Skip to main content

ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩௨

ثُمَّ اَوْرَثْنَا الْكِتٰبَ الَّذِيْنَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَاۚ فَمِنْهُمْ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚوَمِنْهُمْ مُّقْتَصِدٌ ۚوَمِنْهُمْ سَابِقٌۢ بِالْخَيْرٰتِ بِاِذْنِ اللّٰهِ ۗذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِيْرُۗ   ( فاطر: ٣٢ )

Then
ثُمَّ
பிறகு
We caused to inherit
أَوْرَثْنَا
நாம் கொடுத்தோம்
the Book
ٱلْكِتَٰبَ
இந்த வேதத்தை
those whom We have chosen
ٱلَّذِينَ ٱصْطَفَيْنَا
நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு
of Our slaves;
مِنْ عِبَادِنَاۖ
நமது அடியார்களில்
and among them
فَمِنْهُمْ
அவர்களில்
(is he) who wrongs
ظَالِمٌ
தீமை செய்தவரும்
himself
لِّنَفْسِهِۦ
தனக்குத் தானே
and among them
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
(is he who is) moderate
مُّقْتَصِدٌ
நடுநிலையானவரும்
and among them
وَمِنْهُمْ
இன்னும் அவர்களில்
(is he who is) foremost
سَابِقٌۢ
முந்துகின்றவரும்
in good deeds
بِٱلْخَيْرَٰتِ
நன்மைகளில்
by permission
بِإِذْنِ
அனுமதிப்படி
(of) Allah
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
That is
ذَٰلِكَ هُوَ
இதுதான்
the Bounty
ٱلْفَضْلُ
சிறப்பாகும்
the great
ٱلْكَبِيرُ
மாபெரும்

Summa awrasnal Kitaaballazeenas tafainaa min 'ibaadinaa faminhum zaalimul linafsihee wa minhum muqtasid, wa minhum saabiqum bilkhairaati bi iznil laah; zaalika huwal fadlul kabeer (Fāṭir 35:32)

Abdul Hameed Baqavi:

பின்னர், நம்முடைய அடியார்களில் நாம் தேர்ந்தெடுத் தவர்களை அவ்வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம். எனினும், அவர்களில் பலர் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்; வேறு சிலர் நிதானமாக நடந்து கொண்டனர். மற்றும் சிலரோ அல்லாஹ்வுடைய கட்டளைப்படி நன்மையான காரியங்களில் முந்திக் கொள்கின்றனர். இதுவே மிகப் பெரும் பாக்கியமாகும்.

English Sahih:

Then We caused to inherit the Book those We have chosen of Our servants; and among them is he who wrongs himself [i.e., sins], and among them is he who is moderate, and among them is he who is foremost in good deeds by permission of Allah. That [inheritance] is what is the great bounty. ([35] Fatir : 32)

1 Jan Trust Foundation

பின்னர் நம் அடியார்களில் நாம் எவர்களைத் தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்; ஆனால் அவர்களிலிருந்து தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும் உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்து கொண்டவர்களும் உண்டு, இன்னும் அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் அனுமதி கொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக் கொண்டவர்களும் உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்.