை ஏன் புசிப்பதில்லை?

Tafseer

مَا لَكُمْ
உங்களுக்கு என்ன ஏற்பட்டது?
لَا تَنطِقُونَ
நீங்கள் ஏன் பேசுவதில்லை

Maa lakum laa tantiqoon

உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுவதில்லை?" என்று கேட்டு(ப் பதில் கிடைக்காததனால்,)

Tafseer

فَرَاغَ
பாய்ந்தார்
عَلَيْهِمْ
அவற்றின் மீது
ضَرْبًۢا
அடிப்பதற்காக
بِٱلْيَمِينِ
வலக்கரத்தால்

Faraagha 'alaihim darbam bilyameen

அவைகளைப் பலமாக அடித்துத் தாக்கி (நொறுக்கிவிட்டு வெளியில் சென்று) விட்டார்.

Tafseer

فَأَقْبَلُوٓا۟
அவர்கள் வந்தனர்
إِلَيْهِ
அவரை நோக்கி
يَزِفُّونَ
விரைந்தவர்களாக

Fa aqbalooo ilaihi yaziffoon

(திருநாள் கொண்டாடச் சென்றவர்கள் திரும்பி வந்து இதனைக் கண்டதும்) இப்ராஹீமிடம் ஓடி வந்து (அதைப் பற்றிக் கேட்கவே)

Tafseer

قَالَ
அவர் கூறினார்
أَتَعْبُدُونَ
நீங்கள் வணங்குகிறீர்களா
مَا تَنْحِتُونَ
நீங்கள் செதுக்குகின்றவற்றை

Qaala ata'budoona maa tanhitoon

அவர், (அவர்களை நோக்கி) "உங்கள் கைகளால் சித்தரித்த பொம்மைகளை நீங்கள் வணங்குகிறீர்களா?

Tafseer

وَٱللَّهُ
அல்லாஹ்தான்
خَلَقَكُمْ
உங்களை(யும்) படைத்தான்
وَمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதையும்

Wallaahu khalaqakum wa maa ta'maloon

உங்களையும், நீங்கள் சித்தரித்த அவைகளையும் அல்லாஹ்வே படைத்தான்" என்றார்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறினர்
ٱبْنُوا۟
கட்டுங்கள்
لَهُۥ
அவருக்கு
بُنْيَٰنًا
ஒரு கட்டிடத்தை
فَأَلْقُوهُ
அவரை எறிந்து விடுங்கள்
فِى ٱلْجَحِيمِ
அந்த நெருப்பில்

Qaalub noo lahoo bun yaanan fa alqoohu fil jaheem

(அதற்கு அவர்கள் பதில் கூற வகையறியாது கோபம் கொண்டு,) "இவருக்காகப் பெரியதொரு (நெருப்புக்) கிடங்கை அமைத்து, அந்நெருப்பில் .அவரை எறிந்து விடுங்கள்" என்று கூறினார்கள்.

Tafseer

فَأَرَادُوا۟
அவர்கள் நாடினர்
بِهِۦ
அவருக்கு
كَيْدًا
ஒரு சூழ்ச்சியை
فَجَعَلْنَٰهُمُ
நாம் அவர்களை(த்தான்) ஆக்கினோம்
ٱلْأَسْفَلِينَ
மிகத் தாழ்ந்தவர்களாக

Fa araadoo bihee kaidan faja 'alnaahumul asfaleen

இவ்வாறு அவர்கள், அவருக்குத் தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.

Tafseer

وَقَالَ
அவர் கூறினார்
إِنِّى
நிச்சயமாக நான்
ذَاهِبٌ
செல்கிறேன்
إِلَىٰ رَبِّى
என் இறைவனின் பக்கம்
سَيَهْدِينِ
அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்

Wa qaala innee zaahibun ilaa Rabbee sa yahdeen

பின்னர், இப்ராஹீம் (அவ்வூரை விட்டு வெளிப்பட்டு,) "நான் என் இறைவனிடமே செல்கின்றேன். அவன் நிச்சயமாக எனக்கு நேரான வழியைக் காண்பிப்பான்" (என்று கூறி,)

Tafseer

رَبِّ
என் இறைவா
هَبْ لِى
எனக்கு தா!
مِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில் (ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையை)

Rabbi hab lee minas saaliheen

"என் இறைவனே! நல்லோர்களில் (ஒருவரை) நீ எனக்கு(ச் சந்ததியாக) வழங்கி அருள் புரிவாயாக!" என்றார்.

Tafseer