۞ وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًاۗ يٰجِبَالُ اَوِّبِيْ مَعَهٗ وَالطَّيْرَ ۚوَاَلَنَّا لَهُ الْحَدِيْدَۙ ( سبإ: ١٠ )
Wa laqad aatainaa Daawooda minnaa fadlany yaa jibaalu awwibee ma'ahoo wattaira wa alannaa lahul hadeed (Sabaʾ 34:10)
Abdul Hameed Baqavi:
மெய்யாகவே நாம் தாவூதுக்குப் பெரும் அருள்புரிந்து மலைகளை நோக்கி "நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம். அவ்வாறே பறவைகளுக்கும் (கட்டளையிட்டோம். அன்றி,) அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மெதுவாக்கித் தந்தோம்.
English Sahih:
And We certainly gave David from Us bounty. [We said], "O mountains, repeat [Our] praises with him, and the birds [as well]." And We made pliable for him iron, ([34] Saba : 10)
1 Jan Trust Foundation
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.