Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௪௧

قَالَ رَبِّ اجْعَلْ لِّيْٓ اٰيَةً ۗ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ۗ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِيِّ وَالْاِبْكَارِ ࣖ  ( آل عمران: ٤١ )

He said
قَالَ
கூறினார்
"My Lord
رَبِّ
என் இறைவா
make for me
ٱجْعَل لِّىٓ
ஆக்கு/எனக்கு
a sign"
ءَايَةًۖ
ஓர் அத்தாட்சியை
He said
قَالَ
கூறினான்
your sign
ءَايَتُكَ
உம் அத்தாட்சி
(is) that not you will speak
أَلَّا تُكَلِّمَ
நீர் பேசமால் இருப்பது
(to) the people
ٱلنَّاسَ
மக்களிடம்
(for) three days
ثَلَٰثَةَ أَيَّامٍ
மூன்று நாட்கள்
except (with) gestures
إِلَّا رَمْزًاۗ
தவிர/சாடையாக
And remember
وَٱذْكُر
இன்னும் நினைவு கூறுவீராக
your Lord
رَّبَّكَ
உம் இறைவனை
much
كَثِيرًا
அதிகம்
and glorify (Him)
وَسَبِّحْ
இன்னும் துதித்து தூய்மைப்படுத்துவீராக
in the evening
بِٱلْعَشِىِّ
மாலையில்
and (in) the morning"
وَٱلْإِبْكَٰرِ
இன்னும் காலையில்

Qaala Rabbij 'al leee Aayatan qaala Aaayatuka allaa tukalliman naasa salaasata ayyaamin illa ramzaa; wzkur Rabbaka kaseeranw wa sabbih bil'ashiyyi wal ibkaar (ʾĀl ʿImrān 3:41)

Abdul Hameed Baqavi:

(அதற்கு) ஜகரிய்யா "என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக" என்று கேட்டார். அதற்கு (இறைவன்) "உங்களுக்களிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரையில் ஜாடையாகவே தவிர நீங்கள் மனிதர்களுடன் பேசமாட்டீர்கள். (அந்நாள்களில்) நீங்கள் உங்கள் இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருங்கள்" என்று கூறினான்.

English Sahih:

He said, "My Lord, make for me a sign." He said, "Your sign is that you will not [be able to] speak to the people for three days except by gesture. And remember your Lord much and exalt [Him with praise] in the evening and the morning." ([3] Ali 'Imran : 41)

1 Jan Trust Foundation

“என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது| மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.