Qul in kuntum tuhibboonal laaha fattabi' oonee yuhbibkumul laahu wa yaghfir lakum zunoobakum; wallaahu Ghafoorur Raheem
(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்."
Qul atee'ul laaha war Rasoola fa in tawallaw fa innal laaha laa yuhibbul kaafireen
(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை".
Innal laahas tafaaa Aadama wa Noohanw wa Aala Ibraaheema wa Aala Imraana 'alal 'aalameen
நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான்.
Zurriyyatam ba'duhaa mim ba'd; wallaahu Samee'un 'Aleem
அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
Iz qaalatim ra atu 'Imraana Rabbi innee nazartu laka maa fee batnee muharraran fataqabbal minnee innaka Antas Samee'ul 'Aleem
இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்,
Falammaa waqa'athaa qaalat Rabbi innee wada'tuhaaa unsaa wallaahu a'lamu bimaa wada'at wa laisaz zakaru kalunsaa wa innee sammaituhaa Maryama wa innee u'eezuhaa bika wa zurriyyatahaa minash Shaitaanir Rajeem
அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்" என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு "மர்யம்" எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனை களி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்!" என்றார்.
Fataqabbalahaa Rabbuhaa biqaboolin hasaninw wa ambatahaa nabaatan hasananw wa kaffalahaa Zakariyyaa kullamaa dakhala 'alaihaa Zakariyyal Mihraaba wajada 'indahaa rizqan qaala yaa Maryamu annaa laki haazaa qaalat huwa min 'indil laahi innal laaha yarzuqu mai yashaaa'u bighairi hisaab
ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதனை வளரச் செய்து அதனை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள்.
Hunaaalika da'aa Zakariyyaa Rabbahoo qaala Rabbi hab lee mil ladunka zurriyyatan taiyibatan innaka samee'ud du'aaa'
(அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார்.
Fanaadat hul malaaa'ikatu wa huwa qaaa'imuny yusallee fil Mihraabi annal laaha yubashshiruka bi Yahyaa musaddiqam bi Kalimatim minal laahi wa saiyidanw wa hasooranw wa Nabiyyam minas saaliheen
ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.
Qaala Rabbi annaa yakoonu lee ghulaamunw wa qad balaghaniyal kibaru wamraatee 'aaqirun qaala kazaalikal laahu yaf'alu maa yashaaa'
(அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) "என் இறைவனே! எனக்கு எவ்வாறு சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்து விட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்" என்று கூறினார். (அதற்கு இறைவன்) "இவ்வாறே (நடைபெறும்.) அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்" என்று கூறினான்.