وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْكُمْ وَمَآ اُنْزِلَ اِلَيْهِمْ خٰشِعِيْنَ لِلّٰهِ ۙ لَا يَشْتَرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا ۗ اُولٰۤىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۗ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ ( آل عمران: ١٩٩ )
Wa inna min Ahlil Kitaabi lamai yu minu billaahi wa maaa unzila ilaikum wa maaa unzila ilaihim khaashi 'eena lillaahi laa yashtaroona bi Aayaatil laahi samanan qaleelaa; ulaaa'ika lahum ajruhum 'inda Rabbihim; innal laaha saree'ul hisaab (ʾĀl ʿImrān 3:199)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இத்தகையவர்களும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இத்தகையவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
English Sahih:
And indeed, among the People of the Scripture are those who believe in Allah and what was revealed to you and what was revealed to them, [being] humbly submissive to Allah. They do not exchange the verses of Allah for a small price. Those will have their reward with their Lord. Indeed, Allah is swift in account. ([3] Ali 'Imran : 199)
1 Jan Trust Foundation
மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.