Skip to main content

ஸூரத்துஸ் ஸபா வசனம் ௧௯

فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَيْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْٓا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ   ( سبإ: ١٩ )

But they said
فَقَالُوا۟
ஆனால் அவர்கள் கூறினர்
"Our Lord
رَبَّنَا
எங்கள் இறைவா!
lengthen (the distance)
بَٰعِدْ
தூரத்தை ஏற்படுத்து!
between
بَيْنَ
மத்தியில்
our journeys"
أَسْفَارِنَا
எங்கள் பயணங்களுக்கு
And they wronged
وَظَلَمُوٓا۟
இன்னும் அநீதி இழைத்தனர்
themselves
أَنفُسَهُمْ
தங்களுக்குத் தாமே
so We made them
فَجَعَلْنَٰهُمْ
ஆகவே, அவர்களை ஆக்கிவிட்டோம்
narrations
أَحَادِيثَ
பேசப்படக்கூடிய கதைகளாக
and We dispersed them
وَمَزَّقْنَٰهُمْ
அவர்களை கிழித்துவிட்டோம்
(in) a total dispersion
كُلَّ مُمَزَّقٍۚ
சுக்கு நூறாக
Indeed
إِنَّ
நிச்சயமாக
in that
فِى ذَٰلِكَ
இதில் இருக்கின்றன
surely (are) Signs
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
for everyone
لِّكُلِّ
எல்லோருக்கும்
patient
صَبَّارٍ
பெரும் பொறுமையாளர்(கள்)
(and) grateful
شَكُورٍ
அதிகம் நன்றி செலுத்துகின்றவர்(கள்)

Faqaaloo Rabbanaa baa'id baina asfaarinaa wa zalamooo anfusahum faja'alnaahum ahaadeesa wa mazzaq naahum kulla mumazzaq; inna fee zaalika la Aayaatil likulli sabbaarin shakoor (Sabaʾ 34:19)

Abdul Hameed Baqavi:

ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து "தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்துவிடு)வாயாக!" என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசக்கூடிய கதைகளாக்கி விட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.

English Sahih:

But [insolently] they said, "Our Lord, lengthen the distance between our journeys," and wronged themselves, so We made them narrations and dispersed them in total dispersion. Indeed in that are signs for everyone patient and grateful. ([34] Saba : 19)

1 Jan Trust Foundation

ஆனால், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!” என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.