Skip to main content

يَسْتَبْشِرُونَ
மகிழ்ச்சியடைவார்கள்
بِنِعْمَةٍ
அருட்கொடையைக் கொண்டு
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
وَفَضْلٍ
இன்னும் அருள்
وَأَنَّ ٱللَّهَ
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
أَجْرَ
கூலியை
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்

Yastabshiroona bini'matim minal laahi wa fad linw wa annal laaha laa yudee'u ajral mu'mineen

அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கிவிடவில்லை" என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
ٱسْتَجَابُوا۟
பதிலளித்தார்கள்
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
وَٱلرَّسُولِ
இன்னும் தூதர்
مِنۢ بَعْدِ
இருந்து/பின்னர்
مَآ أَصَابَهُمُ
ஏற்பட்டது/ அவர்களுக்கு
ٱلْقَرْحُۚ
காயம்
لِلَّذِينَ
எவர்களுக்கு
أَحْسَنُوا۟
நல்லறம் புரிந்தார்கள்
مِنْهُمْ
அவர்களில்
وَٱتَّقَوْا۟
இன்னும் அஞ்சினார்கள்
أَجْرٌ عَظِيمٌ
கூலி/மகத்தானது

Allazeenas tajaaboo lil laahi war Rasooli mim ba'di maaa asaabahumulqarh; lillazeena ahsanoo minhum wattaqaw ajrun 'azeem

அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இத்தகையவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
قَالَ
கூறினார்(கள்)
لَهُمُ
அவர்களுக்கு
ٱلنَّاسُ
மக்கள்
إِنَّ
நிச்சயமாக
ٱلنَّاسَ
மக்கள்
قَدْ جَمَعُوا۟
உறுதியாக ஒன்று சேர்த்துள்ளனர்
لَكُمْ
உங்களுக்கு
فَٱخْشَوْهُمْ
ஆகவே பயப்படுங்கள்/ அவர்களைப்
فَزَادَهُمْ
அதிகப்படுத்தியது/ அவர்களுக்கு
إِيمَٰنًا
நம்பிக்கையை
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
حَسْبُنَا
போதுமானவன்/ எங்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
وَنِعْمَ
இன்னும் சிறந்து விட்டான்
ٱلْوَكِيلُ
பொறுப்பாளன்

Allazeena qaala lahumun naasu innan naasa qad jama'oo lakum fakhshawhuin fazaadahum eemaannanwa wa qaaloo hasbunal laahu wa ni'malwakeel

அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள்.

Tafseer

فَٱنقَلَبُوا۟
திரும்பினார்கள்
بِنِعْمَةٍ
அருட்கொடையுடன்
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
وَفَضْلٍ
இன்னும் அருள்
لَّمْ يَمْسَسْهُمْ
அணுகவில்லை/ அவர்களை
سُوٓءٌ
ஒரு தீங்கு
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினார்கள்
رِضْوَٰنَ
விருப்பத்தை
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
وَٱللَّهُ
அல்லாஹ்
ذُو فَضْلٍ
அருளுடையவன்
عَظِيمٍ
மகத்தானது

Fanqalaboo bini'matim minal laahi wa fadlil lam yamsashum sooo'unw wattaba'oo ridwaanal laah; wallaahu zoo fadlin 'azeem

ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவனாக இருக்கின்றான். (ஆகவே பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.)

Tafseer

إِنَّمَا ذَٰلِكُمُ
அவனெல்லாம்
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான் தான்
يُخَوِّفُ
பயமுறுத்துகிறான்
أَوْلِيَآءَهُۥ
தன் நண்பர்களை
فَلَا تَخَافُوهُمْ
ஆகவே பயப்படாதீர்கள்/ அவர்களை
وَخَافُونِ
பயப்படுங்கள்/ என்னை
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
مُّؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக

Innamaa zaalikumush Shaitaanu yukhawwifu awliyaaa'ahoo falaa takhaafoohum wa khaafooni in kuntum mu'mineen

இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.

Tafseer

وَلَا يَحْزُنكَ
கவலைப்படுத்த வேண்டாம்/உம்மை
ٱلَّذِينَ
எவர்கள்
يُسَٰرِعُونَ
விரைகிறார்கள்
فِى ٱلْكُفْرِۚ
நிராகரிப்பில்
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَن يَضُرُّوا۟
அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
شَيْـًٔاۗ يُرِيدُ
எதையும்/நாடுகிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
أَلَّا يَجْعَلَ
ஏற்படுத்தாமல் இருக்க
لَهُمْ
அவர்களுக்கு
حَظًّا
நற்பாக்கியத்தை
فِى ٱلْءَاخِرَةِۖ
மறுமையில்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
عَظِيمٌ
மகத்தானது

Wa laa yahzunkal lazeena yusaari'oona fil Kufr; innahum lai yadurrul laaha shai'aa; yureedul laahu allaa yaj'ala lahum hazzan fil Aakhirati wa lahum 'azaabun 'azeem

(நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச் செய்ய அல்லாஹ் விரும்புகின்றான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அன்றி, அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
ٱشْتَرَوُا۟
வாங்கினார்கள்
ٱلْكُفْرَ
நிராகரிப்பை
بِٱلْإِيمَٰنِ
நம்பிக்கைக்குப் பகரமாக
لَن يَضُرُّوا۟
அறவே தீங்கிழைக்க மாட்டார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
شَيْـًٔا
எதையும்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ
வேதனை
أَلِيمٌ
துன்புறுத்தக்கூடியது

Innal lazeenash tarawul kufra bil eemaani lai yadurrul laaha shai anw wa lahum 'azdaabun aleem

எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்து விடமுடியாது. ஆனால், அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

Tafseer

وَلَا يَحْسَبَنَّ
நிச்சயமாக எண்ணவேண்டாம்
ٱلَّذِينَ
எவர்கள்
كَفَرُوٓا۟
நிராகரித்தார்கள்
أَنَّمَا نُمْلِى
நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
لَهُمْ خَيْرٌ
அவர்களுக்கு/நல்லது
لِّأَنفُسِهِمْۚ
தங்களுக்கு
إِنَّمَا نُمْلِى
நாம் அவகாசமளிப்ப தெல்லாம்
لَهُمْ
அவர்களுக்கு
لِيَزْدَادُوٓا۟
அவர்கள் அதிகரிப்பதற்காக
إِثْمًاۚ
பாவத்தால்
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
عَذَابٌ مُّهِينٌ
வேதனை/ இழிவூட்டக்கூடியது

Wa laa yahsabannal lazeena kafarooo annamaa numlee lahum khairulli anfusihim; innamaa numlee lahum liyazdaadooo ismaa wa lahum 'azaabum muheen

நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப் படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மென்மேலும்) அதிகரிப்பதற்காகவேதான். (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.

Tafseer

مَّا كَانَ
இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيَذَرَ
விட்டுவிடுபவனாக
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களை
عَلَىٰ
மீது
مَآ أَنتُمْ
எது/நீங்கள்
عَلَيْهِ
அதன் மீது
حَتَّىٰ
இறுதியாக
يَمِيزَ
பிரிப்பான்
ٱلْخَبِيثَ
தீயவர்(களை)
مِنَ
இருந்து
ٱلطَّيِّبِۗ
நல்லவர்(கள்)
وَمَا كَانَ
இன்னும் இல்லை
ٱللَّهُ
அல்லாஹ்
لِيُطْلِعَكُمْ
அறிவிப்பவனாக/உங்களுக்கு
عَلَى ٱلْغَيْبِ
மறைவானவற்றை
وَلَٰكِنَّ
எனினும்
ٱللَّهَ
அல்லாஹ்
يَجْتَبِى
தேர்ந்தெடுக்கிறான்
مِن رُّسُلِهِۦ
தன் தூதர்களில்
مَن يَشَآءُۖ
எவரை/நாடுகிறான்
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرُسُلِهِۦۚ
இன்னும் அவனுடைய தூதர்களை
وَإِن تُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொண்டால்
وَتَتَّقُوا۟
இன்னும் அஞ்சினால்
فَلَكُمْ
உங்களுக்கு
أَجْرٌ
கூலி
عَظِيمٌ
மகத்தானது

Maa kaanal laahu liyazaral mu'mineena 'alaa maaa antum 'alaihi hattaa yameezal khabeesa minat taiyib; wa maa kaanal laahu liyutli'akum 'alal ghaibi wa laakinnal laaha yajtabee mir Rusulihii mai yashaaa'u fa aaminoo billaahi wa Rusulih; wa in tu 'minoo wa tattaqoo falakum ajrun 'azeem

(நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். அன்றி மறைவான வற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.

Tafseer

وَلَا يَحْسَبَنَّ
எண்ண வேண்டாம்
ٱلَّذِينَ
எவர்கள்
يَبْخَلُونَ
கஞ்சத்தனம் செய்கிறார்கள்
بِمَآ
எதில்
ءَاتَىٰهُمُ
கொடுத்தான்/அவர்களுக்கு
ٱللَّهُ
அல்லாஹ்
مِن
இருந்து
فَضْلِهِۦ
தன் அருள்
هُوَ
அது
خَيْرًا لَّهُمۖ
நல்லது/அவர்களுக்கு
بَلْ هُوَ
மாறாக/அது
شَرٌّ لَّهُمْۖ
தீமை/அவர்களுக்கு
سَيُطَوَّقُونَ
அரிகண்டமாக மாட்டப்படுவார்கள்
مَا بَخِلُوا۟
எதை/கஞ்சத்தனம் செய்தார்கள்
بِهِۦ
அதை
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
مِيرَٰثُ
வாரிசுரிமை
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமி
وَٱللَّهُ
அல்லாஹ்
بِمَا تَعْمَلُونَ
எதை/செய்கிறீர்கள்
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்

Wa laa yahsabannal lazeena yabkhaloon bimaa aataahumul lahu min fadilhee huwa khairal lahum bal huwa sharrul lahum sayutaw waqoona maa bakhiloo bihee Yawmal Qiyaamah; wa lillaahi meeraasus samaawaati wal ard; wallaahu bimaa ta'maloona Khabeer

எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Tafseer