Skip to main content

وَلَا ٱلظِّلُّ
நிழலும் சமமாகாது
وَلَا ٱلْحَرُورُ
வெயிலும் சமமாகாது

Wa laz zillu wa lal haroor

நிழலும், வெயிலும் (சமமாகாது).

Tafseer

وَمَا يَسْتَوِى
சமமாக மாட்டார்கள்
ٱلْأَحْيَآءُ
உயிருள்ளவர்களும்
وَلَا ٱلْأَمْوَٰتُۚ
இறந்தவர்களும்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يُسْمِعُ
செவியேற்க வைப்பான்
مَن يَشَآءُۖ
தான் நாடுகின்றவரை
وَمَآ أَنتَ
நீர் இல்லை
بِمُسْمِعٍ
செவியேற்க வைப்பவராக
مَّن فِى
மண்ணறையில் உள்ளவர்களை

Wa maa yastawil ahyaaa'u wa lal amwaat; innal laaha yusmi'u mai yashaaa'u wa maaa anta bimusi'im man fil quboor

உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைச் செவியுறும்படிச் செய்கின்றான். (நபியே!) சமாதிகளில் உள்ளவர்களை செவியுறும்படிச் செய்ய உங்களால் முடியாது.

Tafseer

إِنْ أَنتَ
நீர் இல்லை
إِلَّا
தவிர
نَذِيرٌ
அச்சமூட்டி எச்சரிப்பவரே

In anta illaa nazeer

நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர (நீங்கள் கூறுகிறவாறே செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவர்) அல்ல.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَرْسَلْنَٰكَ
உம்மை அனுப்பினோம்
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
بَشِيرًا
நற்செய்தி கூறுபவராக(வும்)
وَنَذِيرًاۚ
அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்
وَإِن مِّنْ
எந்த ஒரு சமுதாயமும் இல்லை
إِلَّا خَلَا
சென்றிருந்தே தவிர
فِيهَا
அவர்களில்
نَذِيرٌ
அச்சமூட்டி எச்சரிப்பவர்

Innaa arsalnaak bil haqqi basheeranw wa nazeeraa; wa im min ummatin illaa khalaa feehaa nazeer

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டும்) அனுப்பி இருக்கின்றோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்க வில்லை.

Tafseer

وَإِن يُكَذِّبُوكَ
இவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
فَقَدْ
திட்டமாக
كَذَّبَ
பொய்ப்பித்துள்ளனர்
ٱلَّذِينَ مِن
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும்
جَآءَتْهُمْ
அவர்கள் கொண்டுவந்தனர்
رُسُلُهُم
அவர்களுடைய தூதர்கள்
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளையும்
وَبِٱلزُّبُرِ
வேதங்களையும்
وَبِٱلْكِتَٰبِ
வேதங்களையும்
ٱلْمُنِيرِ
பிரகாசமான

Wa inyukazzibooka faqad kazzabal lazeena min qablihim jaaa'at hum Rusuluhum bilbaiyinaati wa biz Zuburi wa bil Kitaabil Muneer

(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் அவர்களிடம் வந்த நம்முடைய தூதர்களைப் பொய்யாக்கினார்கள். அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் "ஸுஹுஃபு"களையும், பிரகாசமான வேதங்களையும் அவர்களிடம் கொண்டு வந்திருந்தனர்.

Tafseer

ثُمَّ
பிறகு
أَخَذْتُ
நான் தண்டித்தேன்
ٱلَّذِينَ كَفَرُوا۟ۖ
நிராகரித்தவர்களை
فَكَيْفَ
எப்படி?
كَانَ
இருந்தது
نَكِيرِ
எனது மாற்றம்

Summa akhaztul lazeena kafaroo fakaifa kaana nakeer

ஆகவே, (அத்தூதர்களை) நிராகரித்த அவர்களை நாம் பிடித்துக்கொண்டோம். அவர்களுடைய நிராகரிப்பு எவ்வாறாயிற்று (என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவ்வாறே உங்களை நிராகரிக்கும் இவர்களையும் வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்வோம்.)

Tafseer

أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
أَنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
أَنزَلَ
இறக்கினான்
مِنَ ٱلسَّمَآءِ
மேகத்தில் இருந்து
مَآءً
மழையை
فَأَخْرَجْنَا
நாம் உற்பத்தி செய்தோம்
بِهِۦ
அதன் மூலம்
ثَمَرَٰتٍ
கனிகளை
مُّخْتَلِفًا
பலதரப்பட்ட
أَلْوَٰنُهَاۚ
அவற்றின் நிறங்கள்
وَمِنَ ٱلْجِبَالِ
இன்னும் மலைகளில்
جُدَدٌۢ
பாதைகள்
بِيضٌ
வெண்மையான
وَحُمْرٌ
இன்னும் சிவப்பான
مُّخْتَلِفٌ
பலதரப்பட்டவையாக
أَلْوَٰنُهَا
அவற்றின் நிறங்கள்
وَغَرَابِيبُ
இன்னும் மலைகளும்
سُودٌ
கருப்பான

Alam tara annal laaha anzala minas samaaa'i maaa'an fa akhrajnaa bihee samaraatim mukhtalifan alwaanuhaa; wa minal jibaali judadum beedunw wa humrum mukhtalifun alwaanuhaa wa gharaabeebu sood

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? பின்னரும் (அல்லாஹ்வாகிய) நாம்தாம் அதனைக் கொண்டு பலவிதமான (ருசிகளையும்) நிறங்களை உடைய காய் கனிகளை வெளியாக்குகின்றோம். இன்னும் மலைகளில் வெள்ளை, சிகப்பு முதலிய பல நிறங்கள் உள்ளவைகளும், சுத்தக் கருப்பு நிறம் உள்ளவைகளும் இருக்கின்றன.

Tafseer

وَمِنَ ٱلنَّاسِ
மக்களிலும்
وَٱلدَّوَآبِّ
கால்நடைகளிலும்
وَٱلْأَنْعَٰمِ
ஆடு மாடு ஒட்டகங்களிலும்
مُخْتَلِفٌ
மாறுபட்டவையாக
أَلْوَٰنُهُۥ
அவற்றின் நிறங்கள்
كَذَٰلِكَۗ
இவ்வாறே
إِنَّمَا يَخْشَى
அஞ்சுவதெல்லாம்
ٱللَّهَ
அல்லாஹ்வை
مِنْ عِبَادِهِ
அவனது அடியார்களில்
ٱلْعُلَمَٰٓؤُا۟ۗ
அறிஞர்கள்தான்
إِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
عَزِيزٌ
மிகைத்தவன்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்

Wa minan naasi wadda waaabbi wal an'aami mukhtalifun alwaanuhoo kazalik; innamaa yakhshal laaha min 'ibaadihil 'ulamaaa'; innal laaha 'Azeezun Ghafoor

மனிதர்களிலும், உயிருள்ளவைகளிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள் தாம். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
يَتْلُونَ
ஓதுகின்றார்கள்
كِتَٰبَ
வேதத்தை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَأَقَامُوا۟
இன்னும் நிலைநிறுத்தினர்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَأَنفَقُوا۟
இன்னும் தர்மம் செய்தார்கள்
مِمَّا رَزَقْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து
سِرًّا
இரகசியமாகவும்
وَعَلَانِيَةً
வெளிப்படையாகவும்
يَرْجُونَ
ஆதரவு வைக்கின்றனர்
تِجَٰرَةً
வியாபாரத்தை
لَّن تَبُورَ
அறவே அழிந்து போகாத

Innal lazeena yatloona Kitabbal laahi wa aqaamus Salaata wa anfaqoo mimmaa razaqnaahum sirranw wa 'alaa niyatany yarjoona tijaaratal lan taboor

எவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை ஓதி, தொழுகை யையும் கடைப்பிடித்து, நாம் அவர்களுக்கு அளித்தவை களை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தானம் செய்து வருகிறார்களோ அவர்கள் நிச்சயமாக என்றுமே நஷ்டமடையாத (லாபம் தரும்) ஒரு வர்த்தகத்தை எதிர்பார்க்கின்றார்கள்.

Tafseer

لِيُوَفِّيَهُمْ
அவன் அவர்களுக்கு முழுமையாக நிறைவேற்றுவதற்கு(ம்)
أُجُورَهُمْ
கூலிகளை அவர்களின்
وَيَزِيدَهُم
மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கு
مِّن فَضْلِهِۦٓۚ
தனது அருளிலிருந்து
إِنَّهُۥ
நிச்சமாக அவன்
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
شَكُورٌ
நன்றியுடையவன்

Liyuwaffiyahum ujoorahum wa yazeedahum min fadlih; innahoo Ghafoorun Shakoor

(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களுடைய கூலியைப் பூரணமாகவே கொடுத்து தன்னுடைய அருளைக் கொண்டு பின்னும் அதிகமாகவும் கொடுப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் நன்றி செலுத்துபவர்களை அறிபவனுமாக இருக்கிறான்.

Tafseer