Skip to main content

ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩௬

وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَۚ لَا يُقْضٰى عَلَيْهِمْ فَيَمُوْتُوْا وَلَا يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَاۗ كَذٰلِكَ نَجْزِيْ كُلَّ كَفُوْرٍ ۚ  ( فاطر: ٣٦ )

And those who disbelieve
وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
for them
لَهُمْ
அவர்களுக்கு
(will be the) Fire
نَارُ
நெருப்புதான்
(of) Hell
جَهَنَّمَ
நரக
Not is decreed
لَا يُقْضَىٰ
தீர்ப்பளிக்கப்படாது
for them
عَلَيْهِمْ
அவர்களுக்கு
that they die
فَيَمُوتُوا۟
ஆகவே, அவர்கள் மரணிக்க மாட்டார்கள்
and not will be lightened
وَلَا يُخَفَّفُ
இன்னும் இலேசாக்கப்படாது
for them
عَنْهُم
அவர்களை விட்டு
of its torment
مِّنْ عَذَابِهَاۚ
அதன் தண்டனை
Thus
كَذَٰلِكَ
இப்படித்தான்
We recompense
نَجْزِى
கூலிகொடுப்போம்
every ungrateful one
كُلَّ كَفُورٍ
எல்லா நிராகரிப்பாளர்களுக்கு(ம்)

Wallazeena kafaroo lahum naaru Jahannama laa yuqdaa 'alaihim fa yamootoo wa laa yukhaffafu 'anhum min 'azaabihaa; kazaalika najzee kulla kafoor (Fāṭir 35:36)

Abdul Hameed Baqavi:

எவர்கள் (நம்முடைய வசனங்களை) நிராகரித்து விடுகிறார்களோ அவர்களுக்கு நரக நெருப்புத்தான் (கூலியாகக்) கிடைக்கும். அவர்கள் இறந்துபோகும் விதத்தில் அதில் அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. (வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதற்காக உயிருடனேயே இருப்பார்கள்.) அன்றி, அவர்களுடைய வேதனையில் ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. இவ்வாறே நிராகரிப்பவர்கள் எல்லோருக்கும் நாம் கூலி கொடுப்போம்.

English Sahih:

And for those who disbelieve will be the fire of Hell. [Death] is not decreed for them so they may die, nor will its torment be lightened for them. Thus do We recompense every ungrateful one. ([35] Fatir : 36)

1 Jan Trust Foundation

எவர்கள் நிராகரித்தார்களோ, அவர்களுக்கு நரக நெருப்புத்தானிருக்கிறது; அவர்கள் மரித்துப் போகும்படியாக அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது; அன்றியும் அந்(நரகத்)திலுள்ள வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது; இவ்வாறே காஃபிர் ஒவ்வொருவருக்கும் நாம் கூலிகொடுப்போம்.