Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௫

اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰٓى اِنِّيْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْٓا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۚ ثُمَّ اِلَيَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ  ( آل عمران: ٥٥ )

When
إِذْ
சமயம்
said
قَالَ
கூறினான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
"O Isa!
يَٰعِيسَىٰٓ
ஈஸாவே
Indeed, I
إِنِّى
நிச்சயமாக நான்
(will) take you
مُتَوَفِّيكَ
உம்மை கைப்பற்றுவேன்
and raise you
وَرَافِعُكَ
இன்னும் உம்மை உயர்த்துவேன்
to Myself
إِلَىَّ
என் பக்கம்
and purify you
وَمُطَهِّرُكَ
இன்னும் உம்மை பரிசுத்தப்படுத்துவேன்
from those who
مِنَ ٱلَّذِينَ
இருந்து/எவர்கள்
disbelieve[d]
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
and I will make
وَجَاعِلُ
இன்னும் ஆக்குவேன்
those who
ٱلَّذِينَ
எவர்களை
follow[ed] you
ٱتَّبَعُوكَ
உம்மைப் பின்பற்றினார்கள்
superior (to) those who
فَوْقَ ٱلَّذِينَ
மேல்/எவர்கள்
disbelieve[d]
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
on
إِلَىٰ
வரை
(the) Day (of) [the] Resurrection
يَوْمِ ٱلْقِيَٰمَةِۖ
மறுமை நாள்
Then to Me
ثُمَّ إِلَىَّ
பிறகு/என் பக்கம்
(is) your return
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
and I will judge
فَأَحْكُمُ
இன்னும் தீர்ப்பளிப்பேன்
between you
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
about what
فِيمَا
எதில்
you were
كُنتُمْ
இருந்தீர்கள்
[in it]
فِيهِ
அதில்
differing
تَخْتَلِفُونَ
தர்க்கம் செய்கிறீர்கள்

Iz qaalal laahu yaa 'Eesaaa innee mutawaffeeka wa raafi'uka ilaiya wa mutah hiruka minal lazeena kafaroo wa jaa'ilul lazeenattaba ooka fawqal lazeena kafarooo ilaa Yawmil Qiyaamati summa ilaiya marji'ukum fa ahkumu bainakum feemaa kuntum feehi takhtaliifoon (ʾĀl ʿImrān 3:55)

Abdul Hameed Baqavi:

(ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்: "ஈஸாவே நிச்சயமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைபடுத்துவேன். உங்களை நம்மளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதிநாள் வரையில் மேலாக்கியும் வைப்பேன்" (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் பின்னும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்" (என்றும் கூறினான்.)

English Sahih:

[Mention] when Allah said, "O Jesus, indeed I will take you and raise you to Myself and purify [i.e., free] you from those who disbelieve and make those who follow you [in submission to Allah alone] superior to those who disbelieve until the Day of Resurrection. Then to Me is your return, and I will judge between you concerning that in which you used to differ. ([3] Ali 'Imran : 55)

1 Jan Trust Foundation

“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!