Innal laaha yumsikus samaawaati wal arda an tazoolaaa; wa la'in zaalataaa in amsa kahumaa min ahadim mim ba'dih; innahoo kaana Haleeman Ghafooraa
வானங்களும் பூமியும் (தத்தம் எல்லையிலிருந்து) விலகிவிடாதபடி தடுத்துக் கொண்டிருப்பவன் நிச்சயமாக அல்லாஹ்தான். (தம் எல்லையில் இருந்து) அவ்விரண்டும் சாய முற்பட்டபோதிலும் அவை சாயாதபடி தடுக்கக்கூடியவன் அல்லாஹ்வைத் தவிர வேறொருவனுமில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும் மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
Wa aqsamoo billaahi jahda aymaanihim la'in jaaa'ahum nazeerul layakoonunna ahdaa min ihdal umami falam maa jaaa'ahum nazeerum maa zaadahum illaa nufooraa
"எங்களிடம் ஒரு தூதர் வருவாராயின் நிச்சயமாக நாங்கள் மற்ற எல்லா வகுப்பாரையும் விட நேரான பாதையில் சென்று விடுவோம்" என்று (இந்த அரபிகள்) அல்லாஹ்வின் மீது மிக உறுதியான சத்தியம் செய்து கூறினார்கள். எனினும், இவர்களிடம் (நம்முடைய) தூதர் வந்த சமயத்தில் அது வெறுப்பைத் தவிர (வேறெதனையும்) இவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
Istakbaaran fil ardi wa makras sayyi'; wa laa yaheequl makrus sayyi'u illaa bi ahlih; fahal yanzuroona illaa sunnatal awwaleen; falan tajida lisunnatil laahi tabdeelanw wa lan tajida lisunnatil laahi tahweela
(அன்றி) இவர்கள் கர்வம்கொண்டு பூமியில் தீய காரியங்களைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். தீயவர்களின் சூழ்ச்சி அச்சூழ்ச்சிக்காரரைத் தவிர மற்றெவரையும் சூழ்ந்துகொள்ளாது. (அழிந்துபோன) முன் சென்றவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியிலும் செல்ல) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? அல்லாஹ் ஏற்படுத்திய வழிக்கு மாற்றத்தை நிச்சயமாக நீங்கள் காண மாட்டீர்கள். (அவ்வாறே) அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் கோணலையும் நிச்சயமாக நீங்கள் காணமாட்டீர்கள்.
Awalam yaseeroo fil ardi fa yanzuroo kaifa kaana 'aaqibatul lazeena min qblihim wa kaanoo ashadda minhum quwwah; wa maa kaanal laahu liyu'jizahoo min shai'in fis samaawaati wa laa fil ard; innahoo kaana 'Aleeman Qadeeraa
பூமியில் இவர்கள் சுற்றித் திரிந்து பார்க்கவில்லையா? (அவ்வாறாயின்) இவர்களைவிட பலசாலிகளான இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (அவர்கள் எவ்வளவோ பலசாலிகளாக இருந்தும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வானத்திலோ, பூமியிலோ உள்ள யாதொன்றுமே அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும் பெரும் ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.
Wa law yu'aakhizul laahun naasa bima kasaboo maa taraka 'alaa zahrihaa min daaabbatinw wa laakiny yu'akhkhiruhum ilaaa ajalim musamman fa izaa jaaa'a ajaluhum fa innal laaha kaana bi'ibaadihee Baseeraa
மனிதர்கள் செய்யும் பாவத்திற்காக அவர்களை (உடனுக் குடன்) அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் யாதொரு (மனித) உயிரையும் விட்டு வைக்கமாட்டான். ஆயினும், அவர்களுக்குக் குறிப்பிட்ட தவணை வரையிலும் விட்டு வைக்கின்றான். அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் (உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.