Wallaahu khalaqakum min turaabin summa min nutfatin summa ja'alakum azwaajaa; wa maa tahmilu min unsaa wa laa tada'u illaa bi'ilmih; wa maa yu'ammaru mim mu'ammarinw wa laa yunqasu min 'umuriheee illaa fee kitaab; inna zaalika 'alal laahi yaseer
அல்லாஹ்தான் உங்களை (ஆரம்பத்தில்) மண்ணால் உற்பத்தி செய்தான். பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து, பின்னர் (ஆண், பெண் ஜோடி) ஜோடியாக உங்களை ஆக்கினான். அவன் அறியாமல் யாதொரு பெண் கர்ப்பமாவதும் இல்லை; பிரசவிப்பதும் இல்லை. அவனுடைய "லவ்ஹுல் மஹ்ஃபூளில்" இல்லாது எவனுடைய வயதும் அதிகரிப்பதுமில்லை; குறைந்து விடுவதும் இல்லை. நிச்சயமாக இ(வை அனைத்தையும் அறிந்திருப்ப)து அல்லாஹ்வுக்குச் சுலபமானதே!
Wa maa yastawil bahraani haaza 'azbun furaatun saaa'ighun sharaabuhoo wa haazaa milhun ujaaj; wa min kullin taakuloona lahman tariyyanw wa tastakhrijoona hilyatan talbasoonahaa wa taral fulka feehi mawaakhira litabtaghoo min fadlihee wa la'allakm tashkuroon
இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்த போதிலும்) இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கின்றீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய(முத்து, பவளம் போன்ற)வைகளையும் அவற்றிலிருந்து எடுக்கின்றீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
Yoolijul laila fin nahaari wa yoolijun nahaara fil laili wa sakhkharash shamsa wal qamara kulluny yajree li ajalim musammaa; zaalikumul lahuu Rabbukum lahul mulk; wallazeena tad'oona min doonihee maa yamlikoona min qitmeer
அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் தனக்குள் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவைகளுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவைகளை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கின்றீர்களோ அவைகளுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை.
in tad'oohum laa yasma'oo du'aaa'akum wa law sami'oo mas tajaaboo lakum; wa Yawmal Qiyaamati Yakfuroona bishirkikum; wa laa yunabbi'uka mislu khabeer
அவைகளை நீங்கள் அழைத்தபோதிலும் உங்களுடைய அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவைகளை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவைகளின் செயலற்ற தன்மை) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உங்களுக்கு அறிவிக்கமாட்டார்.
Yaaa ayyunhan naasu antumul fuqaraaa'u ilallaahi wallaahu Huwal Ghaniyyul Hameed
மனிதர்களே! நீங்கள் அனைரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ் வினுடைய உதவி தேவைப்பட்டவர்களாக இருக்கின்றீர்கள். அல்லாஹ்வோ (உங்களுடைய) தேவையற்றவனும் புகழுக்குரிய வனுமாக இருக்கின்றான்.
Iny yashaa yuzhibkum wa yaati bikhalqin jadeed
அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.
Wa maa zaalika 'alal laahi bi'azeez
இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல.
Wa laa taziru waaziratun wizra ukhraa; wa in tad'u musqalatun ilaa himlihaa laa yuhmal minhu shai'unw wa law kaana zaa qurbaa; innamaa tunzirul lazeena yakhshawna Rabbahum bilghaibi wa aqaamus Sallah; wa man tazakkaa fa innamaa yatazakkaa linafsih; wa ilal laahil maseer
(மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்துகொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகின்றார்களோ அவர்களுக்குத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கின்றாரோ அவர் தன்னுடைய நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கின்றார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கின்றது.
Wa maa tastawil a'maa wal baseer
குருடனும் பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
Wa laz zulumaatu wa lannoon
(அவ்வாறே) இருளும் பிரகாசமும் (சமமாகாது).