Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௨௦

فَاِنْ حَاۤجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِيَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ ۗوَقُلْ لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّيّٖنَ ءَاَسْلَمْتُمْ ۗ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ ۗ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ ࣖ  ( آل عمران: ٢٠ )

Then if they argue with you
فَإِنْ حَآجُّوكَ
அவர்கள் உம்முடன் தர்க்கித்தால்
then say
فَقُلْ
கூறுவீராக
"I have submitted
أَسْلَمْتُ
பணியவைத்தேன்
myself
وَجْهِىَ
என் முகத்தை
to Allah
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
and (those) who follow me"
وَمَنِ ٱتَّبَعَنِۗ
இன்னும் என்னைப் பின்பற்றியவர்கள்
And say
وَقُل
இன்னும் கூறுவீராக
to those who
لِّلَّذِينَ
எவர்களுக்கு
were given the Book
أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப் பட்டார்கள்
and the unlettered people
وَٱلْأُمِّيِّۦنَ
இன்னும் பாமரர்கள்
"Have you submitted yourselves?"
ءَأَسْلَمْتُمْۚ
பணிய வைக்கிறீர்களா?
Then if they submit
فَإِنْ أَسْلَمُوا۟
அவர்கள் பணியவைத்தால்
then surely they are guided
فَقَدِ ٱهْتَدَوا۟ۖ
திட்டமாக நேர்வழி அடைவார்கள்
But if they turn back
وَّإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
then only on you
فَإِنَّمَا عَلَيْكَ
உம்மீது எல்லாம்
(is) to [the] convey
ٱلْبَلَٰغُۗ
தெரிவிப்பதுதான்
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Seer
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
of [His] slaves
بِٱلْعِبَادِ
அடியார்களை

Fa in haaajjooka faqul aslamtu wajhiya lillaahi wa manit taba'an; wa qul lillazeena ootul Kitaaba wal ummiyyeena 'a-aslamtum; fa in aslamoo faqadih tadaw wa in tawallaw fa innamaa 'alaikal balaagh; wallaahu baseerum bil 'ibaad (ʾĀl ʿImrān 3:20)

Abdul Hameed Baqavi:

(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர் களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி "நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கின்றீர்களா?" என்று கேளுங்கள். (அவ்வாறே) அவர்களும் தலை சாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அன்றி அவர்கள் புறக்கணித்துவிட்டால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்முடைய தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

English Sahih:

So if they argue with you, say, "I have submitted myself to Allah [in IsLam], and [so have] those who follow me." And say to those who were given the Scripture and [to] the unlearned, "Have you submitted yourselves?" And if they submit [in IsLam], they are rightly guided; but if they turn away – then upon you is only the [duty of] notification. And Allah is Seeing of [His] servants. ([3] Ali 'Imran : 20)

1 Jan Trust Foundation

(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக| “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்| “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.