Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௬௮

اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ۗ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ   ( آل عمران: ١٦٨ )

Those who
ٱلَّذِينَ
எவர்கள்
said
قَالُوا۟
கூறினார்கள்
about their brothers
لِإِخْوَٰنِهِمْ
தங்கள் சகோதரர்களுக்கு
while they sat
وَقَعَدُوا۟
இன்னும் உட்கார்ந்தார்கள்
"If they (had) obeyed us
لَوْ أَطَاعُونَا
அவர்கள் கீழ்ப்படிந்திருந்தால்/எங்களுக்கு
not they would have been killed"
مَا قُتِلُوا۟ۗ
அவர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்
Say "Then avert
قُلْ فَٱدْرَءُوا۟
கூறுவீராக/தடுங்கள்
from yourselves
عَنْ أَنفُسِكُمُ
விட்டு/உங்களை
[the] death
ٱلْمَوْتَ
மரணத்தை
if you are
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
truthful
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக

Allazeena qaaloo liikhwaanihim wa qa'adoo law ataa'oonaa maa qutiloo; qul fadra'oo'an anfusikumul mawta in kuntum saadiqeen (ʾĀl ʿImrān 3:168)

Abdul Hameed Baqavi:

அன்றி இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்துகொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் கூறினார்கள். (ஆகவே நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன!) நீங்கள் உங்களையே மரணத்தில் இருந்து தப்பவையுங்கள்!""

English Sahih:

Those who said about their brothers while sitting [at home], "If they had obeyed us, they would not have been killed." Say, "Then prevent death from yourselves, if you should be truthful." ([3] Ali 'Imran : 168)

1 Jan Trust Foundation

(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி| “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).