Skip to main content

ஸூரத்துல் அஹ்ஜாப வசனம் ௫௦

يٰٓاَيُّهَا النَّبِيُّ اِنَّآ اَحْلَلْنَا لَكَ اَزْوَاجَكَ الّٰتِيْٓ اٰتَيْتَ اُجُوْرَهُنَّ وَمَا مَلَكَتْ يَمِيْنُكَ مِمَّآ اَفَاۤءَ اللّٰهُ عَلَيْكَ وَبَنٰتِ عَمِّكَ وَبَنٰتِ عَمّٰتِكَ وَبَنٰتِ خَالِكَ وَبَنٰتِ خٰلٰتِكَ الّٰتِيْ هَاجَرْنَ مَعَكَۗ وَامْرَاَةً مُّؤْمِنَةً اِنْ وَّهَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ اِنْ اَرَادَ النَّبِيُّ اَنْ يَّسْتَنْكِحَهَا خَالِصَةً لَّكَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَۗ قَدْ عَلِمْنَا مَا فَرَضْنَا عَلَيْهِمْ فِيْٓ اَزْوَاجِهِمْ وَمَا مَلَكَتْ اَيْمَانُهُمْ لِكَيْلَا يَكُوْنَ عَلَيْكَ حَرَجٌۗ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا   ( الأحزاب: ٥٠ )

O Prophet! O Prophet!
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
Indeed, We
إِنَّآ
நிச்சயமாக நாம்
[We] have made lawful
أَحْلَلْنَا
ஆகுமாக்கினோம்
to you
لَكَ
உமக்கு
your wives
أَزْوَٰجَكَ
உமது மனைவிகளை(யும்)
(to) whom
ٱلَّٰتِىٓ
எவர்கள்
you have given
ءَاتَيْتَ
நீர் கொடுத்தீர்
their bridal money
أُجُورَهُنَّ
திருமணக் கொடைகளை அவர்களின்
and whom
وَمَا
இன்னும் எவர்கள்
you rightfully possess
مَلَكَتْ
சொந்தமாகிய(து)
you rightfully possess
يَمِينُكَ
உமது வலக்கரம்
from those (whom) Allah has given Allah has given
مِمَّآ أَفَآءَ ٱللَّهُ
அல்லாஹ் போரில் கொடுத்தவர்களிலிருந்து
to you
عَلَيْكَ
உமக்கு
and (the) daughters
وَبَنَاتِ
மகள்களையும்
(of) your paternal uncles
عَمِّكَ
உமது சாச்சாவின்
and (the) daughters
وَبَنَاتِ
மகள்களையும்
(of) your paternal aunts
عَمَّٰتِكَ
உமது மாமியின்
and (the) daughters
وَبَنَاتِ
மகள்களையும்
(of) your maternal uncles
خَالِكَ
உமது தாய் மாமாவின்
and (the) daughters
وَبَنَاتِ
மகள்களையும்
(of) your maternal aunts
خَٰلَٰتِكَ
உமது காலாவின்
who
ٱلَّٰتِى
எவர்கள்
emigrated
هَاجَرْنَ
ஹிஜ்ரா செய்தனர்
with you
مَعَكَ
உம்முடன்
and a woman
وَٱمْرَأَةً
இன்னும் ஒரு பெண்
believing
مُّؤْمِنَةً
முஃமினான
if she gives
إِن وَهَبَتْ
அன்பளிப்பு செய்தால்
herself
نَفْسَهَا
தன்னை
to the Prophet
لِلنَّبِىِّ
நபிக்கு
if wishes
إِنْ أَرَادَ
நாடினால்
the Prophet
ٱلنَّبِىُّ
நபி(யும்)
to marry her
أَن يَسْتَنكِحَهَا
அவளை மணமுடிக்க
only
خَالِصَةً
பிரத்தியோகமாகும்
for you
لَّكَ
உமக்கு மட்டும்
excluding excluding
مِن دُونِ
அன்றி
the believers
ٱلْمُؤْمِنِينَۗ
முஃமின்கள்
Certainly
قَدْ
திட்டமாக
We know
عَلِمْنَا
நாம் அறிவோம்
what We have made obligatory
مَا فَرَضْنَا
நாம் கடமையாக்கியதை
upon them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
concerning their wives
فِىٓ أَزْوَٰجِهِمْ
அவர்களின் மனைவிமார்களின் விஷயத்தில்
and whom they rightfully possess they rightfully possess
وَمَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ
இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள்
that not should be
لِكَيْلَا يَكُونَ
இருக்கக் கூடாது என்பதற்காக
on you
عَلَيْكَ
உமக்கு
any discomfort
حَرَجٌۗ
சிரமம்
And Allah is And Allah is
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
Oft-Forgiving
غَفُورًا
மன்னிப்பாளனாக,
Most Merciful
رَّحِيمًا
பெரும் கருணையாளனாக

Yaaa aiyuhan Nabiyyu innaaa ahlalnaa laka azwaa jakal laatee aayaita ujoora hunna wa maa malakat yameenuka mimmaaa afaaa'al laahu 'alaika wa banaati 'ammika wa banaati 'ammaatika wa banaati khaalika wa banaati khaalaa tikal laatee haajarna ma'aka wamra atam mu'minatan inw wahabat nafsahaa lin Nabiyyi in araadan Nabiyyu ai yastan kihahaa khaalisatal laka min doonil mu'mineen; qad 'alim naa maa faradnaa 'alaihim feee azwaajihim wa maa malakat aimaanuhum likailaa yakoona 'alaika haraj; wa kaanal laahu Ghafoorar Raheema (al-ʾAḥzāb 33:50)

Abdul Hameed Baqavi:

நபியே! நிச்சயமாக நீங்கள் எவர்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்து கொண்டீர்களோ அவர்களையும், அல்லாஹ் உங்களுக்கு (யுத்தத்தில்) அளித்து உங்களது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களையும் நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். உங்களது தந்தையின் சகோதரர்களின் பெண் மக்கள், உங்களது அத்தையின் பெண் மக்கள், உங்களது தாய்மாமனின் பெண் மக்கள், உங்களது தாயின் சகோதரியுடைய பெண் மக்கள் ஆகிய இவர்களில் எவர்கள் (மக்காவை விட்டு) உங்களுடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும் (நீங்கள் திருமணம் செய்துகொள்ள நாம் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். அன்றி) நம்பிக்கை கொண்ட யாதொரு பெண், தன்னை (மஹரின்றியே) நபிக்கு அர்ப்பணம் செய்து நபியும் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அவளையும் உங்களுக்கு ஆகுமாக்கி வைத்திருக்கின்றோம். (நபியே!) இது சொந்தமாக உங்களுக்கு (நாம் அளிக்கும்) விசேஷ சுதந்திரமாகும்; மற்ற நம்பிக்கையாளர்களுக்கன்று. (மற்ற நம்பிக்கையாளர்களே!) அவர்கள் மனைவிகள் விஷயத்திலும், அவர்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள் விஷயத்திலும் (மஹர் கொடுத்தே திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், நான்குக்கு அதிகமான பெண்களை திருமணம் செய்துகொள்ளக் கூடாதென்றும்) நாம் அவர்கள் மீது விதித்திருக்கும் கட்டளையை நன்கறிவோம். (அதனை அவர்கள் நிறைவேற்றியே தீர வேண்டும்.) உங்களுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் ஏற்படாமல் இருப்பதற்காக (அக்கடமையிலிருந்து) உங்களுக்கு விதி விலக்குச் செய்தோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

O Prophet, indeed We have made lawful to you your wives to whom you have given their due compensation and those your right hand possesses from what Allah has returned to you [of captives] and the daughters of your paternal uncles and the daughters of your paternal aunts and the daughters of your maternal uncles and the daughters of your maternal aunts who emigrated with you and a believing woman if she gives herself to the Prophet [and] if the Prophet wishes to marry her; [this is] only for you, excluding the [other] believers. We certainly know what We have made obligatory upon them concerning their wives and those their right hands possess, [but this is for you] in order that there will be upon you no discomfort [i.e., difficulty]. And ever is Allah Forgiving and Merciful. ([33] Al-Ahzab : 50)

1 Jan Trust Foundation

நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.