Skip to main content

كَدَأْبِ
தன்மையைப் போன்று
ءَالِ
கூட்டத்தாரின்
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
مِن قَبْلِهِمْۚ
அவர்களுக்கு முன்னர்
كَذَّبُوا۟
பொய்ப்பித்தார்கள்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
فَأَخَذَهُمُ
எனவே அவர்களைப் பிடித்தான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِذُنُوبِهِمْۗ
அவர்களுடைய பாவங்களின் காரணமாக
وَٱللَّهُ
இன்னும் அல்லாஹ்
شَدِيدُ
கடுமையானவன்
ٱلْعِقَابِ
தண்டிப்பதில்

Kadaabi Aali Fir'awna wallazeena min qablihim; kazzaboo bi Aayaatinaa fa akhazahumul laahu bizunoo bihim; wallaahu shadeedul 'iqaab

(இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.

Tafseer

قُل
கூறுவீராக
لِّلَّذِينَ
எவர்களுக்கு
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
سَتُغْلَبُونَ
வெற்றி கொள்ளப்படுவீர்கள்
وَتُحْشَرُونَ
இன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
إِلَىٰ جَهَنَّمَۚ
நரகத்தின் பக்கம்
وَبِئْسَ
இன்னும் கெட்டு விட்டது
ٱلْمِهَادُ
தங்குமிடம்

Qul lillazeena kafaroosatughlaboona wa tuhsharoona ilaa jahannam; wa bi'sal mihaad

எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்."

Tafseer

قَدْ كَانَ
திட்டமாக இருந்தது
لَكُمْ
உங்களுக்கு
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
فِى فِئَتَيْنِ
இரு கூட்டங்களில்
ٱلْتَقَتَاۖ
சந்தித்தன
فِئَةٌ
ஒரு கூட்டம்
تُقَٰتِلُ
போர் புரிகிறது
فِى سَبِيلِ
பாதையில்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَأُخْرَىٰ
இன்னும் மற்றொன்று
كَافِرَةٌ
நிராகரிக்கக் கூடியது
يَرَوْنَهُم
இவர்களை காண்கின்றனர்
مِّثْلَيْهِمْ
தங்களைப் போன்று இரு மடங்குகளாக
رَأْىَ
பார்ப்பது
ٱلْعَيْنِۚ
கண்
وَٱللَّهُ
அல்லாஹ்
يُؤَيِّدُ
பலப்படுத்துகிறான்
بِنَصْرِهِۦ
தன் உதவியால்
مَن
எவர்களை
يَشَآءُۗ
நாடுகிறான்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَعِبْرَةً
திட்டமாக ஒரு படிப்பினை
لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ
பார்வை உடையோருக்கு

Qad kaana lakum Aayatun fee fi'atainil taqataa fi'atun tuqaatilu fee sabeelil laahi wa ukhraa kaafiratuny yarawnahum mislaihim raayal 'ayn; wallaahu yu'ayyidu bi nasrihee mai yashaaa'; innaa fee zaalika la 'ibratal li ulil absaar

(பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர் களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.

Tafseer

زُيِّنَ
அலங்கரிக்கப்பட்டுள்ளது
لِلنَّاسِ
மக்களுக்கு
حُبُّ
நேசிப்பது
ٱلشَّهَوَٰتِ
விருப்பங்கள்
مِنَ
இருந்து
ٱلنِّسَآءِ
பெண்கள்
وَٱلْبَنِينَ
இன்னும் ஆண் பிள்ளைகள்
وَٱلْقَنَٰطِيرِ
இன்னும் குவியல்கள்
ٱلْمُقَنطَرَةِ
குவிக்கப்பட்டவை
مِنَ
இருந்து
ٱلذَّهَبِ
தங்கம்
وَٱلْفِضَّةِ
இன்னும் வெள்ளி
وَٱلْخَيْلِ
இன்னும் குதிரைகள்
ٱلْمُسَوَّمَةِ
அடையாளமிடப் பட்டவை
وَٱلْأَنْعَٰمِ
இன்னும் கால்நடைகள்
وَٱلْحَرْثِۗ
இன்னும் விளை நிலம்
ذَٰلِكَ
இவை
مَتَٰعُ
இன்பம்
ٱلْحَيَوٰةِ
வாழ்வின்
ٱلدُّنْيَاۖ
உலகம்
وَٱللَّهُ
அல்லாஹ்
عِندَهُۥ
அவனிடம்தான்
حُسْنُ
அழகிய
ٱلْمَـَٔابِ
தங்குமிடம்

Zuyyina linnaasi hubbush shahawaati minannisaaa'i wal baneena walqanaateeril muqantarati minaz zahabi walfiddati walkhailil musawwamati wal an'aami walhars; zaalika mataa'ul hayaatid dunyaa wallaahu 'indahoo husnul ma-aab

பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.

Tafseer

قُلْ أَؤُنَبِّئُكُم
கூறுவீராக/உங்களுக்கு நான் அறிவிக்கவா?
بِخَيْرٍ
சிறந்ததை
مِّن ذَٰلِكُمْۚ
இவற்றைவிட
لِلَّذِينَ ٱتَّقَوْا۟
அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு
عِندَ
இடம்
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
جَنَّٰتٌ تَجْرِى
சொர்க்கங்கள்/ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
ஆறுகள்
خَٰلِدِينَ
நிரந்தரமானவர்கள்
فِيهَا
அவற்றில்
وَأَزْوَٰجٌ
இன்னும் மனைவிகள்
مُّطَهَّرَةٌ
பரிசுத்தமானவள்
وَرِضْوَٰنٌ
இன்னும் பொருத்தம்
مِّنَ ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَٱللَّهُ
அல்லாஹ்
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
بِٱلْعِبَادِ
அடியார்களை

Qul a'unabbi 'ukum bikhairim min zaalikum; lillazeenat taqaw 'inda Rabbihim jannaatun tajree min tahtihal anhaaru khaalideena feehaa wa azwaajum mutahharatunw wa ridwaanum minal laah; wallaahu baseerum bil'ibaad

(நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَقُولُونَ
கூறுவார்கள்
رَبَّنَآ
எங்கள் இறைவா
إِنَّنَآ
நிச்சயமாக நாங்கள்
ءَامَنَّا
நம்பிக்கை கொண்டோம்
فَٱغْفِرْ
எனவே மன்னி
لَنَا
எங்களுக்கு
ذُنُوبَنَا
எங்கள் பாவங்களை
وَقِنَا
இன்னும் எங்களை காப்பாற்று
عَذَابَ
வேதனையிலிருந்து
ٱلنَّارِ
நரக நெருப்பின்

Allazeena yaqooloona Rabbanaaa innanaaa aamannaa faghfir lanaa zunoobanaa wa qinaa 'azaaban Naar

இத்தகையவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் உன்னை நம்பிக்கை கொள்கின்றோம். ஆதலால் நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!" என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.

Tafseer

ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்கள்
وَٱلصَّٰدِقِينَ
இன்னும் உண்மையாளர்கள்
وَٱلْقَٰنِتِينَ
இன்னும் பணிந்தவர்கள்
وَٱلْمُنفِقِينَ
இன்னும் தர்மம்புரிபவர்கள்
وَٱلْمُسْتَغْفِرِينَ
இன்னும் மன்னிப்புக் கோருபவர்கள்
بِٱلْأَسْحَارِ
இரவின்இறுதிகளில்

Assaabireena wassaa diqeena walqaaniteena walmunfiqeena walmus taghfireena bil ashaar

அன்றி (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், "ஸஹர்" நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர்.

Tafseer

شَهِدَ
சாட்சி கூறினான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَنَّهُۥ
நிச்சயமாக அவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا
தவிர
هُوَ
அவன்
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
وَأُو۟لُوا۟ ٱلْعِلْمِ
இன்னும் கல்விமான்கள்
قَآئِمًۢا بِٱلْقِسْطِۚ
நீதத்தை நிலை நிறுத்துபவன்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَ
அவனைத் தவிர
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْحَكِيمُ
ஞானவான்

Shahidal laahu annahoo laa ilaaha illaa Huwa walmalaaa'ikatu wa ulul 'ilmi qaaa'imam bilqist; laaa ilaaha illaa Huwal 'Azeezul Hakeem

(நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلدِّينَ
மார்க்கம்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
ٱلْإِسْلَٰمُۗ
இஸ்லாம்
وَمَا ٱخْتَلَفَ
மாறுபடவில்லை
ٱلَّذِينَ
எவர்கள்
أُوتُوا۟
கொடுக்கப்பட்டார்கள்
ٱلْكِتَٰبَ
வேதம்
إِلَّا
தவிர
مِنۢ بَعْدِ
பின்னர்
مَا جَآءَهُمُ
அவர்களுக்கு வந்த
ٱلْعِلْمُ
அறிவு
بَغْيًۢا
பொறாமையினால்
بَيْنَهُمْۗ
தங்களுக்கு மத்தியில்
وَمَن
இன்னும் எவர்
يَكْفُرْ
நிராகரிப்பார்
بِـَٔايَٰتِ
வசனங்களை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
سَرِيعُ
விரைவானவன்
ٱلْحِسَابِ
கணக்கெடுப்பதில்

Innad deena 'indal laahil Islaam; wa makhtalafal lazeena ootul Kitaaba illaa mim ba'di maa jaaa'ahumul 'ilmu baghyam bainahum; wa mai yakfur bi Aayaatil laahi fa innal laaha saree'ul hisaab

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் ("இதுதான் உண்மையான வேதம்" என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, (இவ்வாறு) எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.

Tafseer

فَإِنْ حَآجُّوكَ
அவர்கள் உம்முடன் தர்க்கித்தால்
فَقُلْ
கூறுவீராக
أَسْلَمْتُ
பணியவைத்தேன்
وَجْهِىَ
என் முகத்தை
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
وَمَنِ ٱتَّبَعَنِۗ
இன்னும் என்னைப் பின்பற்றியவர்கள்
وَقُل
இன்னும் கூறுவீராக
لِّلَّذِينَ
எவர்களுக்கு
أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப் பட்டார்கள்
وَٱلْأُمِّيِّۦنَ
இன்னும் பாமரர்கள்
ءَأَسْلَمْتُمْۚ
பணிய வைக்கிறீர்களா?
فَإِنْ أَسْلَمُوا۟
அவர்கள் பணியவைத்தால்
فَقَدِ ٱهْتَدَوا۟ۖ
திட்டமாக நேர்வழி அடைவார்கள்
وَّإِن تَوَلَّوْا۟
அவர்கள் திரும்பினால்
فَإِنَّمَا عَلَيْكَ
உம்மீது எல்லாம்
ٱلْبَلَٰغُۗ
தெரிவிப்பதுதான்
وَٱللَّهُ
அல்லாஹ்
بَصِيرٌۢ
உற்று நோக்குபவன்
بِٱلْعِبَادِ
அடியார்களை

Fa in haaajjooka faqul aslamtu wajhiya lillaahi wa manit taba'an; wa qul lillazeena ootul Kitaaba wal ummiyyeena 'a-aslamtum; fa in aslamoo faqadih tadaw wa in tawallaw fa innamaa 'alaikal balaagh; wallaahu baseerum bil 'ibaad

(நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர் களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி "நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கின்றீர்களா?" என்று கேளுங்கள். (அவ்வாறே) அவர்களும் தலை சாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அன்றி அவர்கள் புறக்கணித்துவிட்டால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்முடைய தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.

Tafseer