Skip to main content

لَّقَدْ
திட்டவட்டமாக
كَانَ
இருக்கிறது
لَكُمْ
உங்களுக்கு
فِى رَسُولِ
தூதரில்
ٱللَّهِ
அல்லாஹ்வின்
أُسْوَةٌ
முன்மாதிரி
حَسَنَةٌ
அழகிய(து)
لِّمَن كَانَ
ஆதரவு வைக்கின்றவராக இருப்பவருக்கு
ٱللَّهَ
அல்லாஹ்வையும்
وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَ
மறுமை நாளையும்
وَذَكَرَ
இன்னும் அவர் நினைவு கூர்வார்
ٱللَّهَ
அல்லாஹ்வை
كَثِيرًا
அதிகம்

Laqad kaana lakum fee Rasoolil laahi uswatun hasanatul liman kaana yarjul laaha wal yawmal Aakhira wa azkaral laaha kaseeraa

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்துகொண்டிருப்பார்கள்.

Tafseer

وَلَمَّا رَءَا
பார்த்தபோது
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
ٱلْأَحْزَابَ
இராணுவங்களை
قَالُوا۟
கூறினார்கள்
هَٰذَا
இது
مَا وَعَدَنَا
எங்களுக்கு வாக்களித்ததாகும்
ٱللَّهُ
அல்லாஹ்(வும்)
وَرَسُولُهُۥ
அவனது தூதரும்
وَصَدَقَ
உண்மை கூறினார்(கள்)
ٱللَّهُ
அல்லாஹ்வும்
وَرَسُولُهُۥۚ
அவனது தூதரும்
وَمَا
அதிகப்படுத்தவில்லை
زَادَهُمْ
அவர்களுக்கு
إِلَّآ
தவிர
إِيمَٰنًا
நம்பிக்கை(யையும்)
وَتَسْلِيمًا
திருப்தியையும்

Wa lammaa ra al mu'minoonal Ahzaaba qaaloo haaza maa wa'adanal laahu wa Rasooluh; wa maa zaadahum illaaa eemaananw wa tasleemaa

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவத்தைக் கண்ட பொழுது "(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மை யையே கூறினார்கள்" என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் வழிபாட்டையும் அன்றி வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்தி விடவில்லை.

Tafseer

مِّنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
رِجَالٌ
ஆண்களும்
صَدَقُوا۟
உண்மைப்படுத்தினர்
مَا
எதை
عَٰهَدُوا۟
ஒப்பந்தம் செய்தார்களோ
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
عَلَيْهِۖ
அதன் மீது
فَمِنْهُم
அவர்களில்
مَّن قَضَىٰ
நிறைவேற்றியவரும் உண்டு
نَحْبَهُۥ
தனது நேர்ச்சையை
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
مَّن يَنتَظِرُۖ
எதிர்பார்ப்பவரும் உண்டு
وَمَا بَدَّلُوا۟
இன்னும் அவர்கள் மாற்றிவிடவில்லை

Minal mu'mineena rijaalun sadaqoo maa 'aahadul laaha 'alaihi faminhum man qadaa nahbahoo wa minhum mai yantaziru wa maa baddaloo tabdeelaa

நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து "ஷஹாதத்" என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்துவிட்டனர். வேறு சிலர் (மரணிக்க வில்லை என்றாலும் அதனை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியி லிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டு விடவேயில்லை.

Tafseer

لِّيَجْزِىَ
இறுதியாக நற்கூலி தருவான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களுக்கு
بِصِدْقِهِمْ
அவர்களின் உண்மைக்கு
وَيُعَذِّبَ
இன்னும் தண்டிப்பான்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்களை
إِن شَآءَ
அவன் நாடினால்
أَوْ
அல்லது
يَتُوبَ
பிழை பொறுப்பான்
عَلَيْهِمْۚ
அவர்களை
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
كَانَ
இருக்கின்றான்
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
رَّحِيمًا
மகா கருணையாளனாக

Li yajziyal aahus saadiqeena bisidqihim wa yu'azzibal munaafiqeena in shaaa'a aw yatooba 'alaihim; innal laaha kaana Ghafoorar Raheemaa

உண்மையுடன் நடந்துகொண்ட இத்தகையவர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

Tafseer

وَرَدَّ
திருப்பிவிட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பாளர்களை
بِغَيْظِهِمْ
அவர்களது கோபத்துடன்
لَمْ يَنَالُوا۟
அவர்கள் அடையவில்லை
خَيْرًاۚ
எந்த நன்மையையும்
وَكَفَى
பாதுகாத்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
ٱلْقِتَالَۚ
போரை விட்டும்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
قَوِيًّا
மகா வலிமை மிக்கவனாக
عَزِيزًا
மிகைத்தவனாக

Wa raddal laahul lazeena kafaroo bighaizihim lam yanaaloo khairaa; wa kafal laahul mu'mineenal qitaal; wa kaanal laahu Qawiyyan 'Azeezaa

நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்துவிட்டான். (இப்போரில்) அவர்கள் யாதொரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமேயடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே காத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கை யாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

وَأَنزَلَ
இறக்கினான்
ٱلَّذِينَ
உதவியவர்களை
ظَٰهَرُوهُم
உதவியவர்களை அவர்களுக்கு
مِّنْ
இருந்து
أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
مِن صَيَاصِيهِمْ
அவர்களின் கோட்டைகளில் இருந்து
وَقَذَفَ
இன்னும் போட்டான்
فِى قُلُوبِهِمُ
அவர்களின் உள்ளங்களில்
ٱلرُّعْبَ
திகிலை
فَرِيقًا
ஒரு பிரிவினரை
تَقْتُلُونَ
கொன்றீர்கள்
وَتَأْسِرُونَ
இன்னும் சிறைப்பிடித்தீர்கள்
فَرِيقًا
ஒரு பிரிவினரை

Wa anzalal lazeena zaaha roohum min Ahlil Kitaabi min sa yaaseehim wa qazafa fee quloobihimm mur ru'ba freeqan taqtuloona wa taasiroona fareeqaaa

(நம்பிக்கையாளர்களே! உங்கள்) எதிரிகளுக்கு உதவி செய்த வேதத்தை உடையவர்(களாகிய யூதர்)களை அவர்களுடைய அரண்மனைகளிலிருந்து இறங்க வைத்து அவர்களுடைய உள்ளங்களில் (திடுக்கத்தையும்) நடுக்கத்தையும் போட்டுவிட்டான். ஆகவே, அவர்களில் ஒரு தொகையினரை நீங்கள் வெட்டி விட்டீர்கள்; மற்றொரு தொகையினரை நீங்கள் சிறை பிடித்தீர்கள்.

Tafseer

وَأَوْرَثَكُمْ
இன்னும் உங்களுக்கு சொந்தமாக்கினான்
أَرْضَهُمْ
அவர்களின் பூமியை(யும்)
وَدِيَٰرَهُمْ
இல்லங்களையும் அவர்களின்
وَأَمْوَٰلَهُمْ
அவர்களின் செல்வங்களையும்
وَأَرْضًا
இன்னும் ஒரு பூமியையும்
لَّمْ تَطَـُٔوهَاۚ
நீங்கள் மிதிக்காத
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَىٰ كُلِّ
எல்லாவற்றின் மீதும்
قَدِيرًا
பேராற்றலுடையவனாக

Wa awrasakum ardahum wa diyaarahum wa amwaalahum wa ardal lam tata'oohaa; wa kaanal laahu 'alaa kulli shai'in Qadeeraa

அவர்களுடைய பூமிகளையும், அவர்களுடைய வீடுகளையும், அவர்களுடைய பொருள்களையும் (இதுவரையில்) நீங்கள் கால் வைக்காத அவர்களுடைய மற்ற பூமிகளையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
قُل
சொல்வீராக!
لِّأَزْوَٰجِكَ
உமது மனைவிகளுக்கு
إِن كُنتُنَّ
நீங்கள் இருந்தால்
تُرِدْنَ
நீங்கள் விரும்புகிறவர்களாக
ٱلْحَيَوٰةَ
வாழ்க்கையை(யும்)
ٱلدُّنْيَا
உலக
وَزِينَتَهَا
அதன் அலங்காரத்தையும்
فَتَعَالَيْنَ
வாருங்கள்
أُمَتِّعْكُنَّ
உங்களுக்கு செல்வம் தருகின்றேன்
وَأُسَرِّحْكُنَّ
இன்னும் உங்களை விட்டுவிடுகின்றேன்
سَرَاحًا جَمِيلًا
அழகிய முறையில்

Yaaa aiyuhan Nabiyyu qul li azwaajika i kuntunna turidnal hayaatad dunyaa wa zeenatahaa fata'aalaina umatti'kunna wa usarrihkunna saraahan jameela

நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன்.

Tafseer

وَإِن كُنتُنَّ
நீங்கள் இருந்தால்
تُرِدْنَ
விரும்புகிறவர்களாக
ٱللَّهَ
அல்லாஹ்வை(யும்)
وَرَسُولَهُۥ
அவனது தூதரையும்
وَٱلدَّارَ
வீட்டையும்
ٱلْءَاخِرَةَ
மறுமை
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
أَعَدَّ
தயார்படுத்தி வைத்துள்ளான்
لِلْمُحْسِنَٰتِ
நல்லவர்களுக்கு
مِنكُنَّ
உங்களில்
أَجْرًا
கூலியை
عَظِيمًا
மகத்தான

Wa in kuntunna turidnal laaha wa Rasoolahoo wad Daaral Aakhirata fa innal laaha a'adda lil muhsinaati min kunna ajjran 'azeemaa

அன்றி, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர் களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கின்றான்.

Tafseer

يَٰنِسَآءَ
மனைவிகளே!
ٱلنَّبِىِّ
நபியின்
مَن
யார்
يَأْتِ
செய்வாரோ
مِنكُنَّ
உங்களில்
بِفَٰحِشَةٍ
மானக்கேடான செயலை
مُّبَيِّنَةٍ
தெளிவான
يُضَٰعَفْ
இரு மடங்காக ஆக்கப்படும்
لَهَا
அவருக்கு
ٱلْعَذَابُ
வேதனை
ضِعْفَيْنِۚ
இரு மடங்காக
وَكَانَ
இருக்கின்றது
ذَٰلِكَ
அது
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
يَسِيرًا
இலகுவானதாக

Yaa nisaaa'an Nabiyyi mai yaati minkunna bifaa hishatim mubaiyinatiny yudaa'af lahal 'azaabu di'fain wa kaana zaalika 'alal laahi yaseera

நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும் பகிரங்கமான யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்வாராயின் அதற்குரிய தண்டனை அவர்களுக்கு இரு மடங்காக அதிகரிக்கப் படும். இது அல்லாஹ்விற்கு மிக்க சுலபமானதாகவே இருக்கின்றது!

Tafseer