Skip to main content

ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௯

اِنَّ الَّذِيْنَ يَتْلُوْنَ كِتٰبَ اللّٰهِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِيَةً يَّرْجُوْنَ تِجَارَةً لَّنْ تَبُوْرَۙ   ( فاطر: ٢٩ )

Indeed those who
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
recite
يَتْلُونَ
ஓதுகின்றார்கள்
(the) Book
كِتَٰبَ
வேதத்தை
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
and establish
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினர்
the prayer
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
and spend
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் செய்தார்கள்
out of what We have provided them
مِمَّا رَزَقْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
secretly
سِرًّا
இரகசியமாகவும்
and openly
وَعَلَانِيَةً
வெளிப்படையாகவும்
hope
يَرْجُونَ
ஆதரவு வைக்கின்றனர்
(for) a commerce -
تِجَٰرَةً
வியாபாரத்தை
never it will perish
لَّن تَبُورَ
அறவே அழிந்து போகாத

Innal lazeena yatloona Kitabbal laahi wa aqaamus Salaata wa anfaqoo mimmaa razaqnaahum sirranw wa 'alaa niyatany yarjoona tijaaratal lan taboor (Fāṭir 35:29)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகை யையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவை களை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கின்றார்கள்.

English Sahih:

Indeed, those who recite the Book of Allah and establish prayer and spend [in His cause] out of what We have provided them, secretly and publicly, [can] expect a transaction [i.e., profit] that will never perish – ([35] Fatir : 29)

1 Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.