Wa maa kaana li Nabiyyin ai yaghull; wa mai yaghlul yaati bimaa ghalla Yawmal Qiyaamah; summa tuwaffaa kullu nafsim maa kasabat wa hum laa yuzlamoon
மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டு வர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது.
Afamanit taba'a Ridwaanal laahi kamam baaa'a bisakhatim minal laahi wa maawaahu Jahannam; wa bi'sal maseer
அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவன் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
Hum darajaatun 'indal laah; wallaahu baseerum bimaa ya'maloon
(அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.
Laqad mannal laahu 'alal mu'mineena iz ba'asa feehim Rasoolam min anfusihim yatloo 'alaihim Aayaatihee wa yuzakkeehim wa yu'allimu humul Kitaaba wal Hikmata wa in kaanoo min qablu lafee dalaalim mubeen
அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.
Awa lammaaa asaabatkum museebatun qad asabtum mislaihaa qultum annaa haazaa qul huwa min 'indi anfusikum; innal laaha 'alaa kulli shai'in Qadeer
(நம்பிக்கையாளர்களே! "பத்ரு" போரில்) இதைவிட இருமடங்கு கஷ்டத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்தக் கஷ்டம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான் என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
Wa maa asaabakum yawmal taqal jam'aani fabiiznil laahi wa liya'lamal mu'mineen
இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது.) உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.)
Wa liya'lamal lazeena naafaqoo; wa qeela lahum ta'aalaw qaatiloo fee sabeelil laahi awid fa'oo qaaloo law na'lamu qitaalallat taba'naakum; hum lilkufri yawma'izin aqrabu minhum lil eemaan; yaqooloona bi afwaahihim maa laisa fee quloobihim; wallaahu a'lamu bimaa yaktumoon
(நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு "(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்.
Allazeena qaaloo liikhwaanihim wa qa'adoo law ataa'oonaa maa qutiloo; qul fadra'oo'an anfusikumul mawta in kuntum saadiqeen
அன்றி இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்துகொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் கூறினார்கள். (ஆகவே நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன!) நீங்கள் உங்களையே மரணத்தில் இருந்து தப்பவையுங்கள்!""
Wa laa tahsabannal lazeena qutiloo fee sabeelillaahi amwaata; bal ahyaaa'un 'inda Rabbihim yurzaqoon
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.
Fariheena bimaaa aataa humul laahu min fadlihee wa yastabshiroona billazeena lam yalhaqoo bihim min fadlihee wa yastabshiroona billazeena lam yalhaqoo bihim min khalfihim allaa khawfun 'alaihim wa laa hum yahzanoon
அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்த வர்களாக இருக்கின்றார்கள். தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று (மற்றொரு) மகிழ்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.